Nerungi Vaa Devathaiye - 13 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நெருங்கி வா தேவதையே - Part 13

Featured Books
Categories
Share

நெருங்கி வா தேவதையே - Part 13

அருண் என்னவோ தன்னுடைய காதலை சொல்லிவிட்டானே தவிர ரஷ்மியின் நிலை பற்றி கவலைப்பட்டான். எல்லோர் முன்னாடியும் சொல்லி இருக்க கூடாதோ என்றெல்லாம் யோசித்தான். ஜோ அதெல்லாம் ஒண்ணுமில்லை மச்சி பாசிட்டிவ் ஆ இரு என்றான். என்னடா எதுவும் பேச மாட்டுற என்றாள் ரஷ்மி. பேசாமல் இன்னும் இறுக்கமாக கட்டி அணைத்தான் ரஷ்மியை ராகவ். ம் போதும்டா நீ லவ் பண்ணினது என்றாள் ரஷ்மி . அவளை மென்மையாக விடுவித்தான். நாளைக்கு பார்க்கலாம் என்றான். ஓகே ராகவ். ராகவால் எதையும் நம்ப முடியவில்லை. தென்றலுக்கு தெரிந்தால் நிச்சயம் பிரச்சனைதான் என நினைத்தான். எதற்காக ரஷ்மி திடீரென்று இந்த முடிவை எடுத்தாள் என்று தெரியவில்லை.ரஷ்மி ரஷ்மி என்று மனம் சொல்லியது. இனி தூங்கினால் போலத்தான் என்றெண்ணி கொண்டான். தென்றலிடம் இருந்து ஃபோன் வந்தது. தூங்கிவிட்டாயா என்றாள் இல்லை சொல்லு. சாதாரண கேள்விகள் ஆனால் இவனால் பதில் சொல்லக்கூட முடியவில்லை. சரி நீ டையர்டாக இருப்பாய் நாளை பேசுகிறேன் என்றாள். சரி தென்றல் என்றான்.

ரஷ்மி அருணுக்கு எப்படி சொன்னால் புரியும் என்று யோசித்து கொண்டிருந்தாள். அருண் மனதை பாதிக்காதவாறு அந்த பதில் இருக்க வேண்டும் என்று நினைத்தாள் . வெளிப்படையாக தான் ராகவை விரும்புவதாக இப்போது சொல்ல முடியாது என்று யோசித்தாள் . இப்போதைக்கு ராகவ் மீதான காதலை ரகசியமாக வைக்க வேண்டும் என்றெண்ணினாள். ரொம்பவும் எளிமையாக காதலை சொல்லிவிட்டாள் ஆனால் தென்றல் சும்மா விடமாட்டாள். சௌமியாவுக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொன்னாள். கங்க்ராட்ஸ் இதை நான் எதிர்பார்க்கவேயில்லை என்றாள் சௌமியா. ராகவ் என்ன சொன்னான். அவன் என்ன பேசுவான்? எப்பவும் போல நாளைக்கு பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டான் என்றாள். ம் இது ஒரு நல்ல ஆரம்பம் என்றாள் சௌமியா. காலேஜில் பார்க்கலாம் என்றாள் ரஷ்மி. சரி ரஷ்மி. ரஷ்மி காதலை சொன்ன நிகழ்வு மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது ராகவ் மனதில். காலேஜ் சீக்கிரம் போய்விட்டான். ரஷ்மி இன்னும் வரவில்லை. இவனுடைய இதய படபடப்பு இன்னும் அதிகரித்தது. கேண்டீன் போய் பார்த்தான். லைப்ரரியில் போய் பார்த்தான். அங்கும் இல்லை.வகுப்புக்கு ஓடி வந்தான். அவள் அங்குமில்லை. ரிகர்சல் செய்யும் அறைக்கு போய் பார்த்தான். அருணும் அவளும் ஏதோ பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தார்கள். இவன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

மாலை கிரிக்கெட் மேட்ச் இருந்தது. ரஷ்மி அதை பார்க்க வந்திருந்தாள் . இவனை பார்த்ததும் என்னை வீட்ல டிராப் பண்ணுறியா என்றாள். சரி ஒரு அரைமணி நேரம் என்றான். அவள் வண்டியில் ஏறிக்கொண்டாள் . என்ன ராகவ் ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் என்றாள். அதெல்லாம் ஒண்ணுமில்லை. எனக்கு ஒரு மாதிரி மகிழ்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது என்றான். எதற்கு வருத்தம் என்றாள். உன்னை உரிமையோடு தொட முடியவில்லையே என்றான். அதெல்லாம் உனக்குத்தான் நான். யாரிடமும் பர்மிஷன் வாங்க வேண்டாம் என்றாள். இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்றான். நீயும் நானும் சேர்ந்து இருக்கிற வரை சாத்தியம் என்றாள். ரஷ்மியை வீட்டில் விட்டான். உள்ளே வாயேன் என்றாள். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது தவிர மியூசிக் கிளாஸ் போகவேண்டும் என்றான். சரி ராகவ். ஃபோன் பண்ணுகிறேன் என்றாள். சரி ரஷ்மி பார்க்கலாம் என்றான். மியூசிக் மாஸ்டர் இவனுக்கு மேலும் அடுத்த லெவல் போவதற்கான வழிகளை சொல்லித்தந்தார். தென்றல் ஃபோன் பண்ணவில்லை. சௌமியாதான் ஃபோன் பண்ணியிருந்தாள். என்னாச்சு ராகவ் ஒண்ணுமே சொல்ல மாட்டேன் என்கிறாயே என்றாள். ரஷ்மி எல்லாம் சொல்லிவிட்டாளா என்றான். ம் எப்போ ட்ரீட் என்றாள் . நிச்சயம் உண்டு ஆனால் கொஞ்சம் டைம் வேணும் என்றான். நிச்சயமா டைம் எடுத்துக்கோ என்றாள் .

தென்றல் காலையிலேயே வீட்டுக்கு வந்துவிட்டாள் . கோவிலுக்கு போயிருந்தேன் என்றாள். இன்னைக்கு நாம வெளியே போகலாமா எங்காவது என்றாள். கொஞ்சம் யோசித்தான். ரொம்ப யோசிக்காதே நானும் நீயும் மட்டும்தான் என்றாள். சரி எங்கே என்றான். அதெல்லாம் நான் முடிவு செய்கிறேன். மதியம் மூவி போகிறோம் என்றாள். ரஷ்மிக்கு மெசேஜ் செய்தான். சரி போவோம் என்று கிளம்பிவிட்டார்கள்.அது ஒரு ஆர்ட் கேலரி ஆக இருந்தது. நீ என்னிடம் இருந்து விலகி விலகி போகிறாய் என்றாள். இதற்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும் ? என்றான். நீ ஒன்றும் சொல்ல வேண்டாம் உன் கண்களே பதில் சொல்கின்றன என்றாள். நீ அனாவசியமாய் கவலைப்படுகிறாய் என்றான். அவனுடைய கைகளை பிடித்து கொண்டாள் . சில பெயிண்டிங் களை வாங்கினாள். அவர்கள் மதியம் பீச் போனார்கள் பிறகு மூவி . அவன் அதிகம் அவள் மேல் கவனம் செலுத்தவில்லை. அவளை எதுவும் சொல்லாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். அவளை பார்த்தால் பரிதாபமாக இருந்தது.

ரஷ்மி இரவு 11 மணி போல ஃபோன் செய்திருந்தாள். எங்கே போனாய் ராகவ்? நான் தவித்து போய்விட்டேன் என்றாள். நான் உன்னைவிட்டு எங்கேயும் போய் விட மாட்டேன் என்றான். தென்றல் கூட போனாயா என்றாள். இவன் அமைதியாக இருந்தான். அவள் போனை துண்டித்தாள்.இவனால் சரியாக தூங்க முடியவில்லை. அலைக்கழிக்கும் காதல் கனவுகளில் மிதந்தான். இது எங்கு போய் முடியுமோ என்றெல்லாம் யோசித்தான். பிரதீபா ரஷ்மிக்கு ஃபோன் பண்ணியிருந்தாள். அவள் ஒரு பாட்டு பாடி அதை அனுப்பி இருந்தாள். நன்றாக இருந்தது. அதை ராகவுக்கு அனுப்பினாள் ரஷ்மி. மறுநாள் காலேஜில் ரஷ்மியை பார்த்தான். என்ன ரஷ்மி கோவமா ? இல்லை உன் மேல் உள்ள ஆசைதான் என்றாள். இனிமேல் நீ தென்றல் கூடவே சுற்று எனக்கென்ன என்றாள். அப்படி சொல்லாதே ரஷ்மி உன் காதலுக்கு நான் தகுதியானவனா என எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன். இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியலை வா கேண்டீன் போவோம் ஏதாவது வாங்கி கொடு என்றாள். அவளை சமாதானப்படுத்துவதற்குள் அவன் உயிர் போய் உயிர் வந்தது.

சாப்பிட்டு கொண்டிருக்கும்போதே தென்றல் அவனை தேடி வந்து விட்டாள். பிரதீபா பாட்டு வீடியோ எனக்கும் அனுப்பு என்றாள். நிச்சயமாக அனுப்புகிறேன் இப்படி உட்கார் என்றான். ஜோ ரஷ்மி பர்த்டே பார்ட்டி போட்டோக்களையும், வீடியோவையும் அனுப்பி இருந்தான். அவைகளை பார்த்து கொண்டிருந்தான் அப்போது அருண் ரஷ்மியை ப்ரபோஸ் செய்திருந்த வீடியோவும் அதில் இருந்தது.ஜோவுக்கு அதை டெலிட் செய்ய சொல்லி மெசேஜ் அனுப்பினாள் ரஷ்மி. அருண் காத்திருப்பதாக மெசேஜ் அனுப்பியிருந்தான். சௌமியா எல்லோரையும் கூப்பிட்டு அனுப்பி இருந்தாள். என்ன விஷயம் என்றால் தி ஈகிள்ஸ் குழுவின் முதல் வெளியூர் நிகழ்ச்சி திருச்சி காலேஜ் ஒன்றில் நடக்க இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ள எல்லோரும் தயார் ஆகும்படி சொன்னாள். இது ஒரு அருமையான வாய்ப்பு யாரும் இதை மிஸ் பண்ண வேண்டாம் என்றாள். சுகன்யாவும் தயார் ஆகும்படி சௌமியா சொன்னாள். சுகன்யாவுக்கான பொறுப்பு ஏற்கனவே ரஷ்மியிடம் விடப்பட்டு இருந்தது. தென்றலால் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அவள் சௌமியாவிடம் இதை தெரிவித்தாள் . ஜோ இதை கவனத்தில் கொண்டான். சௌமியா சுகன்யா எந்த அளவுக்கு தயாராய் இருக்கிறாள் என்பதை ரிப்போர்ட் ஆக தருமாறு ரஷ்மியிடம் கேட்டுகொண்டிருந்தாள்.

ஜோ, ரஷ்மி, அருண், ராகவ் மற்றும் சுகன்யா திருச்சி செல்வதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தனர். இரவு, பகலாக ரிகர்சல் நடைபெற்றது. ராகவ் அருண் விஷயத்தில் கவனமாக இருந்தான். சிறு பிழை கூட அவனுக்கு எதிராக திரும்பிவிடும் என்பதால் கவனமாக இருந்தான். ரஷ்மி ராகவிடம் சாயங்காலம் ஷாப்பிங் போக வேண்டும் கொஞ்சம் உனக்கு டிரஸ் எடுக்க வேண்டும் என்றாள். எனக்கெதுக்கு ஏற்கனவே நிறைய இருக்கு என்றான். வான்னு சொன்னா வரணும் என்றாள். தென்றல் கூப்பிட்டா ஓடி போயிருப்ப என்றாள். ம் சரி சரி போவோம் என்றாள். சில லேடஸ்ட் டிரெண்ட் உள்ள டிரஸ் எடுத்தாள். உனக்கு ஏதாவது எடுத்துக்கொள் என்றான். அது இப்போதான் பர்த்டே டிரஸ் எடுத்தேன் அதனால வேணாம் என்றாள். அருகில் உள்ள ஜூஸ் கடைக்கு போனார்கள். என்னாச்சு அருண் விஷயம் நீ ஒரு முடிவு சொல்லுவே அப்படின்னு அவன் காத்திருக்கான் என்றான். நீ வேற நான் உன்னை லவ் பண்ணுறதையே ரகசியமா வைக்க படாத பாடு படுறேன் இதுல அருண் வேற . சௌமியா மேமுக்கு ஏதாவது டிரஸ் எடுப்போமா ஆமா நானும் நினைச்சேன் என்றான். அப்படியே பிரதீபாவுக்கும் நான் பே பண்ணுகிறேன் என்றான்.

சௌமியாவுக்கு ஒரு சாரியை எடுத்தாள் ரஷ்மி . அப்படியே அவங்களை பார்த்து சாரியை குடுத்துட்டு போகலாமா என்றாள். சரி உன் விருப்பம் என்றான். சௌமியா என்ன புதுசா கல்யாணம் ஆன ஜோடி மாதிரி இருக்கீங்க என்றாள். என்ன மேடம் இப்படி சொல்லிட்டீங்க . சரி சரி இந்தாங்க உங்களுக்காக ரஷ்மியும் நானும் செலக்ட் பண்ண டிரஸ். எனக்கா எதுக்கு திருச்சி புரோகிராம் போறோம்ல அதுக்குத்தான்.ரொம்ப காஸ்ட்லியா இருக்கு என்றாள். அதெல்லாம் ஒண்ணுமில்லை உங்களுக்கு பிடிச்சி இருக்கா . இரு ரஷ்மி நான் கட்டி கொண்டு வந்து காட்டுகிறேன் என்றாள். சூப்பர் ஆக இருக்கீங்க மேம். சரி மேம் பிரதீபாவுக்கும் ஒரு டிரஸ் எடுத்தோம் அதை குடுத்துட்டு வீட்டுக்கு போகணும். சரி லேட் ஆயிடுச்சு பார்த்து போங்க என்றாள். பிரதீபா வீட்டுக்கு போன போது அவள் ஏதோ படித்து கொண்டிருந்தாள். இவர்களை பார்த்ததும் முகம் மலர்ந்தாள். ரஷ்மி அக்கா எனக்காக என்ன வாங்கிட்டு வந்தீங்க என்றாள்.அவளுக்கு டிரஸ் எடுத்ததையும் திருச்சி நிகழ்ச்சி இருப்பதையும் சொன்னாள் ரஷ்மி. நானும் வரவா என்றாள் பிரதீபா. நெக்ஸ்ட் டைம் அழைச்சிட்டு போறோம் என்றாள் ரஷ்மி. இப்போதான் நாங்களே ஃபர்ஸ்ட் டைம் போறோம் என்றான் ராகவ்.