அழகான காலை வேளையில் ஒரு பத்தொன்பது வயதுப் பருவ மங்கை, ஒரு இடத்தினை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் கண்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும், பாசத்திற்கு ஏங்கும் வளர்ந்த குழந்தை என்று. அவளின் மனதிற்குள்ளும், “தன்னிடமும் யாராவது இதுபோல் உண்மையான பாசத்தைக் காட்ட மாட்டார்களா?” என்று அங்கே 14 சிறுமிகளுடன் கொஞ்சி விளையாடிக்கொண்டிருக்கும் உறவுகளை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அக்னியை ஆளும் மலரவள் - 2
அக்னியைப் பார்த்ததும் சதாசிவத்திற்கு முகம் எல்லாம் வேர்க்க ஆரம்பித்தது “சார், தெரியாம பண்ணிட்டேன். என்ன விட்டுடுங்க சார்.” என்று கதறினார்.“எவ்வளவு தைரியம் இருந்தா என் அலுவலகத்தில் பொண்ணுங்க மேல கை வெச்சிருப்ப?” என்று பக்கத்தில் இருந்த கம்பியை எடுத்து சதாசிவத்தின் கையில் ஓங்கி அடித்தான்அக்னி.ஒரே அடியில் அவன் கை எலும்புகள் நொறுங்கிவிட்டன.“டேய் துருவா! அவனுக்கு ஒரு வாரத்துக்குச் சாப்பாடு, தண்ணி எதுவும் கொடுக்காம, அவனுக்கான தண்டனையைக் கொடுங்க. அப்பவும் அவன் உயிரோட இருந்தா நம்ம டெவில் கிட்ட அனுப்புங்க. அவன் பார்த்துப்பான்” என்றான். (டெவில், அக்னி வளர்க்கும் ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்ட நாய்).“ஆதி, நீ போய் அந்தப் பெண்ணை அட்மிட் பண்ண மருத்துவமனையில் கூட இருந்து பார்த்துக்க” என்றான்.“சரிங்க பாஸ், நான் பார்த்துக்கிறேன். நீங்க இப்ப கிளம்புங்க. உங்களுக்கு 11 மணிக்கு மீட்டிங் இருக்கு. நானும் மருத்துவமனைக்குப் போய்ட்டு அலுவலகத்துக்கு வந்துடுறேன் பாஸ்” என்று ஆதி அங்கிருந்து கிளம்பினான்.அக்னியும் துருவனும் ...Read More
அக்னியை ஆளும் மலரவள் - 3
மலர் வாங்கிய அடியில் இன்னும் எழுந்திருக்காமல் இருக்க, அனைவரும் அவளை ஏதோ தீண்டத்தகாதவளைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.மகேஷின் கணவரும் மலரைப் பாவமாகப் பார்த்துக்கொண்டிருக்க, மனைவியோ மலரை முறைத்துவிட்டுத் தன் கணவனை அங்கிருந்து இழுத்துக்கொண்டு சென்றாள்.அனைவரும் அங்கிருந்து சென்றவுடன் அவள் அருகில் வந்த பிரதீப், “சாரி, சித்தி, வலிக்குதா?” என்று அவளின் காயத்தைத் தன் பிஞ்சு கரங்களால் தொட்டுப் பார்த்து, “என்னாலதான் உங்களுக்கு அடிபட்டுச்சு,” என்று அவளிடம் கொஞ்சும் மொழியில் பேசிக்கொண்டிருந்தான்.அப்போது உள்ளே இருந்து அவனின் தாய், “பிரதீப், அங்கே இன்னும் என்ன பண்ற? உள்ளே வா,” என்று சத்தம் வந்ததும், பிரதீப் உள்ளே செல்லாமல் மலரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.“பிரதீப், நீ உள்ளே போ. உன்னை கூப்பிடுறா அவ! இங்கே வந்தா நீ என்கிட்ட பேசிட்டு இருக்கிறதை பார்த்து உன்னைத்தான் திட்டுவாங்க,” என்றாள்.“நான் உள்ளே போறேன். நீ ஹாஸ்பிட்டலுக்குப் போ,” என்று பிரதீப் அங்கிருந்து சென்றான்.பிரதீப் அங்கிருந்து சென்றதும், மலர் ...Read More