Quotes by Shakthi Sky in Bitesapp read free

Shakthi Sky

Shakthi Sky

@shakthisky108659


யாரோ அவன்...
என் சோகங்களில்
தோள்கொடுக்கும் நண்பனானவன்.
யாரோ அவன்...
அன்பைப் பொழிவதில்
தந்தையுமானவன்.
யாரோ அவன்...
என்னை அணைக்கும்
ஒவ்வொரு நொடியும்
என் பாதுகாவலனானவன்.
யாரோ அவன்...
எந்த நிலையிலும்
என்னை விட்டுக் கொடுக்காத
என் துணையானவன்.
யாரோ அவன்...
என்னுடன் சண்டையிடும்
நேரங்களில்
என் எதிரியானவன்.
யாரோ அவன்...
சமாதானம் செய்வதில்
என் மனதை வசப்படுத்தும்
மந்திரக்காரனானவன்.
யாரோ அவன்...
என் கனவுகளுக்கு
பாதை அமைத்தவனானவன்.
யாரோ அவன்...
சேட்டை செய்வதில்
என் குழந்தையானவன்.
யாரோ அவன்...
என்னைப் பொறாமைப்பட வைப்பதில்
குறும்புக்காரனானவன்.
யாரோ அவன்...
என் அன்பில்
உயிராய் கலந்தவனானவன்.
யாரோ அவன்...
என் காதலுக்கு
அவன் மட்டுமே
உகந்தவனானவன்.

Read More