Quotes by Prabhu in Bitesapp read free

Prabhu

Prabhu

@prabhu53yahoo.co.uk241644


ஆதவன் வழிபாடு

https://youtu.be/29ESM0_6H8A?si=7Nc0O_Xn-RP-V-Bv

ரத ஸப்தமி அன்று அடியேன் எழுதிய பாடல்

ராகம் - சாவேரி; தாளம் - ஆதி

பல்லவி
ஆதவா ஆதவா என்றால்
அழியாதோ எந்தன் மடமை

அருள்வாய் அருள்வாய் என்றால்
ஒளிர்வாயே எந்தன் சித்தம் …….
ஆதவா

சரணம்

அறியாது யான் செய்த
பிழையாவும் பொறுப்பாயே

அறிவே உருவான அன்பே
அருள்வாயே அனுதினமும் …..

பணிந்தேன் உன் மலர் பாதம்
பரிவுடனே ஒளிர் வாயே

அண்டம் அனைத்தும் ஆளும்
அருணனாம் பகலவனே ……….. ஆதவா

Read More