Nerungi Vaa Devathaiye - 33 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நெருங்கி வா தேவதையே - Part 33

Featured Books
Categories
Share

நெருங்கி வா தேவதையே - Part 33

பூஜா அப்பாவிடம் கிருஷ்ணன் தன்னை அறிமுகபடுத்திக்கொண்டார். இதுக்காக நீங்க இவ்வளவு தூரம் வரணுமா. இப்போதான் அருணுக்கு அட்வைஸ் பண்ணி அனுப்பி வைத்தேன். எனக்கு சௌமியா மேம் மேல நிறைய நம்பிக்கை இருக்கு இருந்தாலும் எனக்கு ஒரு வாரம் டைம் குடுங்க பூஜா காலேஜ் ஸ்டாஃப்ஸ் கொஞ்சம் பெரு இருக்காங்க அவங்ககிட்டயும் பேசிட்டு சொல்லறேன், பூஜாவை என் பொண்ணு மாதிரி பார்த்துப்பேன் நீங்க பயப்பட வேண்டாம் என்றார் கிருஷ்ணன். சிறிது நேரத்தில் டீ யும் ஸ்நாக்ஸ்ம் பூஜாவே கொண்டு வந்து கொடுத்தாள் . இருங்க டின்னர் சாப்பிட்டு விட்டு போகலாம் என்றார் பூஜா அப்பா. அதெல்லாம் பரவாயில்லை, நாங்கள் கிளம்புகிறோம் நீங்கள் எங்கள் வீட்டுக்கு அவசியம் வர வேண்டும் என்றார் கிருஷ்ணன். வீட்டை விட்டு வெளியே வந்ததும் அருணுக்கு ஃபோன் செய்தாள் சௌமியா . விஷயத்தை சொன்னாள். ரொம்ப தாங்க்ஸ் மேம் என்றான். கிருஷ்ணன் பிரதீபா சௌமியா மூவரும் இரவு 11 மணி போல ஊர் திரும்பினர். கிருஷ்ணன் மியூசிக் ஆல்பம் டைரக்டர் தேவை என விளம்பரம் கொடுத்திருந்தார். மியூசிக் ஆல்பம் தயாரிக்க போவதை எண்ணி எல்லோருமே மகிழ்ந்து இருந்தனர்.

என்ன ஹீரோ ஒரே ஜாலியா என ராகவ் அருணை கிண்டல் செய்துகொண்டிருந்தான். நீ வேற நானே இன்னும் தடுமாறிக்கிட்டு இருக்கேன் என்றான். காலேஜில் சௌமியாவை போய் பார்த்தான் அருண். பூஜா எப்படி இருக்கிறாள் என்றான் ஆவலாக. அவளும் சற்றே வாடித்தான் இருக்கிறாள் என்றாள் சௌமியா. கிருஷ்ணன் டைரக்டர் தேர்வு செய்ய சௌமியாவையும் கூப்பிட்டு இருந்தார். இன்டர்வியூ நடந்தது.டைரக்டர் ஒரு லேடி ஆக இருந்தால் நன்றாக இருக்கும் என சௌமியா சொன்னாள். இது ஒரு அருமையான யோசனை அதன் படியே செய்து விடுவோம் அப்படியே பெண்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்த மாதிரி இருக்கும் என்றார் கிருஷ்ணன். எதிர்பார்த்தபடி பெண் டைரக்டர்கள் அதிகம் பேர் வரவில்லை. அப்படியே வந்தவர்களும் புதுமுகமாக இருந்தார்கள். அப்போதுதான் பிரவீனா என்ற பெண் இன்டர்வியூ வந்தாள் . அவளுடைய கதை சொல்லும் திறன் மியூசிக் நாலேட்ஜ் கிருஷ்ணனுக்கும் சௌமியாவுக்கும் பிடித்திருந்தது. அவள் அதே ஊரை சேர்ந்த பெண் என்பதால் தங்குமிட பிரச்சனையும் இல்லை. அவள் ஏற்கனவே டைரக்ட் செய்த ஆல்பம் ப்ரொடக்ஷன் பிரச்னையால் நின்று விட்டதாக தெரிவித்தாள் பிரவீனா. பிரவீனாவின் பின்புலம் செக் செய்ய ஒரு வாரம் டைம் எடுத்துக்கொண்டார் கிருஷ்ணன் . இறுதியில் பிரவீனாவையே
டைரக்டர் ஆக புக் செய்தார், அட்வான்ஸ் குடுத்தும் விட்டார்.

ஆர்டிஸ்ட்களை பார்க்க வேண்டும் என்று பிரவீனா சொன்னாள். மியூசிக் ஆல்பம் பட்ஜெட் சிறிய பட்ஜெட் ஆக இருந்த படியால் குறைந்த நாட்களில் சூட்டிங் நடத்தி முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார் கிருஷ்ணன். எல்லோரையும் அறிமுகபடுத்த கிருஷ்ணன் ஆபீஸ் வரும்படி சொல்லி இருந்தார். பூஜாவை தவிர அருண், ஜோ, ரஷ்மி, ராகவ், தென்றல். சுகன்யா ஆகியோர் வந்திருந்தனர். எல்லோரும் தங்களை அறிமுகபடுத்தி கொண்டனர். சௌமியா ஏற்கனவே காலேஜ் நிர்வாகத்திடமும் அவர்கள் பெற்றோரிடமும் அனுமதி வாங்கி இருந்தாள். இவர்களுக்கு சில பேசிக் நடிபபு பயிற்சி குடுக்க நான் ஒருவரை அரேஞ்ச் செய்கிறேன் என்றாள் பிரவீனா. அவர் கூத்து பட்டறையில் இருந்து வருவார் அவர் பெயர் நந்தினி. அவர் சூட்டிங் முடியும் வரை நம் கூடவே இருப்பார் உங்களுக்கு ஓகே தானே கிருஷ்ணன் சார் என்றாள். எனக்கு ஓகே என்றார்.பூஜாவின் அப்பவோடு பிரவீனா பேசினாள். பூஜாவின் அப்பா பூஜாவை நடிக்க அனுமதி தந்தார். பூஜாவை நேரில் பார்க்க வேண்டுமே என்று பிரவீனா சொன்னாள். நான் இரண்டு நாட்களில் அவளை அனுப்பி வைக்கிறேன் என்று பூஜா அப்பா சொன்னார்.
ஆனால் அவள் சௌமியாவோடுதான் தங்க வேண்டும் என சொன்னார். ஓகே சார் அதற்கு நான் பொறுப்பு என்றாள் பிரவீனா.

நீண்ட நாட்களுக்கு பிறகு பூஜாவை பார்த்ததும் கட்டிப்பிடித்து கொண்டான் அருண். அவள் சற்று நிதானமாகவே இருந்தாள். அருணின் பிரிவு அவளை பக்குவப்படுத்தி இருந்தது, என்னை சௌமியா மேம் வீட்டில் டிராப் பண்ணுகிறாயா என்றாள். சரி என்றான். வீட்டில் சௌமியாவும் பிரவீனாவும் பேசிக்கொண்டிருந்தனர், அருண் , பூஜா இருவரையும் பார்த்ததும் நல்ல பொருத்தம் என்றாள் பிரவீனா.பூஜா நீ குளித்து விட்டு டிபன் சாப்பிடு பிறகு பேசலாம் என்றாள் சௌமியா. என்ன அருண் எப்படியோ உன் தேவதையை மீட்டுக்கொண்டு வந்துவிட்டோம் இனி உன் பொறுப்புத்தான் என்றாள் சௌமியா. மியூசிக் கான்செப்ட் மாடர்ன் ஆக இருக்க வேண்டும் அதே சமயம் உறுத்தல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றாள் பிரவீனா. அருண் நீ கொஞ்சம் எமோஷன் ஆவதை குறை எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றாள் பிரவீனா. பூஜா ரெடி ஆகி சாப்பிட்டு முடித்து வந்தாள். பிரவீனா அவளுடைய ப்ரோஃபைல் வாங்கி கொண்டாள். பிரதீபா ஒரு கான்செப்ட் வைதிருக்கிறாள் ஆனால் அதை ஷூட் செய்வது கஷ்டம் என்றாள் பிரவீனா.

நாம் பிரதீபாவை போய் பார்ப்போமா என்றாள் சௌமியா அவளை கிருஷ்ணன் சார் ஆபீஸ் வர சொல்லுங்கள் அங்கேயே டிஸ்கஷன் வைத்துக்கொள்ளலாம் என்றாள் பிரவீனா. அருண் நீ காலேஜ் போ. பூஜா நீ எங்களோடு வா என்றாள் சௌமியா. பூஜா, சௌமியா,பிரவீனா மூவரும் பிரதீபாவை பார்க்க கிருஷ்ணன் ஆபீஸ் போனார்கள். புக் செய்திருந்த காமிராமேன் பிரவீனாவின் ஃப்ரெண்ட் ரவியும் வந்திருந்தான். காலேஜ் ஒன்றில் நடக்கும் காதல் கதைதான் கான்செப்ட். மியூசிக் ஃபெஸ்டிவல் ஒன்றில் இருவரும் முதலில் சந்திக்கிறார்கள். அறிமுகம் செய்து கொண்டு பிரிகிறார்கள். இரண்டாவது சந்திப்பு ஒரு காம்படிஷன் ஒன்றில் நடக்கிறது. அதில் ஹீரோயின் ஜெயிக்கிறாள் ஹீரோ தோற்று போகிறான். அவள் அவனை சமாதானம் செய்ய முயல்கிறாள். அவனோ அவளை திட்டி விடுகிறான்.இரவு அவளுக்கு ஃபோன் செய்கிறான்.அவள் எடுக்கவில்லை. அவள் அட்ரஸ் தேடி அலைகிறான். அவளுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வந்து விட கிளம்ப தயார் ஆகிறாள். இறுதியில் ஏர்போர்ட்டில் அவளை சந்திக்கிறான் . தன் காதலை வெளிப்படுத்தும் விதமாக ஒரு பாடலை பாடுகிறான். அவளை வழியனுப்பி வைத்து காத்திருக்கிறான். இதுதான் கான்செப்ட் என்று பிரதீபாவும் பிரவீனாவும் இறுதி செய்கிறார்கள். பூஜா உனக்கு இந்த கான்செப்ட் பிடித்திருக்கிறதா என்று பிரவீனா கேட்டாள் . பிடித்திருக்கிறது என்றாள் பூஜா .

கிருஷ்ணனிடம் பூஜா கான்செப்ட் பற்றி சொன்னாள். மியூசிக் ஃபெஸ்டிவல் என்றால் பட்ஜெட் அதிகம் வருமே என்றார். அதெல்லாம் டைரக்டர் பார்த்துக்கொள்வார்கள் உங்களுக்கு இந்த கான்செப்ட் பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்கள் என்றாள் பிரதீபா. நன்றாக இருக்கிறது இதை நீ சொன்ன படியே எடுத்தால் நன்றாக இருக்கும என்றார். பூஜா சாயங்காலம் சௌமியா மேம் ரொம்ப போராடிக்குது அருணை போய் பார்த்து வரவா என்றாள். ம் ஆரம்பித்து விட்டாயா அவனிடம் நான் பேசுகிறேன் பிறகு போகலாம் என்றாள் சௌமியா. அருண் பூஜாவுக்கு உன்னை பார்க்க வேண்டுமாம் சரி மேம் உடனே வருகிறேன் என்றான். வந்ததும் வா பூஜா போகலாம் என்றான். இது என்ன வேலை அருண் கான்செப்ட் பத்தி பேசத்தான் உன்னை கூப்பிட்டேன் என்றாள் சௌமியா. சரி சொல்லுங்கள். நன்றாக இருக்கிறது ஆனால் சோகமாக இருக்கிறது என்றான். நாளைக்கு 10 மணிக்கு நந்தினி மேடம் காலேஜ் வருவார்கள். எல்லோரையும் வர சொல்லிவிட்டேன் நீயும் வந்துவிடு என்றாள். சரி பூஜாவை இப்போது அழைத்து போ ஜாக்கிரதை என்றாள் .

பூஜா அப்பா ஃபோன் செய்தார் என்ன மேடம் பூஜா எப்படி இருக்கிறாள். அவள் நன்றாக இருக்கிறாள். அடிக்கடி ஃபோன் பண்ணுங்கள் மேடம் அப்போதுதான் எங்களுக்கும் நிம்மதியாக இருக்கும என்றார். நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள் பூஜா சிறப்பாக நடித்து பேரும் புகழும் வாங்குவாள் என்றாள். என்ன பூஜா நீ பழையபடி பேச மாட்டேன் என்கிறாயே என்றான் அருண், அது வெறுமே உனக்கு தோன்றுகிறது. சரி நான் ரஷ்மியை பார்க்கவேண்டும் பார்த்து ரொம்ப நாளாகிறது போவோமா மத்ததை அங்கே போய் பேசிக்கொள்வோம் என்றாள் . இப்போது தான் வந்தோம் அதுக்குள்ள போகனுமா இல்லை அருண் கொஞ்சம் அவளிடமும் பேச வேண்டியிருக்கிறது சரி நீ என்னை அவாய்ட் செய்யவில்லையே அதெல்லாம் ஒன்றுமில்லை . ரஷ்மி ராகவோடு பேசிக்கொண்டிருந்தாள். கான்செப்ட் எப்படி இருக்கிறது ரஷ்மி ம் பரவாயில்லை இன்னும் டெவலப் செய்ய வேண்டும் என்றாள் . அருண் நீ எப்படி இருக்கிறாய் என்றான் ராகவ். நான் பூஜாவை பார்த்தவுடன் நன்றாகிவிட்டேன் என்றான்.

பூஜாவும், ரஷ்மியும் ஏதேதோ டிஸ்கஸ் செய்தனர் ஆல்பம் பற்றி பேசினர். நாளைக்கு நந்தினி மேம் வருகிறார்கள். அதனால் நாம் நேரத்தோடு காலேஜ் செல்ல வேண்டும் என்றாள் பூஜா. அருண் என்ன சொல்கிறான் என்றாள் ரஷ்மி. அவனுக்கு என் மேல் ஆசை மட்டும் இருக்கிறது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் அவன் கவனம் இல்லை என்றாள். அப்படி சொல்லாதே அவன் எவ்வளவு தவித்துபோய்விட்டான் நீ இல்லாமல் தெரியுமா? ரஷ்மி உனக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும் நீ அட்வைஸ் பண்ணாவிட்டால் இன்னும் வீட்டிலேயே முடங்கி கிடந்திருப்பான் . ம் பேசி முடித்து விட்டாயா நாம் போகலாமா சௌமியா மேம் ஃபோன் பண்ண போகிறார்கள் . சரி ராகவ், ரஷ்மி நாளை பார்க்கலாம் என்றாள் பூஜா. எனக்கு என்னவோ இவர்கள் பிரேக் அப் செய்து கொள்வார்கள் என்று தோன்றுகிறது என்றான் ராகவ். உன் வாயை கழுவு முதலில் என்றாள் ரஷ்மி .பூஜா எவ்வளவு அருணை நேசிக்கிறாள் என்பது உனக்கு தெரியாது என்றாள் ரஷ்மி. சாரி என்றான் ராகவ்.