Shadows of the Hidden Truth - 1 in Tamil Women Focused by Keerthi books and stories PDF | மறைந்த உண்மையின் நிழல்கள் - 1

The Author
Featured Books
Categories
Share

மறைந்த உண்மையின் நிழல்கள் - 1

🙏🤝 வணக்கம் 🌹☕

📝 முழு தொடர்கதையின் சுருக்கம்:

  நாவலின் பெயர்: "மறைந்த உண்மையின் நிழல்கள்" 

ஒரு திகில், மர்மம் மற்றும் உணர்ச்சிகளின் கலவையான தொடர் நாவல். 

இந்தக் கதையின் மையக் கதாபாத்திரம் அமுதா.அவள் ஒரு சாதாரண பெண்.  

கணவர் ரவி மூன்று மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் இறந்து விட்டார். என்று ஒரு சிலர் சொல்ல, அதை உண்மை தான் என்றே அவளும் நினைக்கிறாள்.  

ஆனால் ஒரு இரவில் அவளுக்குக் கேட்ட ஒரு மர்மக் குரல் ஒலி, அவள் வாழ்வையே தலைகீழாக மாற்றுகிறது.  கதவின் கீழே வந்த கருப்பு கவரில் இருந்த வார்த்தைகள் மற்றும் ஒரு புகைப்படம்..  ரவி இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் என்று நிரூபிக்கிறது.

  அதில் இருந்து அமுதா ஒரு மர்மப் பயணத்தைத் தொடங்குகிறாள்.  அவள் அந்தப் பயணத்தில் வழியில், ஒரு மூதாட்டியை சந்திக்கிறாள்.  

அவளதுத் தம்பி அருண், மற்றும் அவளது தந்தை ராமசாமி கூட இந்த சதியில் உள்ளார் என்பதை கண்டு அறிந்து அதிர்ச்சி ஆகிறாள் அமுதா.  இந்த சதி ஒரு சாதாரணம் அல்ல. இதில் அரசியல், சட்டவிரோத ஆயுதக் கடத்தல், ரகசிய கூட்டமைப்புகள் மற்றும் ரகசிய கடத்தல் குழுக்கள் ஆகியவற்றின் பின்னணியினரின் பங்கு இருக்கின்றன. 

ரவியை உயிரோடு வைத்திருப்பது, அவரை ஒரு முக்கிய சாட்சியாக பயன் படுத்துவதற்காகத் தான்.  ஆனால், இது நடக்குமா? நடக்காது?   இந்த நாவலின் மையக் குறியாக.. 

  அமுதாவிடம் இருக்கும் ஒரு தங்கச் சங்கிலி இருக்கிறது. 

  அவள் அம்மா அவளுக்கு, மிகவும் ஆசையாகக் கொடுத்த அந்தச் சங்கிலிக்குள் தான், அந்த சதியை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் ஒரு ரகசிய சாவி இருக்கிறது. 

  இது அமுதாவிற்குத் தெரியவே தெரியாது!  

  அமுதா, தன் கணவரை காப்பாற்றவும், தன் தந்தையை எதிர்கொண்டு உண்மையை வெளிக் கொண்டு வரவும், ஒரு மிகப் பெரிய  போராட்டத்தில் ஈடுபடுகிறாள். 

  இந்தத் தேடுதல் பயணத்தில் அவளுக்கு வரும் தாக்குதல்கள், துரோகிகள், அச்சங்கள் மற்றும் சோதனைகள் அனைத்தையும் தாண்டி அவள் நிலையாக நிற்க வேண்டிய ஒரு கட்டாய நிலை. 

  ஒவ்வொரு அத்தியாயமும் வாசகராகிய உங்கள் அனைவரையும், ஒரு புதிய மர்மத்திற்குள் இழுத்துச் செல்லும்.  ஒவ்வொரு அத்தியாயத்தின் கிளைமாக்ஸும் அடுத்து என்ன?" என்ற ஆர்வத்தை உங்களுக்குத் தூண்டும்.  இது வெறும் திகில் நாவல் அல்லவே! அல்ல!!  

  இந்த நமது நாவல், ஒரு பெண்ணின் தன்னம்பிக்கை, துணிச்சல், அன்பு, நம்பிக்கை, துரோகம், வீரம் மற்றும் குடும்ப ரகசியங்கள் கலந்து உருவான, ஒரு வாழ்வின் வெற்றியை நோக்கிச் செல்லும் பயணம் பற்றியது..  “மறைந்த உண்மையின் நிழல்கள்”   

  என் அன்பு நிறைந்த வாசகர்களாகிய உங்களை, கடைசி வரை மூச்சு விடாமல் படிக்க வைக்கும்.   ஒரு சுவாரஸ்யத் தொடர் நாவல். 

  அனைவரும் இப்போது வாருங்கள், நம் நாவல் இனிப்பை ரசித்து ருசித்துச் சுவைக்க.. 

🙏🌹 வணக்கம் 🤝☕

தொடர்கதையின் பெயர்: "மறைந்த உண்மையின் நிழல்கள்"   

   (விறுவிறுப்பான மர்மத் தொடர்கதை) 

🌙 அத்தியாயம் 1 : "நடு இரவில் கேட்ட மர்மக் குரல்" 🌙 

சென்னை நகரின் இரவுகள் எப்போதும் சத்தமாய் இருக்கும்.   ஆனால், அந்த இரவு மட்டும் வித்தியாசமாக இருந்தது. 

அப்போது சரியாக இரவு 11:55 மணி. 

அமுதா தனது பழைய வீட்டு கதவு மற்றும் ஜன்னலை, மூடி விட்டுத், தனது அறைக்குப் படுக்கச் சென்றாள்.

அப்போது அதே நேரத்தில், திடீரென்று அவள் வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் வேகமாக கேட்டது. 

அந்தத் தெருவில் இருந்த நாய்களும் வேகமாக ஓடி வந்துக் குறைத்தன.   அதே நொடியில் அவள் காதில் ஒரு அறிந்த குரல் ஒலியைக் கேட்டாள்.  “அமுதா"…!   கதவைத் திறடா..   அம்மு..  

நான் தான் வந்து இருக்கிறேன்..   அம்முக்குட்டி தங்கம் வா டா..  

அவள் இதயம் பதட்டமாக மிகவும் வேகமாக விட்டு விட்டுத் துடித்தது.  அந்த குரல் மூன்று மாதங்களுக்கு முன் இறந்துபோன, 

"அவளது அன்பான கணவன் ரவி!" 

அமுதா பயத்துடன் ஒரே ஓட்டமாக ஓடிப் போய் கதவைத் திறந்தாள். 

பின் வீட்டின் வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்தாள்.  அங்கு வெளியில் யாரையும் காணவே இல்லை. 

எனவே அவள் மீண்டும் வீட்டிற்குள் வந்து, அவளது வீட்டின் கதவைப் பூட்டி விட்டுப், படுக்கை அறை நோக்கி மீண்டும் நடக்கத் தொடங்கினாள்.  

இப்போது சரியாக நடு இரவு 12:01 மணி. 

அதே நேரத்தில் மீண்டும், அந்தக் குரல் மட்டும் எங்கு இருந்தோ?  

மீண்டும் மீண்டும் கேட்டது!   அம்மு நான் உன்னோடு இப்போது இங்கு பேச வந்து இருக்கிறேன்..   “அமுதா"…!   கதவைத் திறடா..   செல்லம் வா டா!   வந்து உடனே கதவைத் திறந்து விடு..  

நடந்த நிகழ்வுகள் மற்றும் உண்மையை, நாம் இருவரும் இணைந்து, வெளியே கொண்டு வர வேண்டும் டா செல்லம்.. 

அமுதாவின் உடல் பயத்தில் நடுங்கியது. 

அவள் மனதில் மீண்டும் நாம் சென்றுக் கதவைத் திறக்க.. வேண்டுமா? வேண்டாமா? என்று எண்ணி மிகவும் குழம்பினாள். 

அந்த நொடியில் அங்கு, ஒரு "கருப்பு காகிதக் கவர்" கதவின் கீழே நுழைந்து உள்ளே வந்தது. 

அதைப் பார்த்த அமுதா, வேகமாக ஓடிச் சென்று, அதனை எடுத்துப் பார்த்தாள்.  அந்தக் கவரின் மேல் ஒரு "வாக்கியம்" மற்றும் ஒரு போட்டோவும் இருந்தது. 

உன் கணவன் நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்.  

அவர் பட்டணத்தில் இறந்து விட்டார் என்று வந்த செய்தி பொய் செய்தியே!  

அது உண்மை இல்லை.    

ஆனால் அவர் இப்போது மிகப் பெரிய ஆபத்தில் உள்ளார்! 

  அமுதாவின் கண்கள் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் பெரிதாக விரிந்தன.  அவள் வாயைத் திறந்து, சத்தமாகக் கத்தப் போனாள், ஆனால் பயத்தில் தொண்டையில் இருந்து ஒரு வார்த்தைகள் கூட வராமல், அப்படியே அடைத்து விட்டது. 

  இப்போது அங்கு வந்து இருக்கும் மர்ம மனிதன் யார்?   அவள் கணவரா?  அல்லது..  

வேறு யார்? 

⏳ தொடரும்….

📌 அடுத்த அத்தியாயம் 2ல்: 👉 "அமுதா" அந்த கவரைத் திறந்து பார்த்ததும், அதில் இருந்த " வார்த்தைகள் மற்றும் புகைப்படம்" தான், அவளது எண்ணத்தைத் தலை கீழாக மாற்றியது..  

அப்படி என்றால் அது அவள் கணவர் தானா?! 

🙋‍♂️ இன்று ஒரு தகவல்:“நீங்கள் உங்களை நம்புவது தான், உங்கள் வெற்றியின் முதல் படி.” 

🙏💕 நன்றி

🔁 மீண்டும் ☀️ நாளை🙋‍♂️ 🙋‍♀️ சந்திப்போம்! 

© ✍️ கதை ஆசிரியர்: கீர்த்தி

© 📚 பதிப்புரிமை: பாலா ஸ்டோரிஸ்