A light in the darkness in Tamil Love Stories by Thakshila Dinesh books and stories PDF | இருளில் ஒரு ஒளி

Featured Books
Categories
Share

இருளில் ஒரு ஒளி

அத்தியாயம் - 01

சென்னையில் மிகப்பெரிய திருமணம் மண்டபம் அது. அந்த மண்டபத்தின் அலங்காரமே அவர்களின் செல்வ செழிப்பை பற்றி சொல்லியது. அந்த மண்டபத்தில் மணமகள் அறையில் தயாராகிக் கொண்டிருந்தாள்  ஹன்சிதா. இந்த திருமணத்தில் அவளுக்கு எதிர்பார்ப்பு என எதுவும் இல்லை அதற்காக பிடிக்காத திருமணம் 

எனவும் கூற முடியாது. அவளைப் பொறுத்த வரையில் இது ஒரு அரேஞ்ச் மேரேஜ் தன் தந்தை என்ன செய்தாலும் தன் நன்மைக்கே என எண்ணி இந்த திருமணத்திற்கு சம்மதித்தாள்அவள் மணமகள் அறையில் முழு அலங்காரத்துடன் தேவதை போல் அழகாக தயாராகி இருக்க அந்த அறைக்கு வந்த அவளது தாய் அபிராமி ஹன்ஷீ ரொம்ப அழகா இருக்கடி என் கண்ணே பட்டுடும் போல இருக்கு என அவளுக்கு திருஷ்டி கழித்தார். சரி சரி ஐயர் கூப்பிடுறார் முகூர்த்ததுக்கு நேரம் ஆகுது எனக் கூறி மணவறையில் அமர வைத்தார். இவ்வளவு நேரம் அவள் உடம்பில் இல்லாத நடுக்கம் இப்பொழுது அவள் உடம்பில் தோன்றியது. அதை கவனித்தவாறே அவள் அருகில் அமர்ந்து இருந்தான் கருடன். வெள்ளை வேஷ்டி சட்டையில் கம்பீரமாக இருந்தவன் மனதளவில் தன்னவளின் கலக்கம் கண்டு உடைந்து போனான் ஆனால் அதை எதையுமே முகத்தில் காட்டாமல் சாதாரணமாக அமர்ந்து இருந்தான்அந்த மணவறையின் அருகில் நின்று கொண்டிருந்தார் ஹன்ஷிதாவின் தந்தை நரசிம்மன். அவரது மனதில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் அவற்றை  முகத்தில் காட்டாமல் கம்பீரமாக நின்றிருந்தார். அந்நேரம் அய்யர் தாலியை எடுத்து கருடனிடம் நீட்ட அதை வாங்காமல் நரசிம்மனை பார்த்தவன் ஐயா நீங்க  தாலி எடுத்து கொடுத்து தான் என் கல்யாணம் நடக்கணும் அதனால நீங்க எடுத்து கொடுங்க என கூறவும் அவரும் இன்முகமாக தாலியை எடுத்துக் கொடுக்க அதை ஹன்ஷிதாவின் கழுத்தில் அணிவித்து அவளை தன்னுடைய சரிபாதியாக்கிக் கொண்டான் கருடன். அந்நேரம் அவள் விழிகளில் இருந்து வழிந்த இரண்டு சொட்டு கண்ணீர் அவன் கைகளில் பட்டு தெறிக்க அதை பார்த்தவன் அவள் காதருகில் குனிந்து அவளுக்கு மட்டும் கேட்குமாறு அழாத ஹன்ஷி எல்லாம் சீக்கிரம் சரியாகிடும் உன்னோட எல்லா வலிக்கும் மருந்தா நான் எப்பவும் கூட இருப்பேன் எனக் கூறி அவள் பிறை  நெற்றியில் குங்குமத்தை இட்டான் அவளது அன்பு கணவன்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள ஒரு பிரதான வீதியில் ஒருவனை அடி பொளந்து கொண்டு இருந்தான் ராவணன் என்று அழைக்கப்படும் ராவணேஸ்வரன். அவன் ஒருவனை உயிர் போகும் அளவிற்கு அடிக்க அவன் அடிப்பதை படம் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தனர் அவன் நண்பர்கள். அதில் ஒருவன் ஒரு படி மேலே  போய் அவனைச் சியர் அப் பண்ணிக் கொண்டிருந்தான். அந்நேரம் அங்கு போலீஸ் வர அது எதையுமே கண்டு கொள்ளாமல் அவனை அடித்துக் கொண்டு இருந்த ராவணனை தனியே இழுத்த வந்தனர் அந்த போலீஸ் அதிகாரிகள். அடிவாங்கி முகம் முழுவதும் ரத்தம் வழிந்து இருந்தவனை ஆம்புலன்ஸில் அனுப்பிவிட்டு இவனையும் இவன் நண்பர்களையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து சென்றனர் ஒரு மணி நேரம் கூட முடிந்திருக்காது, அதற்குள் அவனை வெளியே எடுக்க வந்திருந்தார் அவனது வக்கீல் சங்கரன்.

கருடன் ஹன்ஷிதாவின் திருமணம் நல்லபடியாக முடிந்து அனைவரும் ஹன்சிதாவின் வீட்டிற்கு வர மண மக்களை ஆராத்தி எடுத்து வரவேற்றனர். திருமணத்துக்கு பின்னரான சடங்குகள் முடிந்தபின் வந்திருந்தவர்களுடன் கடமைக்கு சில பேசிக் கொண்டிருந்த ஹன்சிதாவின் அருகே வந்த அபிராமி ரூம்ல போய் ரெஸ்ட் எடுமா எனக் கூறி அவளை அவளை  அனுப்பி வைத்தார்.

அபிராமி சமையலறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அந்நேரம் அங்கு வந்த அபிராமியின் உறவுக்கார பெண் ஒருவர் அபிராமியிடம் வந்து அபிராமி உன் பொண்ணுக்கு எதுக்கு இவ்வளவு அவசரமா அதுவும் உங்க வீட்ல வேலை பாக்குற ஒரு வேலைக்காரனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்க என கேட்க அவரைப் பார்த்து முறைத்தவர் அக்கா கருடன் ஒன்னும் வேலைக்காரன் கிடையாது அப்படி சொல்லாதீங்க நம்ம ஹன்ஷிக்கு அவன் தான் சரியா இருப்பான்னு  தோணுச்சு அதான் கல்யாணம் பண்ணி வச்சுட்டோம் என்றார் அபிராமி. அது இல்ல அபி ஏன் இவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ணனும் கொஞ்சம் பொறுமையா பண்ணி இருக்கலாமே நீங்க இவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ணதுக்கு வேற ஏதாவது காரணம் இருக்கும்னு எல்லாரும் பேசிக்கிறாங்க என்றார் அந்த பெண்மணி.

அக்கா கண்டவங்க எல்லாம் ஏதாவது பேசுவாங்க அதுக்கு நாங்க பதில் சொல்ல முடியுமா கருடன சின்ன வயசுல இருந்து எங்களுக்கு தெரியும். கருடன் எங்களுக்கு மாப்பிள்ளையா வந்தா நல்லா இருக்கும்னு அவர் சொன்னாரு எனக்கும் அது சரின்னு தோணுச்சு அவகிட்ட கேட்டோம். அவளும் சரின்னு சொல்லிட்டா கல்யாணம் பண்ணி வச்சுட்டோம் இதுல என்ன இருக்கு என்றார் அபிராமி. அந்த பெண் ஏதோ கேட்க போக நேரம் நரசிம்மர் அவரை அழைக்க அங்கிருந்து சென்று விட்டார் அபிராமி.

ஹன்சிதா அவளின் அறைக்கு செல்ல அவள் பின்னாலே அந்த அறைக்கு சென்றாள் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவை பார்த்ததும் ஹன்ஷிதா அவளை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள் ஹன்ஷி அழாத  எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்.

கருடன் உன்ன....  சாரி மாமா உன்ன நல்லா பார்த்து பாரு நடந்தது எல்லாத்தையும் மறந்துட்டு மாமாவோட ஹேப்பியா வாழ பாரு என ஐஸ்வர்யா கூற சரி எனும் விதமாய் தலையசைத்தாள் ஹன்சிதா. அந்நேரம் ஐஸ்வர்யாவின் தொலைபேசி அலற அதிலிருந்து என்னை பார்த்தவள் ஒரு   புன்முறுவலுடன் அதை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டாள். அவள் சென்ற பின் அங்கிருந்த கண்ணாடி தன் பிம்பத்தை பார்த்த அன்ஷிதா அவளின் வயிற்றை தடவி பார்த்து எல்லாம் உனக்காக மட்டும் தான் பாப்பா என்றாள்