Nerungi Vaa Devathaiye - 24 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நெருங்கி வா தேவதையே - Part 24

Featured Books
Categories
Share

நெருங்கி வா தேவதையே - Part 24

ஹோலி கொண்டாட்டம் களை கட்ட துவங்கியிருந்தது. கலர்களை வீசி எறிந்தும் பிறர் மீது பூசியும் மகிழ்ந்தனர். ரஷ்மி ராகவை தேடினாள். அவன் இந்த நிகழ்வுக்கும் தனக்கும் சம்மந்தமில்லாதது போல ரிகர்சல் அறையில் ஒளிந்து கொண்டிருந்தான். சௌமியா வந்து பார்த்தாள். ரஷ்மி உன்னை தேடிட்டு இருக்கா நீ என்ன பண்ணுற இங்கே தனியா என்றாள். அதற்குள் ரஷ்மியும் அருணும் அங்கே வந்து விட்டனர். இங்கேதான் இருக்கான் என்று அவன் மேல் கலர் பொடியை வாரி இரைத்தனர். ரஷ்மி உன்னை என்ன பண்ணுறேன் பாரு என்று அவளை விரட்டினான் . அவள் ஆள் இல்லாத வகுப்புக்குள் புகுந்து ஒளிந்து கொண்டாள். ராகவ் அவளை ஒவ்வொரு வகுப்பாக தேடினான். அவள் இதயதுடிப்பு எகிறியது. கடைசியாய் அவளை கண்டுபிடித்து விட்டான். அவளை கையை பிடித்து இழுத்து அணைத்தான். அவனுடைய கை அவளுடைய பின்புறத்தை சேர்த்து பிடித்து இருந்தது, டேய் வேணாம் யாராவது பார்த்துற போறாங்க என்றாள். உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க இவ்ளோ அழகையும் பார்த்துட்டே இருப்பேன் என்றா ? கிட்ட வா என்றான். அவள் அவனை தள்ளி விட்டு ஓட முயன்றாள். அவளை இழுத்து பிடித்து அவள் நெஞ்சில் முத்தமிட்டான். போதும்டா என்றாள் சிணுங்கி கொண்டே. உன் வாய்தான் அப்படி சொல்லுது முதல்ல அதை சைலன்ட் பண்ணுவோம் என்று இறுக்கி பிடித்து உதட்டில் முத்தமிட்டான். முத்தம் முடியவும் தென்றல் அங்கே வரவும் சரியாய் இருந்தது, வா தென்றல் என்றாள் ரஷ்மி. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப மோசம் என்று சொல்லிவிட்டு போனாள்.


மதியம் ஏதோ ஸ்பெஷல் ஆக ராகவுக்கு சமைத்து எடுத்து வந்திருந்தாள் ரஷ்மி. அவன் கேண்டீன் அருகே நின்று கொண்டிருந்தான். ரஷ்மி அவனுக்கு ஃபோன் செய்தாள். எங்கே இருக்கே ? உனக்காக சமைத்து எடுத்து வந்திருக்கிறேன் என்றாள். நீதான் ஒண்ணும் தர மாட்டேன் என்கிறாயே என்றான்.டேய் லூசு அதெல்லாம் அப்புறம் இப்போ சாப்பிட வா என்றாள். தென்றல் சுகன்யாவிடம் பேசிக்கொண்டிருந்தாள். எனக்கு ஒரு நாளும் அப்படி ஒரு கிஸ் கொடுத்ததில்லை ராகவ் . அப்படி ஒரு கிஸ் ரஷ்மிக்கு என்றாள் ஆதங்கத்துடன். என்ன ரஷ்மி எங்களுக்கெல்லாம் இல்லையா என்றான் ஜோ. நாளைக்கு கண்டிப்பாக என்றாள். ம் நடக்கட்டும் நடக்கட்டும் என்றான் ஜோ. ரொம்ப நல்லா இருக்கு என்றான் ராகவ். அவள் அவனுக்கு ஊட்டிவிட்டாள். அவனும் அவளுக்கு ஊட்டி விட்டான். விட்டா ஃபர்ஸ்ட் நைட் காலேஜ்லேயே நடத்துவா போல ரஷ்மி என்றாள் சுகன்யா. சௌமியாவுக்கென ஒரு பாக்ஸ் தனியாக எடுத்து வந்திருந்தாள் ரஷ்மி. அதை ராகவ், ரஷ்மி இருவரும் சேர்ந்து போய் கொடுத்தனர். எதுக்கு இதெல்லாம் என்றாள் சௌமியா . நீங்க சரியாவே சாப்பிடுறதில்ல மேம் எங்களுக்கு தெரியும். நல்லா சாப்பிடுங்க என்றாள் ரஷ்மி.

சௌமியா அன்று மாலை எல்லோரையும் அழைத்து ஒரு ஸ்பெஷல் மியூசிக் ஷோ பண்ணப்போகிறோம் ஃபிரண்ட்ஷிப் டேவுக்காக ஆகஸ்ட் மாசம் அதுக்கு ப்ரிப்பேர் பண்ணனும் என்றாள். ஃபங்சன் இங்கேயே அருகில் உள்ள காலேஜ் என்பதால் பூஜாவை சிரமப்படுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று சௌமியா சொன்னாள். கெஸ்ட் ஆக பூஜாவை அழைக்கலாமா என்றான் அருண் . ஓ தாராளமாக என்றாள் சௌமியா. அருண் பூஜாவுக்கு ஃபோன் பண்ணினான். என்ன விஷயம் அருண் இந்நேரத்துக்கு ஃபோன் பண்ணியிருக்கிறாயே என்றாள். கான்செர்ட் விஷயத்தை சொன்னான். நான் நீ கூப்பிடாவிட்டாலும் உன்னை பார்க்க வருவேன் என்றாள் பூஜா. தாங்க்ஸ் பூஜா லவ் யு என்றான்.தென்றல் சுகன்யாவிடம் பேசியதை சுகன்யா ஜோவிடம் சொல்லி வருத்தப்பட்டாள். ஜோ தென்றலிடம் பேசினான் . இதில் பொறாமைப்பட என்ன இருக்கிறது என்னையும்தான் சுகன்யா நிராகரித்து விட்டாள். நான் என்ன சோர்ந்தா போய்விட்டேன் என்றான். சரி சரி நீயும் அட்வைஸ் என்ற பெயரில் என்னை வதைக்காதே என்றாள். ஆனாலும் அந்த முத்தத்தை நீ நேரில் பார்த்திருக்க வேண்டும் என்றாள் தென்றல். அது ஒரு அன்பின் வெளிப்பாடு அவ்வளவுதான் என முடித்தான் ஜோ.

ஒவ்வொரு முறையும் திருச்சிக்கு வருகிறாய் போகிறாய் உனக்கு போரடிக்கவில்லையா என்றாள் பூஜா. நீ என்னை தேடி வந்த காதல் எனக்கு எப்பவும் அதில் விருப்பம் அதிகம்தானே தவிர குறைவில்லை என்றான் அருண். திருச்சியில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்துக்கு போவார்கள் இந்த முறை மலைக்கோட்டை போயிருந்தார்கள்.உச்சி வெயிலில் நிறைய ஜோடிகள் அமர்ந்திருந்தார்கள். எப்படியும் கான்செர்ட் வந்துவிடுவேன் நீ கவலைப்படாதே என்றாள் பூஜா. ஒரு நாள் அங்கு ரஷ்மி வீட்டில் தங்கும்படி வா என்றான் அருண். அது கஷ்டம் நான் வீட்டில் கேட்டு சொல்கிறேன் என்றாள். என்ன மாதிரி தீம் என்று சொன்னாய் ? ஃபிரண்ட்ஷிப் டே ஸ்பெஷல். ஓ அப்போ சூப்பர் ஆக இருக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றாள்.அருண் நீ எனக்காக ரொம்ப மெனக்கெடுகிறாய் நான் உன்னை ரொம்பவும் விரும்புகிறேன் அதுதான் பயமாய் இருக்கிறது என்றாள். நீ பயப்படும்படி ஒன்றும் நடந்து விடாது. மியூசிக் ஆல்பம் பற்றி சௌமியா மேம் கிட்டே பேசினாயா அது இப்போ வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். கொஞ்சம் தி ஈகிள்ஸ் குழு செட்டில் ஆகட்டும் என்று சொல்லிவிட்டார்கள். ஓ எனக்கு நீ இல்லாமல் போரடிக்கிறது atleast மியூசிக் ஆல்பம் தயாரித்தால் அப்போது உன்னை அடிக்கடி பார்க்க முடியும் என்றாள். நான் மறுபடியும் ராகவிடம் பேசுகிறேன் அவன் சொன்னால் சௌமியா மேம் கேட்பார்கள் என்றான். அப்போ கிளம்பட்டுமா என்றான். அவளை மென்மையாக அணைத்து உதட்டில் முத்தமிட்டான். சரி பார்த்து போய் வா ஜாக்கிரதை என்றாள்.

ராகவும் ரஷ்மியும் நாம் பூஜாவை கெஸ்ட் ஆக கூப்பிடுவதுதான் முறை என்று பேசிக்கொண்டார்கள். நீயே ஃபோன் பண்ணி பேசு ரஷ்மி என்று சொன்னான் ராகவ். நீ இங்கேயே இரு என்று பூஜாவுக்கு ஃபோன் செய்தாள். விஷயம் அருண் சொல்லியிருப்பான் இருந்தாலும் மறுபடி சொல்லுகிறேன் நீ ஃபிரண்ட்ஷிப் டே கான்செர்ட் அவசியம் வர வேண்டும் என்றாள் ரஷ்மி . அவசியம் வருகிறேன் உங்களை எல்லாம் பார்த்து ரொம்ப நாளாகிறது என்றாள். சரி பூஜா நீ என் வீட்டில்தான் தங்க வேண்டும் அது என்னுடைய அன்பு கட்டளை என்றாள் ரஷ்மி. கண்டிப்பாக எப்பவுமே உன் அன்பை நினைவில் வைத்திருப்பேன் என்றாள் பூஜா. கான்செர்ட் நிகழ்வுக்காக புதிய பாடல் ஒன்றை தயார் செய்தான் அருண், கொஞ்சம் டைம் எடுத்து கொண்டு தயார் செய்தான் அருண். பாட்டு எல்லோருக்கும் பிடித்திருந்தது. சௌமியாவும் நன்றாக இருக்கிறதென்று சொன்னாள்.ஜோவும் அருணும் அந்த பாட்டை சேர்ந்து பாட முடிவு எடுத்தார்கள். வேறு ஒரு புதிய உலகத்தை அந்த பாட்டை பாடும்போது அவர்கள் அடைந்தார்கள். கிருஷ்ணனும், பிரதீபாவும் கூட அந்த பாட்டை பாராட்டி மெசேஜ் பண்ணியிருந்தார்கள்.

ராகவ் ரஷ்மி இருவரும் மியூசிக் மாஸ்டரை சந்தித்து அவரையும் கான்செர்ட் பார்க்க அழைக்கலாம் என முடிவெடுத்தனர். அவர் இவர்களை வரவேற்றார், இன்னும் அவரிடம் மியூசிக் கற்றுக்கொண்டுதான் இருந்தான் ராகவ். என்ன ராகவ் உன்னுடைய பாட்டு ஒன்றும் இல்லையா என்றார். இருக்கிறது ஆனால் அருண் எழுதிய பாட்டு சிறப்பாக இருந்ததால் அதையே பிரதான பாட்டாக்கிவிட்டோம் என்றான். ராகவ் சில சந்தேகங்களை கேட்டான். அவரும் அதற்குரிய விளக்கங்களை கொடுத்தார். என்ன ரஷ்மி நீங்கள் ரெண்டு பேருமே ஒரு மியூசிக் பாண்ட் துவங்கலாமே என்றார். கிண்டல் பண்ணாதீர்கள் மாஸ்டர் என்றாள். நிஜமாகத்தான் சொல்கிறேன் நீங்கள் படித்து முடித்ததும் ஒரு மியூசிக் பாண்ட் ஸ்டார்ட் செய்து நிறைய பேருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் அதுதான் என ஆசை என்றார். நிச்சயமாக என்றாள் ரஷ்மி. நீங்கள் எங்கள் மீது அபார நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் மாஸ்டர் என்றான் ராகவ். ம் அது என்னவோ உண்மைதான் என்றார். அவரும் கான்செர்ட் பார்க்க வருவதாய் சொன்னார். ரஷ்மி, ராகவ் விடை பெற்றுக்கொண்டனர்.


கான்செர்ட் நடத்த 10 நாட்களே இருந்தன. ஒரு புறம் படிப்பு மறுபுறம் மியூசிக் என நாட்கள் வேகமாய் நகர்ந்தது. ரஷ்மியும் இவனும் சேர்ந்து பாடும் பாடல் ஒன்றும் சேர்க்கப்பட்டது. பூஜா ஒரு நாள் முன்னதாகவே வந்து விட்டாள். இந்த முறை கான்செர்ட் பார்க்க பிரதீபாவும் வருவாள் என கிருஷ்ணன் சொல்லியிருந்தார்.ரஷ்மி வீட்டில் தங்கியிருந்தாள் பூஜா. என்ன ரஷ்மி உன் லவ் எப்படி போகிறது இன்னும் அதே மாதிரித்தானா இல்லை நெருங்கி விட்டானா ராகவ் என்றாள் பூஜா. அவன் சேட்டை இப்போது அதிகமாகிவிட்டது. கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டேன் என்கிறான் என்றாள் ரஷ்மி. இன்று என்னோடு காலேஜ் வருகிறாயா என்றாள் ரஷ்மி. அருண் வந்து அழைத்து போகிறேன் என்று சொல்லி இருக்கிறான். சரி சரி நான் ஒன்றும் சொல்லவில்லை. அருண் சொன்ன மாதிரி காலை 8 மணிக்கெல்லாம் வந்து விட்டான். வா பூஜா போகலாம் என்றான். என்ன அருண் புயல் வேகத்தில் போகிறாய் போல என்றாள் ரஷ்மி. அதெல்லாம் ஒண்ணுமில்லை. அவள் என் கூட இருக்கும் நேரமே கொஞ்சம் அதுதான் என்றான். சரி போய்விட்டு வா பூஜா .

பூஜாவை எல்லோருமே வரவேற்றார்கள். அவளும் கொஞ்ச நேரம் இருந்து ரிகர்சல் கேட்டாள் . பிறகு சௌமியாவை போய் பார்த்தாள் . நீ பாடாதது ஒன்றுதான் குறை என்றாள் சௌமியா. அதெல்லாம் நான் பாடினால் என்ன அருண் பாடினால் என்ன எல்லோருக்கும் மகிழ்ச்சிதான் என்றாள். அருண் சொன்னான் உங்களுடைய விவாகரத்து பற்றி எனக்கு ரொம்ப வருத்தங்கள் என்றாள். சில சமயம் ஒருவரை அதிகம் நம்பும்போது சில வேண்டாதவைகளும் நடக்கும் என்றாள் சௌமியா. நீ நேரம் கிடைக்கும்போது என் வீட்டுக்கு வா என்றாள். அருணுக்கு என்னுடைய புதிய வீடு தெரியும் அவனையும் கூட்டிக்கொண்டு வா என்றாள். சரி மேம் என்றாள் பூஜா.