Nerungi Vaa Devathaiye - 31 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நெருங்கி வா தேவதையே - Part 31

Featured Books
Categories
Share

நெருங்கி வா தேவதையே - Part 31

தீபாவளி அன்று மதியம் 12 மணி போல கிருஷ்ணனும் பிரதீபாவும் சௌமியா வீட்டுக்கு வந்தார்கள். சௌமியா அவர்களை வரவேற்றாள். பிரதீபா புதிய உடையில் நேர்த்தியாகவும் அழகாகவும் இருந்தாள். பிறகு என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறதே என்று சொல்லிக்கொண்டாள் . இருங்க ஸ்வீட்ஸ் எடுத்துட்டு வரேன் என்று உள்ளே போனாள். அதுக்கெல்லாம் என்ன அவசரம் ராகவ் அண்ணா ரஷ்மி அக்கா எங்கே என்றாள் பிரதீபா. அவர்கள் அவர்களுடைய மியூசிக் மாஸ்டரை பார்க்க போயிருக்கிறார்கள் . சரி நான் அவர்களுக்கு ஃபோன் பண்ணி பார்க்கிறேன் என்றாள் பிரதீபா. வேண்டாம் என்று கிருஷ்ணன் தடுப்பதற்குள் ஃபோன் செய்து விட்டாள். எங்கே இருக்கீங்க அண்ணா இங்கே சௌமியா ஆண்ட்டி வீட்டுக்கு நானும் அப்பாவும் வந்திருக்கோம் உடனே வாங்க என்றாள் . சரி வருகிறோம் என்றான் ராகவ்.

அருணுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பூஜா வீட்டில் தீபாவளி . பூஜா வீட்டினர் எந்த வித்தியாசமும் பார்க்கவில்லை. ஒரு வேளை சொல்லி இருப்பாளோ பூஜா என்றெண்ணிக்கொண்டான். பூஜா வந்து போய் குளித்து விட்டு வா கோவிலுக்கு போகலாம் அப்பா ரெடி ஆயிட்டார் என்றாள். அடுத்த அரை மணியில் தயார் ஆனான். என்னவோ அவன் மனம் லேசாக இருந்தது. ஜோ அப்போது ஃபோன் பண்ணினான் . என்னடா புது மாப்பிள்ளை எங்களையெல்லாம் மறந்துட்டு ஒரேடியா அங்கே போய் செட்டில் ஆயிட்டயா என்றான். அதெல்லாம் ஒண்ணுமில்லை நாங்க கோவிலுக்கு வந்திருக்கிறோம் பிறகு கூப்பிடுகிறேன் என்றான். பூஜா யாரு ஃபோன் ல என்றாள். ஜோ தான் போனில் பேசினான் என்றான். வாழ்த்துக்கள் சொன்னான் என்று சொல்லி சமாளித்தான். பூஜா அவளுடைய அப்பா அம்மா ஆகியோருடன் கோவிலை சுற்றி வந்து சாமி கும்பிட்டான். தம்பி உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்றார். பூஜா நீ போய் சாமிக்கு விளக்கு ஏத்து. தம்பி கூட கொஞ்சம் பேசிட்டு வரேன் என்றார். என்ன தம்பி எதுவுமே தெரியாத மாதிரி முழிக்குறீங்க என்றார். நீங்க வாரா வாரம் என் பெண்ணை பார்க்க வருவதும் போவதும் எனக்கு தெரியும். ஆனா இது படிக்கிற வயசு . அதுலதான் கவனத்தை செலுத்தனும் என்றார். சாரி அங்கிள் என்றான். பூஜா என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா. கொஞ்சம் ரெண்டு வருஷம் போகட்டும் பார்க்கலாம் என்றார். அதுவரை கொஞ்சம் விலகியே இருங்க என்று சொன்னார். மதியம் பூஜா வீட்டில் சாப்பிட்டுவிட்டு கிளம்பினான். பூஜா வெளியே வரவில்லை. அவள் அழுது கொண்டிருக்கிற மாதிரி பட்டது. நான் பார்த்துக்கிறேன் தம்பி நீங்க பத்திரமா போயிட்டு வாங்க என்றார் பூஜா அப்பா .

ராகவும்,ரஷ்மியும் மதியம் 1 30 அளவில் சௌமியா வீட்டுக்கு வந்தனர். ஹாய் பிரதீபா எப்படி இருக்கிறாய் சூப்பர் டிரஸ் என பாராட்டினான் ராகவ். ரஷ்மி அக்கா எங்கே என்னுடைய ஸ்வீட் என்றாள் பிரதீபா. சாக்லேட் பாக்ஸ் ஒன்றை நீட்டினாள். தாங்க்ஸ் ரஷ்மி அக்கா என்றாள் பிரதீபா. கிருஷ்ணன், ராகவ், ரஷ்மி, சௌமியா எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டனர். நன்றாக இருந்தது சாப்பாடு என்று ரஷ்மியும், பிரதீபாவும் சொன்னார் கள். கிருஷ்ணன் ஒரு ஸ்வீட் நியூஸ் சொல்ல இருப்பதாக சொன்னார். தான் ஒரு மியூசிக் ஆல்பம் தயாரிக்க இருப்பதாக சொன்னார். அது ஒரு லவ் ஸ்டோரி என்று சொன்னார். லிரிக்ஸ் பிரதீபா தான் எழுதுகிறாள். டைரக்டர் இன்னும் முடிவு செய்யவில்லை. சௌமியாதான் கிரியேட்டிவ் ஹெட் என்றார். ஓ என்று வாயை பிளந்தாள் சௌமியா. இதெல்லாம் கஷ்டமான காரியம் என்றாள் சௌமியா. ஏன் முடியாது ரிஸ்க் நான் எடுக்கிறேன். நீ நடிக்கிறாயா ராகவ் ஜோடி வேறு யாருமல்ல ரஷ்மிதான் என்றார். இதை கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது ஆனால் வீட்டில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றாள் ரஷ்மி. எதற்கும் நீங்கள் இருவரும் உங்கள் வீட்டில் அனுமதி கேட்டு பாருங்கள் என்றார் கிருஷ்ணன். பிரதீபா நீங்கள் ஹீரோயின் ஆக நடியுங்கள் அக்கா சூப்பர் ஆக இருக்கும என்றாள். கிருஷ்ணனும் பிரதீபாவும் விடை பெற்றுக்கொண்டனர். சௌமியா மேலும் சில விஷயங்களை சொன்னாள். ரஷ்மியும், ராகவும் இப்போதுதான் படிக்கிறார்கள். நான் தி ஈகிள்ஸ் குழு மெம்பர்களிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்றாள்.

மாலை 4 மணிக்கு ஜோ வந்தான் சௌமியா வீட்டுக்கு . என்னப்பா தீபாவளி முடிந்து பட்டாசு கொண்டு வந்திருக்கிறாய் என்றாள் சௌமியா. ராகவ் ரஷ்மி டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்கள் இங்கேயேதான் இருக்கிறார்களா என்றான் ஜோ.ஆமாம் மதியம் வந்தோம் என்றான். ம் கிருஷ்ணன் சார் என்ன சொன்னார் மேம்.மியூசிக் ஆல்பம் பற்றி சொன்னார். ராகவ் ரஷ்மி நடிக்காவிட்டால் என்ன அருண் பூஜா நடிப்பார்கள் மேம் என்றான். அவர்கள் வீட்டில் இதை ஒத்துக்கொள்ளுவார்களா என்றாள் சௌமியா. அதை பற்றி கவலைப்படாதீர்கள். அதெல்லாம் நான் பர்மிஷன் வாங்கி தருகிறேன் என்றான். எங்காவது வெளியே போகலாமா என்றான் ஜோ. நீங்கள் மூணு பேரும் போய் வாருங்கள் என்றாள் சௌமியா. அதெல்லாம் முடியாது நீங்களும் வர வேண்டும் ஐஸ் கிரீம் பார்லர் போகலாம் என்றான் ஜோ. நல்ல தெளிவாய்
இருக்கிறாய் போல இன்று என்றான் ராகவ். அருணுக்கும், பூஜாவுக்கும் ஃபோன் போட்டு மியூசிக் ஆல்பம் பற்றி சொன்னான் ஜோ. இருவரும் மகிழ்ந்தனர்.

ஐஸ்கிரீம் பார்லர் ராகவ் ரஷ்மிக்கு பிடித்த இடம்தான். ஏற்கனவே அவர்கள் வந்திருந்த இடம்தான். எல்லோருடைய விருப்பத்தை கேட்டு ஆர்டர் செய்தான் ஜோ.
சுகன்யாவையும் , தென்றலையும் கூப்பிட்டிருக்கலாம் என்று சொல்லிக்கொண்டான். அப்புறம் லிரிக்ஸ் யார் எழுதுகிறார்கள் பிரதீபா என்ன பிரதீபா வா அப்போ சந்தேகம்தான் என அப்படி சொல்கிறாய், அவள் ஒரு சிறிய பெண் அவளால் எப்படி முதிர்ச்சியாக எழுத முடியும் என்றான் ஜோ. அவள் திறமைசாலி. நிச்சயம் அவளுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றான் ராகவ். என்னவோ பண்ணுங்கள் குழந்தைகள் ரைம்ஸ் மாதிரி ஆகாமல் இருந்தால் சரி என்றான் ஜோ. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றாள் சௌமியா. நாளைக்கு காலையில் எல்லோரையும் மியூசிக் சென்டர் வர சொல் ஜோ . நாம் பேசி முடிவு செய்வோம் மியூசிக் ஆல்பத்தில் நடிப்பதா வேண்டாமா என்று. சரி மேம் நான் சுகன்யாவையும் , தென்றலையும் வர சொல்லிவிடுகிறேன். நான் அருணிடம் பேசுகிறேன் என்றாள் சௌமியா.


அருண் கலங்கி போய் நின்றான். கண்ணீர் அவன் விழித்திரையை மறைத்தது. பூஜா ஃபோன் எடுக்கவில்லை. தான் கொஞ்சம் அதிக உரிமை எடுத்துக்கொண்டோமோ என்று எண்ணினான். பூஜாவே சிறிது நேரத்தில் பேசினாள். நீ ஒன்றும் கவலைப்படாதே எல்லாம் சரி ஆகிவிடும். கொஞ்ச நாளைக்கு நீ திருச்சி வர வேண்டாம் என்றாள் . சரி பூஜா ஜோ மியூசிக் ஆல்பம் பற்றி சொன்னானா ம் சொன்னான் இப்போ இருக்கிற நிலைமையில் ஒன்றும் சொல்ல முடியாது. கொஞ்ச நாள் போகட்டும் அப்பாவிடம் பேசுகிறேன் என்றாள். லவ் யு அருண் மிஸ் யு என்றாள். மறுநாள் காலை 8 மணிக்கு எல்லோரும் ஆஜர் ஆகி இருந்தார்கள். தென்றல், சுகன்யா இருவர்க்கும் விருப்பமில்லை என்பது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது. ஸ்ருதி அமைதியாக இருந்தாள். ஜோ , அருண் இருவரும் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். ஆனால் பூஜா நடிப்பதாக இருந்தால் மட்டுமே தான் நடிப்பதாக அருண் சொன்னான். ரஷ்மி, ராகவ் என்று பாடுவார்கள் என்று முடிவானது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் பூஜாவின் சம்மதத்தை பொறுத்தது என்று சௌமியா சொன்னாள்.

அருண் சௌமியாவிடம் பூஜா வீட்டில் நடந்ததை சொல்லி வருத்தப்பட்டான். நீ கொஞ்சம் ஓவர் தான் என்று சிரித்தாள் சௌமியா. ம் அதுதான் எனக்கும் கவலையாக இருக்கிறது என்றான் அருண். நான் பூஜாவிடம் பேசுகிறேன் என்றாள் சௌமியா. பூஜாவுக்கு ஃபோன் செய்த போது எடுக்கவில்லை. பிறகு இரவு 7 மணி போல பேசினாள். ஆல்பம் பற்றி இப்போது என்னால் எதுவும் சொல்ல முடியாது மேம். நீங்கள் வேண்டுமானால் என் அப்பாவிடம் பேசி பாருங்க என்றாள் பூஜா. சரி பூஜா நீ எப்படி இருக்கிறாய் தீபாவளி அப்போவே பேச வேண்டும் என நினைத்தேன் என்றாள் சௌமியா . அருண் எல்லாமே சொல்லி இருப்பான் என நினைக்கிறேன். என்னால் அருணைத்தவிர வேறு யாரையும் நினைக்க கூட முடியாது என்றாள். சரி பூஜா ஏதாவது பாசிட்டிவ் ஆ நடந்தா உடனே என்னை கூப்பிடு என்றாள்.

என்ன ரஷ்மி நாம் நடித்தால்தான் என்ன அதெல்லாம் வேண்டாம் ராகவ் நடிக்கவெல்லாம் கொஞ்சம் மெச்சூரிட்டி தேவை இப்போது அதற்குரிய பக்குவம் உனக்கோ எனக்கோ இல்லை. அருண், பூஜா இருவரும்தான் அதற்கு பொருத்தமானவர்கள். ஜோ எப்படியாவது சமாளித்து விடுவான். நாம் பயிற்சி எடுத்துக்கொண்டு நடித்தால்தான் என்ன என்றான். உனக்கு அவ்வளவு ஆர்வமிருந்தால் போய் நடி என்றாள். என்ன இதற்க்கு போய் கோவித்துக் கொள்கிறாய். கோவம் எல்லாம் இல்லை. வேண்டாம் என்றால் விட்டு விடு திரும்ப அதையே சொல்லி வெறுப்பேத்தாதே என்றாள் . சரி நான் போகிறேன் என்றான். நாம் பிரதீபாவுக்காகவாவது ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றான். அவள் இவனை அணைத்துக்கொண்டாள். நமக்கும் பூஜா வீட்டில் நடந்தது போல நடக்கக்கூடாது என எண்ணுகிறேன் . அதனால்தான் சொல்லுகிறேன் குறைந்த பட்சம் உன்னை பார்த்து கொண்டிருந்தால் கூட போதும் அதுவும் இல்லாமல் போனால் என்னால் வாழவே முடியாது என்றாள். சரி ரஷ்மி என் மீது நீ வைத்திருக்கும் காதலை உணர முடிகிறது என்னால்.அப்போது சௌமியாவிடம் இருந்து ஃபோன் வந்தது. ராகவ் நீ வீணாக ரஷ்மியை கட்டாயப்படுத்த வேண்டாம் . எல்லாவற்றுக்கும் மாற்று உண்டு என்றாள் சௌமியா. அருண் காலேஜ் வராமல் சோகமாகவே சுற்றி வந்தான். ஜோ அவனை தேடி அலைந்தான்.