Yayum Yayum - 29 in Tamil Love Stories by Nithyan books and stories PDF | யாயும் யாயும் - 29

The Author
Featured Books
  • ओ मेरे हमसफर - 12

    (रिया अपनी बहन प्रिया को उसका प्रेम—कुणाल—देने के लिए त्याग...

  • Chetak: The King's Shadow - 1

    अरावली की पहाड़ियों पर वह सुबह कुछ अलग थी। हलकी गुलाबी धूप ध...

  • त्रिशा... - 8

    "अच्छा????" मैनें उसे देखकर मुस्कुराते हुए कहा। "हां तो अब ब...

  • Kurbaan Hua - Chapter 42

    खोई हुई संजना और लवली के खयालसंजना के अचानक गायब हो जाने से...

  • श्री गुरु नानक देव जी - 7

    इस यात्रा का पहला पड़ाव उन्होंने सैदपुर, जिसे अब ऐमनाबाद कहा...

Categories
Share

யாயும் யாயும் - 29

29. சாமானியப் பெண்

அதுவொரு வியாழனின் பின் மதிய நேரம். கல்லூரியின் கேண்டீனில் மாணவர்களின் கூச்சல் சப்தமும், “ஒரு முட்டை பப்ஸ், ஒரு டீ’ என்ற ஆர்டர் சப்தமும் மாணவர்களின் நெரிசலும், அங்கிருந்த வெக்கையும் ஒரு கசகசப்பை உருவாக்கியிருந்தது. சிலர் சிரித்துக் கொண்டிருந்தனர். சிலர் அங்கே உட்கார்ந்து தங்களது ரெக்கார்ட் நோட்டுகளை எழுதிக் கொண்டிருந்தார்கள். ஒரு காதல் ஜோடி அங்கிருந்த ப்ளாஸ்டிக் சேரில் தங்களது பெயர்களைப் பொறித்து அதற்கு ஆர்ட்டின் வரைந்து கொண்டிருந்தனர்.

ஆனால், மாயாவின் கண்களுக்கு இவை எதுவுமே தெரியவில்லை. அன்றும் அவள் வழக்கம் போலத் தான் கல்லூரிக்கு கிளம்பி வந்தாள். வரும் போதே இன்று மோகனை பார்க்கக் கூடாது என்று தான் நினைத்து வந்தாள். ஆனால், இன்று கல்லூரிக்குள் வந்ததுமே இன்றைய டைம் டேபிளில் ஏதோவொரு மாற்றம் நிகழ்ந்தது. அதனால், இன்று சிவில் டிபார்ட்மெண்ட்டிற்கும் மெக்கானிக்கலுக்கும் ஒன்றாக இன்ஜினியரிங் கிராஃபிக்ஸ் வகுப்பு நடக்கும் என்று செய்தி வந்தது.

இந்தச் செய்தியால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஒருவேளை மோகன் இருந்தாலும், அல்லது அவன் இல்லாமல் போனாலும் தனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை என அவள் நினைத்தாள். ஆனால், வகுப்பறைக்குள் நுழைந்ததுமே முதலில் அவள் அவனைத் தான் தேடினாள். அவனை அவள் பார்க்க வேண்டுமென விரும்பவில்லை. ஆனால், அவன் அன்று வராதது ஏனோ அவனைப் பற்றியே யோசிக்க வைத்தது.

இன்ஜினியரிங் கிராஃபிக்ஸ் வகுப்பு முடிந்ததும். கீதாவும், மாயாவும் டிராமா ரிகர்சலுக்கு சென்றனர். அங்கேயும் மோகனைக் காணவில்லை. “மோகன், எங்கே?” என்று டெஸ்லாவிடம் கேட்டாள்.

அவன் எங்கே போனானென்று தனக்கும் தெரியவில்லை என டெஸ்லா சொன்னான்.அவனது கைப்பேசியை அவன் அணைத்து வைத்திருப்பதாகவும், அன்று மாலை அவனைப் பார்க்க அவனது வீட்டிற்கு தாங்கள் செல்லவிருப்பதாகவும் சொன்னான். அன்று மாலை அவனைப் பார்க்கும் போது மாயா அவனைத் தேடிக்கொண்டிருப்பதை மிக நிச்சயமாக அவனிடம் சொல்ல வேண்டுமன டெஸ்லா நினைத்துக்கொண்டான். 

இப்படி அனைவரும் மோகன் எங்கே போனான்? என்று பேசிக்கொண்டிருந்த அதே வேளையில், மோகன் இந்திரசேனையினரையிடம் பேசிவிட்டு தனது அறைக்கு வந்து தனது படுக்கையில் அவனது தந்தையின் வாக்மேனில் பாடலைக் கேட்டபடி தூங்கிக்கொண்டிருந்தான்.

அன்றைய ரிகர்சலில் மாயாவால் சரியாக நடிக்க முடியவில்லை. அவன் தான் அவள் பின்னே சுற்றிச் சுற்றி வந்தான். அவன் தான் அவளுக்காக ஹாக்கி அணியில் இணைந்தான். அவன் தான் அவளை தேவதை என்று முகத்துக்கு நேரே சொன்னான். அவன் தான் ஏதேதோ செய்து அந்த டிராமா அணியில் சேர்த்து விட்டான். இத்தனையும் செய்து விட்டு, இப்போது அவன் எங்கே போனான்? என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அந்த டிராமா அறையில் அவன் நின்று அவளையே ரசித்துக் கொண்டிருந்த வெற்றிடத்தையே அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். டையோனைஸஸ் போல திடீரென அவன் அந்த அறைக்குள் தோன்றிவிடமாட்டானா? என்று அவள் விரும்பினாள். ஆனால், அது போல அற்புதங்களைச் செய்ய அவன் ஒன்றும் கடவுள் இல்லையே என்று அவளுக்குத் தோன்றியது.

“மாயா, நாளைக்கு எந்தக் கலர் ட்ரெஸ் டீ போடப் போற? சொல்லு நானும் அதே கலர் போட்டுட்டு வரேன்” என்று சொன்னாள் கீதா.

“இன்னும் முடிவு பண்ணல டீ. நான் வீட்டுக்குப் போயிட்டு டெக்ஸ்ட் பண்றேன்” என்றாள் மாயா.

“ஏன்டி, உனக்கு தான் புது ட்ரெஸ் வாங்கி இருப்பாங்கல்ல? அது என்ன கலர்னு உனக்கு தெரியாதா?”

“உண்மைலேயே தெரியாது டீ. அப்பா ஏதோ வாங்கி வைச்சிருக்காரு. ஆனா, அது என்னக் கலர்னு கூடப் பாக்கல “ என்றாள்.

“ஏன் டீ, இப்படி எதுலயுமே இன்ட்ரஸ்ட் இல்லாம இருக்க? இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, அங்கே டெஸ்லாவும் மகேந்திரனும் வந்து இணைந்து கொண்டனர்.

“ஏன்? என்ன ஆச்சு? எதைப் பத்தி பேசிட்டு இருக்கீங்க?’” என்று கேட்டான் டெஸ்லா.

“ஒன்னுமில்லை. நாளைக்கு இவளுக்கு பர்த்டே. ஆனா, அதைப் பத்தி ஒரு ஆர்வமே இல்லாம இருக்கறா. அதான் கேட்டுட்டு இருந்தேன்” என்றாள் கீதா.

“ஓ… நாளைக்கு உனக்கு பர்த்டேவா. அப்போ நாளைக்கு எங்களுக்கு எங்க கூட்டிட்டுப் போயி ட்ரீட் வைக்கப் போறன்னு சொல்லு. நாளைக்கு எனக்கு லஞ்ச் செய்ய வேண்டாம்னு என் அம்மாகிட்ட சொல்லணும்” என்று சொன்னான் மகேந்திரன்.

“இல்லை. மகி நாளைக்கு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நானும் அப்பாவும் ஒரு இடத்துக்கு போறோம். அதனால, நாளைக்கு முடியாது, இன்னொரு நாள் லஞ்ச் போலாம்” என்றாள் மாயா.

“சரி விடு, வாங்க கொஞ்ச நேரம் ப்ரேக் போயிட்டு வரலாம்” என்றான் டெஸ்லா.

பின்னர், மூவரும் கேண்டீனிற்கு சென்றனர். அங்கே நடந்த எந்தவொரு சந்தடிகளிலும் கவனம் செலுத்தாமல் மாயா எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது, “மாயா … மாயா…” என்ற ஒரு சத்தம் அடி ஆழத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்தது.

“ஏய் மாயா, என்ன ஆச்சு டீ? எதைப் பத்தி இப்படி யோசிச்சுட்டு இருக்க?” என்றாள் கீதா.

“ஒன்னுமில்லை. டெஸ்லாவும் மகேந்திரனும் எங்க?” என்றாள் மாயா.

“அவங்க ரெண்டு பேரும் டீ வாங்கப் போயிருக்காங்க. நீ பேச்சை மாத்தாத உனக்கு என்ன ஆச்சு? ஏன் எதையோ யோசிச்சிட்டே இருக்க?”

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை டீ".

“மாயா, எனக்கு உன்னை சின்ன வயசுல இருந்து தெரியும். நீ, எதைப் பத்தி யோசிக்கிறேன்னு கூட வா எனக்குத் தெரியாது? நேத்து நீ மோகனோட நம்பரைக் கேட்கும் போதே நினைச்சேன், உனக்கும் அவன் மேல ஏதோ இன்டரஸ்ட் இருக்குதுன்னு. இன்னைக்கு அவன் வரலைன்னு நீ அப்செட் ஆயிட்ட கரெக்ட்டா?” என்றாள்.

மாயா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். கீதா சொல்வது எல்லாமே உண்மை தான். மோகனுக்குத் தன் மேல் ஈர்ப்பு உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், தனக்கு மோகன் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது இப்போது வரை தனக்கே தெரியாது என நினைத்துக் கொண்டாள்.

தன் வீட்டில் தனது கடமைகளைப் பற்றி நினைக்கின்ற போது மாயாவுக்கு வேறு எதுவும் முக்கியமில்லை. ஆனால், கல்லூரிக்கு வந்து வகுப்புக்குச் சென்று, நண்பர்களுடன் பேசி, ஒரு சாமானியப் பெண் போல இருக்கையில் ஒரு சாமானியப் பெண்ணிற்கு வரக் கூடிய ஆசைகளும் அவளுக்கு வருகிறது. அவளை ஒரு சாமானிய் பெண்ணாக உணர வைப்பதில் மோகன் மிக முக்கியமானவன்.

அன்று காலை எழுந்ததும் அவளது தந்தை முத்துக்குமரன் அவளது பிறந்த நாளுக்கான புதுத்துணிகளை எடுத்து வந்து காட்டினார். எப்போதும், அவளது அனைத்து பிறந்த நாளிற்கும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பவர் முத்துக்குமரன். ஆனால், இன்று அந்த மகிழ்ச்சியில் ஒரு மெல்லியக் கவலை இழையோடி இருந்தது. நாளையுடன் மாயாவிற்கு இருபது வயது முடிகிறது. ஜீயூஸ் இன மக்களின் வழக்கப்படி அவளுடைய இந்தப் பிறந்த நாளில் தான் அவள் ஜீயூஸின் படையில் சேர்வதா இல்லை இந்தப் போர்களில் இருந்து விலகி விடுவதா என்று முடிவெடுக்க வேண்டும். இது அவளுக்கு மிக முக்கியமானதொரு கட்டம். அவள் ஏற்கனவே அதற்கான தேர்வுகளை எழுதி அந்தப் பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாள். ஒரு முறை அவள் ஜீயூஸ் படையில் இணைந்து விட்டால், பின்னர் ஒரு போதும் அதிலிருந்து விலக முடியாது. அதுவொரு ஒரு வழிச் சாலை.

முத்துக்குமரனுக்கு அவனது மனைவி இறந்த சில மாதங்களுக்கு அவளது மரணத்திற்கு காரணமான ஒவ்வொரு இந்திர சேனையினைரையும் பிடித்து அவர்களே தன்னைக் கொல்லும்படி கெஞ்ச வைக்குமளவுக்கு அவர்களுக்கு வலியைக் காட்ட நினைத்தான்.

பின்னர், மாயா வளர வளர அவனுக்கு பழிவாங்குதலை விட தனது மகளை வளர்ப்பது தான் முக்கியம் எனத் தோன்றியது. அவன் அதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தான். ஆனால், முத்துக்குமரனிடம் இருந்த மொத்த பழிவாங்கும் உணர்வும் மாயாவுக்கு சென்று விட்டது. முத்துக்குமரனுக்கு தன் மகள் இந்தப் போரில் கலந்து கொள்ளாமல் சாதாரண வாழ்வை வாழ வேண்டுமென்பது தான் ஆசை. ஆனால், தன் தாயைக் கொன்றவர்களை நிச்சயமாக பழி வாங்க வேண்டுமென மிக உறுதியாக இருந்தாள். அதன் பின்னர், ஜீயூஸ் இன மக்களின் நன்மைக்காகவும் இந்தப் போரில் தான் கலந்து கொள்வது மிக முக்கியமென அவள் உணர்ந்திருந்தாள். மகளின் விருப்பத்திற்கு முத்துக்குமரன் தடையாக இருக்கவில்லை.

அவளது பிறந்த நாளில் தான் அவள் ஜியூஸ் படையில் இணையப் போகிற சடங்குகள் நடக்கும். அதைப் பற்றி அவளிடம் காலையில் பேச வேண்டாம் என முத்துக்குமரன் நினைத்தார். அதனால், அவளைக் கல்லூரியில் இறக்கி விட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டார்.

கீதா கேட்ட கேள்விக்கு மாயா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த போது, அந்த மௌனத்தை உடைப்பது போல திடீரென மகேந்திரன், “சர்ப்ரைஸ்” என்று கத்திக்கொண்டு அவர்கள் முன்பு கேக் பெட்டியை வைத்தான்.

கீதா, ‘மாயா மனதில் என்ன இருக்கிறது? என்பதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். இப்போது அவளது இந்தச் சிறிய பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளலாம்’ என முடிவு செய்தாள்.

அவர்கள் மாயாவைச் சுற்றி நின்று, ‘ஹேப்பி பர்த்டே’ பாட, அவள் கேக்கை வெட்டினாள். பின் அந்தக் கேக்கை கீதாவிற்கு ஊட்டி விட்டு பின் டெஸ்லாவிற்கும் மகேந்திரனுக்கும் சிறு சிறு துண்டுகளை வெட்டிக் கொடுத்து விட்டு முகத்தில் போலியான ஒரு புன் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு அங்கு நின்றாள்.

அப்போது அவளது கைப்பேசி ஒலித்தது. முத்துக்குமான் அழைத்தார். சுற்று விலகி நின்று கைப்பேசியை எடுத்தவள்,

“சொல்லுப்பா” என்றாள்.

“தலைவிகிட்ட இருந்து மெசேஜ் வந்திருக்கு. நாளைக்கு எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணவான்னு கேட்கிறாங்க. நான் என்னம்மா சொல்லட்டும்?” என்று கேட்டார்.

“சரின்னு சொல்லிடுங்கப்பா.” என்றாள்.