நவீனை பார்த்து பேச விரும்பும் பிரேம் அவன் இருக்கும் இடத்தை அறிய முயற்சி செய்கிறான். அபிஷேக் பிரேமுக்கு ஃபோன் செய்து எப்படியாவது நவீனை விட்டுவிடும் படியும் இனிமேல் அவன் தீபா வழிக்கே வரமாட்டான் என்றும் கூறுகிறான். குமரகுருவிடம் பேசுமாறு கேட்டுக்கொள்கிறான். இவன் தயங்கியவாறே குமரகுருவிற்கு ஃபோன் செய்தான். அவர்கள் சுபாவை கடத்தி மிரட்டியிருக்கிறார்கள் என்னை அவர்களை சும்மா விட சொல்கிறாயா என்றார். அவனை நான் விட்டாலும் போலீஸ் சும்மா விடமாட்டார்கள் அதற்கான ஏற்பாட்டையும் செய்து விட்டேன் என்றார். சிறிது நேரம் பேசாமல் இருந்தவர் அவனை சும்மா விட வேண்டும் என்றால் நீ என் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறாயா அவனை விட்டு விடுகிறேன் என்றார். இவன் மனதில் ஒரு நிமிடம் சௌமியா வந்து போனாள். வேண்டாம் சார் தெரிந்தே அந்த பாவத்தை செய்யாதீர்கள் என்றான். எது பாவம் என பெண் வாழ்க்கைதான் எனக்கு முக்கியம் யோசித்து சொல் நான் தீபாவிடமும் பேசுகிறேன் என்றார். இவனுக்கு தலையில் இடி இறங்கியது போல ஆயிற்று தன்னால் எப்படி தனக்கென காத்திருக்கும் சௌமியாவை ஏமாற்ற முடியும் என்று அவனுக்கு புரியவில்லை. நவீன் உயிரை காப்பாற்ற வேறு வழி ஏதும் தென்படவில்லை. அபிஷேக் மறுபடி ஃபோன் செய்தான். நீ எவ்வளவு சுயநலக்காரன் கடைசியில் நீயே தீபாவை திருமணம் செய்து கொள்ள போகிறாயா என்றான். நான் அப்படி எதுவும் சொல்லவில்லை வாக்கு கொடுக்கவும் இல்லை என்றான் பிரேம். கூட இருந்தே குழி பறிக்கும் துரோகி நீ என்றான் அபிஷேக்.குமரகுரு நினைத்ததை சாதிக்க எந்த எல்லைக்கும் போவார். இந்த விஷயத்தை தீபா எவ்வாறு எதிர்கொள்வாள் என்று சந்தேகம் எழுந்தது.சுபாவிடம் இந்த விஷயத்தை சொன்ன போது அவளும் அதிர்ந்து போனாள். நீ ஒத்துக்கொள்ளாதே என்றாள். சௌமியாவின் நிலை ரொம்ப மோசமாகிவிடும் என்றாள். சௌமியாவுக்கு இது தெரிய வேண்டாம் என்றான்.
ரஞ்சனி ஃபோன் பண்ணி அக்கா உங்களை கல்யாணம் செய்ய சம்மதித்து விட்டாள் என்றாள். இதை கேட்டவனுக்கு உலகமே இருண்டு விட்டது போல தோன்றியது. குமரகுரு லைனில் வந்தார். உன் சம்மதம்தான் எனக்கு தேவை இல்லையென்றால் நவீனை இந்த உலகத்தை விட்டு அனுப்புவதை தவிர வேறு வழியில்லை என்றார். என்னால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை நான் சௌமியாவிடம் பேச வேண்டும் என்றான். பேசு நிதானமாக முடிவெடு என்றார். நான் உன்னை கட்டாயப்படுத்தவில்லை. வேறு யாரும் எனக்கு உன்னை போல நம்பிக்கையானவர்கள் எனக்கு கிடைக்க மாட்டார்கள் என்றார். நடுங்கும் விரல்களால் சௌமியாவுக்கு ஃபோன் செய்தான். அவள் உடனே எடுத்து பேசினாள். என்ன பிரேம் உன் ஃபோன் பிஸி ஆகவே இருக்கிறது என்றாள். ஒரு முக்கியமான விஷயம் என்றான். சொல்லு பிரேம் நடந்ததை சொன்னான். நீ ஏன் இப்படி இருக்கிறாய் பிரேம் நான் ஒருத்தி இருப்பதையே நிற்ற மறந்து விட்டாயா நீ ஊருக்கு வந்து விடு என்றாள். அவன் தயங்கினான். உனக்கும் இதற்க்கும் என்ன சம்பந்தம் நீ ஏன் உன் வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டும் கூடவே என் வாழ்க்கையையும் நாசம் செய்ய வேண்டும் என்றாள் . அப்படி இல்லை சௌமியா . உன் விருப்பம் போல செய் ஆனால் இதுவே நீ என்னிடம் பேசும் கடைசி முறை என்றாள்.
பிரேம் தவித்து போனான். தீபாவிடம் மறுபடி பேச அவள் வீட்டுக்கு போனான். அக்கா எங்கே என்றான் ரஞ்சனியிடம். மாடியில் இருக்கிறாள் போய் பேசுங்கள் என்றாள் . மாடியில் ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள் தீபா. வாங்க மாப்பிள்ளை சார் என்றாள். தீபா பிளீஸ் நான் எதுவும் செய்யவில்லை என்றாள். நீங்க எதுவும் செய்ய முடியாதுன்னு எனக்கு தெரியும் ஆனா நான் ஒண்ணு செய்ய முடியும் எப்படியாவது நவீனை காப்பாத்துங்க என்று காலில் விழுந்தாள் . இவன் சங்கடத்துடன் விலகி நின்றான். நீ போய் என் காலில் விழலாமா என்றான். என்னால் முடியவில்லை. நீங்க லேட் பண்ணுற ஒவ்வொரு நொடியும் நவீன் சித்ரவதை அனுபவிச்சுட்டு இருப்பான். சரி இப்போ நான் என்ன செய்யணும்னு நீயே சொல்லு என்றான். என்னை ஏத்துக்கோங்க என்றாள் தீபா கண்ணீர் மல்க.நான் சௌமியாவுக்கு என்ன பதில் சொல்லுவேன் என்றான். நான் அவங்ககிட்ட பேசுறேன் என்றாள்.
மறுநாள் காலையில் சௌமியா இவன் வீட்டுக்கே வந்து விட்டாள். நடக்கிறது நடக்கட்டும் நீ அந்த தீபாவையே கல்யாணம் பண்ணிக்கொள் என்னை மறந்து வீடு என்றாள். சௌமியா நானே உன் கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன் அவள் சின்ன பொண்ணு அவளின் எதிர்காலமும் உன் கையில்தான் இருக்கிறது என்றாள் . குமரகுரு ஏன் இப்படி செய்தார் என்று புரியவில்லை.தீபாவுக்கு ஃபோன் செய்தான். நீ என்ன நினைக்கிறாயோ எனக்கு தெரியாது இப்போதைக்கு நவீன் உயிர் காப்பாற்றப்படவேண்டும் என்பதற்காக நம்முடைய கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன் என்றான்.ரொம்ப தாங்க்ஸ் என்றாள் தீபா . உடனே ஃபோன் வைத்தும் விட்டாள். சௌமியா எதுவும் பேசாமல் சுபா அறைக்குள் சென்று விட்டாள்.
இன்னும் ஒரு வாரத்தில் வந்து விடுவேன் என்று குமரகுரு மெசேஜ் பண்ணியிருந்தார் பிரேமுக்கு . நவீனை விட்டு விட்டதாகவும் அவன் எங்கோ வெளிநாடு போய் விட்டதாகவும் சொன்னார். பிரேம் தன் விதியை எண்ணியவாறு கவலையுடன் நாட்களை கடத்தினான்.சௌமியா மறுபடி பேசவில்லை.நவீன் ஃபோன் செய்திருந்தான். என்னால் இதை ஒத்துக்கொள்ளவே முடியாது இருந்தாலும் நீங்கள் என் உயிரை காப்பாற்றி இருக்கிறீர்கள் தாங்க்ஸ் என்றான். நான் உன் வாழ்வை கெடுக்க நினைக்கவில்லை என்றான் பிரேம். அதுதான் எல்லாம் முடிந்து விட்டதே தீபாவே சம்மதம் தெரிவித்து விட்டாள் பிறகென்ன என்றான் விரக்தியுடன்.இவனுக்கு மேலும் துன்பமாயிற்று. குமரகுரு ஃபோன் செய்து அவனையும் சுபாவையும் அவருடைய பங்களாவுக்கு வந்து விடுமாறு சொன்னார். சுபா வர மறுத்து விட்டாள். இக்கட்டான சூழ்நிலையில் எல்லோரும் என்னை கைவிட்டால் எப்படி என்றான். நீ போ பிரேம் எல்லாம் நல்லதுக்குத்தான் என்றாள் சுபா. நான் அடிக்கடி வந்து உன்னை பார்த்துக்கொள்கிறேன் என்றாள்.
ஒருபுறம் சௌமியா நினைவுகள் இவனை வாட்டி எடுத்தன . மறுபுறம் எப்படி தீபாவுடன் வாழ போகிறோம் என்கிற கவலையும் இருந்தது. தீபா வீட்டுக்கு போன போது ரஞ்சனி மட்டுமே இவனுக்கு ஆறுதலாக இருந்தாள். நீங்க உள்ளே வாங்க என்றாள். இவனுக்கு யாரிடம் எதை சொல்வதென்று புரியவில்லை. தீபா வந்து அவனுக்கு அறைகளை சுட்டி காட்டினாள் . இங்கே வசதிக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. இனி நான் உங்களுடன்தான் என்றாள். அவள் பேசுவதற்கும் உடல் மொழிக்கும் சம்பந்தமே இல்லை. இவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு போனான். குமரகுரு நாளைக்கு மறு நாள் வருகிறார் என்று ரஞ்சனி சொன்னாள். இவன் இவனுடைய அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டு வர ஊருக்கு போக தயாரானான். அவனுடைய அப்பா நீ சௌமியாவுக்கு செஞ்சது பச்சை துரோகம். நாங்க யாரும் உன் கல்யாணத்துக்கு வர மாட்டோம் என்றார். அவன் தம்பி கூட சரியாக பேசவில்லை. அவன் அம்மா மட்டும் அவனுக்கு ஆறுதலாக நாலு வார்த்தை பேசினாள். இனி நடக்க இருக்கிறத மட்டும் பாரு அந்த பெண்ணை படிக்க வை சந்தோஷமா இருங்க என்றாள். அவள் அவனை ஆசீர்வதித்தாள்.
குமரகுரு ஃபோன் பண்ணியிருந்தார். பிரேம் நீ நாளையில் இருந்து ஆபீஸ் வந்துவிடு என்றார். நான் உன்னை நல்ல நிலையில் வைத்து பார்க்க ஆசைப்படுகிறேன் என்றார். அப்புறம் உங்கள் ஹனிமூன் பிளான் என்ன என்பதையும் முடிவு பண்ணி சொல் என்றார். ரஞ்சனியை ஸ்கூல் டிராப் செய்ய வேறு ஒருவரை நியமித்தார்கள்.நாம கொஞ்சம் வெளியே போகலாமா என்றாள் தீபா. சரி போகலாம் . எப்போதும் நவீனுடன் இருக்கும் ரெஸ்டாரண்ட் போகலாம் என்றாள். இவன் மறுப்பேதும் சொல்லவில்லை. அவளே ஆர்டர் செய்தாள். கடையில் இருந்த அவளுடைய நண்பர்களுக்கு இவனை அறிமுகம் செய்தாள். இவர்களுடைய வயது வித்தியாசம்
பெரிதாக யாரும் எடுத்து கொள்ளவில்லை. சௌமியாவிடம் இருந்து ஃபோன் வந்தது அடுத்த வாரம் எனக்கு கல்யாணம் என்றாள். நீ அவசியம் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஃபோன் வைத்தாள் . இவனுக்கும் தீபாவே ஆர்டர் செய்தாள். நான் மறுபடியும் காலேஜ் போக விரும்புகிறேன் உங்களுக்கு ஓகே வா பிரேம் என்றாள். நிச்சயமா போயிட்டு வா . நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன் என்றான்.
எனக்கு ஹனிமூன் எல்லாம் போக வேண்டாம் கொஞ்சம் படிக்க வேண்டும் என்றாள். இறுதி எக்ஸாம் எழுத வேண்டும் என்றாள். நான் சாரிடம் பேசுகிறேன் என்றான். மறுநாள் ஆபீஸ் போயிருந்தான். எல்லோரும் இவனை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இவனுக்கு வந்த வாழ்வை பாரேன் சின்ன பொண்ணு பணக்கார வாழ்க்கை எடுத்த உடனே முதலாளி என்று முணுமுணுத்தார்கள். இவன் அதை பொருட்படுத்த வில்லை. இவனுடைய அறைக்கு வந்தான். குமரகுரு கூப்பிட்டார். என் பெண்ணுக்கு ஏன் உன்னை செலக்ட் செய்தேன் என தெரியுமா ? அவளுக்கு உன்னால்தான் எதிர்காலம் இருக்கிறது தவிர நான் உன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும் அதிகம் என்றார். நீ அவளை எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறாய்?அவள் இறுதி ஆண்டு எக்ஸாம் முடிந்ததும் .. தீபா மேல் படிப்பு படிக்க விருப்பபடுகிறாள் என்றான். அது உன் விருப்பம் உன்னுடைய வாழ்க்கை என்றார். சில பிசினஸ் விஷயங்களை பேசினார் பிறகு விடை பெற்றுக்கொண்டான்.
அப்பா என்ன சொன்னார் என்றாள் தீபா . இனி நம்முடைய வாழ்க்கையை நாமே வாழ வேண்டியதுதான் என்றான். இரவு குளிர் வாட்டி எடுத்தது.இங்கே எல்லா வசதியும் அதிகம் தான் என்றாள் தீபா. அபிஷேக் பிரேமை சந்திக்க விரும்புவதாக சொன்னான். தீபா வேண்டாம் அவரால் உங்களுக்கு ஆபத்துதான் வரும் என்றாள். பரவாயில்லை நான் போய் பார்க்கிறேன் அவனும் பாதிக்கபட்டவன் தானே என்றான். பிரேம் இப்போதும் தன்னை பழைய பிரேமாகவே கருதினான். பணக்கார வீட்டு பிரேமாக கருதவில்லை. அபிஷேக் சாய்னா இருவரும் இவனை வரவேற்றார்கள் . என்ன பிரேம் அதிர்ஷ்டம் பயங்கரமானது என்பதை உணர்கிறாயா என்றான் அபிஷேக். நான் இப்பவும் எப்பவும் ஒரே மாதிரிதான். நவீன் எப்படி இருக்கிறான் அபிஷேக் அவன் மெடிசின் முடிக்க படாதபாடு பட்டு கொண்டிருக்கிறான். இன்னும் அவன் தீபாவை மறக்கவில்லை . நீ என்ன நினைக்கிறாய் நாங்கள் இந்த ஊரை விட்டு போகிறோம் . உன்னை ஒருமுறை பார்க்க நினைத்தோம் என்றான். அந்த வீடும் எங்களுக்கு அமையவில்லை வாழ்க்கையும் அமையவில்லை . நீயாவது தீபா கூட சந்தோஷமாக இரு அது போதும் எங்களுக்கு. பிரேம் விடை பெற்றுக்கொண்டான்.