தண்டட்டி

(0)
  • 42
  • 0
  • 552

கொல்லிமலையின் உச்சியில், மூலிகைக் காற்றும் நீரோடைகளின் சலசலப்பும் நிறைந்த அந்தப் பழைய பாக்குமர வீட்டில், அன்றைய காலை வழக்கத்திற்கு மாறாக அமைதியில் உறைந்திருந்தது. திண்ணையில் அமர்ந்திருந்த சுமங்கலி பாட்டியின் முகத்தில், காதில் மின்னிய தண்டட்டியின் ஒளியில் கடந்த காலத்தின் பெரும் துயரமும், தியாகத்தின் பெருமையும் கலந்திருந்தன.

1

தண்டட்டி - 1

கொல்லிமலையின் உச்சியில், மூலிகைக் காற்றும் நீரோடைகளின் சலசலப்பும் நிறைந்த அந்தப் பழைய பாக்குமர வீட்டில், அன்றைய காலை வழக்கத்திற்கு மாறாக அமைதியில் உறைந்திருந்தது. திண்ணையில் அமர்ந்திருந்த பாட்டியின் முகத்தில், காதில் மின்னிய தண்டட்டியின் ஒளியில் கடந்த காலத்தின் பெரும் துயரமும், தியாகத்தின் பெருமையும் கலந்திருந்தன.கர்ப்பிணியாக இருந்த தன்னைத் தவிக்கவிட்டு, நேதாஜியின் பாதையைப் பின்பற்றி நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த கணவரின் நினைவுகள், அவள் முண்டச்சி வரி கட்ட நிலத்தை விற்ற அந்தப் போராட்டமான காலத்தை அந்த காட்டிலேயே வேலை பார்த்து மீண்டும் முண்டச்சி வரி கட்டி தன் மகளுடன் வரும் வருமானத்தில் ஜீவனம் நடத்தியதும் எப்போதும் கண்முன் நிறுத்தும்.ஆனால், காலம் மாறியது. முண்டச்சி வரி நீங்கியது. பாட்டி நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், மலையின் அமைதியில் அவரது கணவரையும் நினைத்து அந்த நினைவுகளைச் சுமந்து பாட்டியின் வாழ்வு நகர்ந்ததாலும், அவரது மகள் லெட்சுமிக்கு விடிவு கிடைக்கவில்லை. லெட்சுமி, வாழ்க்கையின் வலிகளைத் தாங்கிக் கொண்டவள். ...Read More

2

தண்டட்டி - 2

கொல்லிமலையின் அடர்ந்த காட்டுக்குள் நுழையும் முன், பாரதி ஒரு கணம் திரும்பி வீட்டைப் பார்த்தாள். தன் நாய் குட்டியின் ஞாபகம் அவளை கூர்ந்து கவனிக்க செய்தது. வேய்ந்த அந்தப் பழைய பாக்குமர வீட்டில், காய்ச்சலில் படுத்திருந்த லெட்சுமியும், திண்ணையில் அமர்ந்து கவலையுடன் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த பாட்டியும் தெரித்தனர்.அன்றுவரை பூக்களின் வாசனையிலும், நாய்க்குட்டியின் விளையாட்டிலும் இருந்த அவளது வெகுளித்தனம், அன்றாட உணவின் நிதர்சனச் சுமையால் மெல்ல உடைந்தது.மூங்கில் கூடையைச் சுமந்து, ஈரமான மண்ணில் அவள் காலடி எடுத்து வைத்தாள். பாதை மிகவும் சவாலானது. சில இடங்களில் பாறைகள் வழுக்கின, சில இடங்களில் கால்கள் புதைகின்றன. தாயுடன் செல்லும்போது இருந்த பாதுகாப்பு உணர்வு இப்போது இல்லை. தனியாக இருக்கும் அவளை பயம் அவளைச் சூழ்ந்தது.பாரதிக்குச் சில குறிப்பிட்ட பூக்கள் பூக்கும் இடங்கள் தெரியும். ஆசைப்பட்டு அதிக தூரம் சென்று விடக் கூடாது என்ற தாயின் எச்சரிக்கை நினைவில் இருந்தது. அவள் வேகமாகப் ...Read More