ஷாப்பிங் போன போது அவரவர்க்கு பிடித்த உடைகளை எடுத்து கொள்ளுமாறு சொன்னான் பிரேம். இது நம்முடைய சுபா கல்யாணம், எல்லோரும் நம்மை மதிக்கும்படி நாம் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொன்னான்.சுபாவை பார்த்து பேசிவிட்டு வந்தான். அவளுடைய அப்பாவுக்கு இப்போது உடல்நலம் பரவாயில்லை எனவும் சொன்னாள்.கல்யாண ஏற்பாடுகளை மாப்பிள்ளை வீட்டார் பார்ப்பதாகவும் சொல்லி இருந்தாள். எப்போது என்ன உதவி தேவைப்பட்டாலும் கூப்பிடு என்றான் . அவன் பயந்தபடியே அது நடந்து விட்டது. மதன் குடித்துவிட்டு வந்து சுபாவை கண்டபடி பேசி இருக்கிறான். இதை தட்டி கேட்க போன லலிதா மேடத்தையும் திட்டி இருக்கிறான் . பிரேம் போய் சுபாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டான். அவள் கலங்கி போய்விட்டாள். போலீஸ் கம்ப்ளைண்ட் ஒன்றும் கொடுத்து விட்டான். சுபா வேண்டாம் என தடுத்தும் போலீசில் சொல்லிவிட்டான். அவர்கள் மதனை அரெஸ்ட் செய்து கூட்டிப்போனார்கள். வாசன் பிரேமுக்கு ஃபோன் பண்ணியிருந்தான். நான் சொல்கிறேன் என்று தப்பாய் எடுத்து கொள்ளாதீர்கள் உங்கள் இருவரின் நட்பு பற்றி எனக்கு தெரியும் ஆனால் ஊரில் அப்படி உண்மையை எதிர்கொள்ள யாருக்கும் தைரியமில்லை. நான் வந்து சுபாவை அழைத்து போகிறேன்.. நீங்கள் யாரும் கல்யாணத்துக்கு வர வேண்டாம் என்றான். இது சுபாவுக்கு கூட தெரிய வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன் . பிரேம் அதிர்ச்சி அடைந்தான். ஆனால் சுபாவுக்கு ஒரு நல்லது நடக்கும் போது தான் அதன் இடைஞ்சலாக இருக்க வேண்டாம் என எண்ணிக்கொண்டான். வாசன் வந்து சுபாவை கூப்பிட்டு போனான்.
பிரேம் ஒரேடியாய் கலங்கி போய்விட்டான். தீபாவும், ரஞ்சனியும் அவனை சமாதானபடுத்தினார்கள்.வாசன் மட்டுமல்ல எல்லோருமே சுயநலவாதிகள்தான் என்றாள் தீபா.தீபா நாம் என்ன தவறு செய்தோம் பழி நம் மேல் விழ என்றான். சுபா ஃபோன் பண்ணியிருந்தாள், பிரேம் எடுக்கவில்லை. யாரும் எடுக்கவில்லை. அவள் எதிர்காலம் கருதி முன்பே இந்த முடிவை எடுத்திருக்கலாம்.மதன் இரண்டு நாளில் ஜாமீனில் வெளியே வந்துவிட்டான். தீபா நீ இதை நினைத்து கவலைப்படாதே இனி நமக்கு நாம் மட்டும்தான் என்றான்.சுபா கல்யாணத்துக்கு ஆசை ஆசையாய் எடுத்த உடைகளை repack செய்து பீரோ உள்ளே வைத்தாள் தீபா.
ரஞ்சனி நாம் யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்கவில்லை அப்படி இருந்தும் இவ்வாறு நடக்கிறது என்றாள்.பிரேம் அப்பா நீ ஏண்டா வருத்தப்படுற .. எல்லாம் நல்லதுக்குத்தான் என்றார்.
போலீசில் மதன் மேல் கொடுத்த கம்ப்ளைண்ட் வாபஸ் பெற்றான் பிரேம். மதன் பிரேமுக்கு ஃபோன் பண்ணி இனிமேல் நீ என் விஷயத்தில் தலையிடமாட்டாய் என நம்புகிறேன் என்றான்.நான் இனிமேல் யார் விஷயத்திலும் தலையிடமாட்டேன் என்றான்.பிரேம் அப்பா ரமேஷுக்கு பெண் பார்க்க வேண்டும் என சொல்லிக்கொண்டிருந்தார். நம் வீட்டில் ஒரு நல்லது நடக்க வேண்டும் என்றார். ரமேஷ் ஆர்வம் காட்டவில்லை. அவன் அவனுடைய வேலையில் பிஸி ஆக இருந்தான். எதிர்பார்த்த அளவு பிஸினஸ் expand ஆக வில்லை. அவனே சிரமத்தில் இருந்தான். எனக்கு இப்போது கல்யாணமெல்லாம் வேணாம் அப்பா என்று சொல்லிவிட்டான். தீபாவை கூட்டிக்கொண்டு அவ்வப்போது டாக்டர் checkup போய் வந்தான் பிரேம். குழந்தை வளர்ச்சி சீராக இருக்கிறது என்று சொன்னார்கள்.
சுபா கல்யாணத்தன்று இங்கே இருக்க வேண்டாம் வெளியூர் போய் விடலாம் என நினைத்தான். நாங்களும் வருவோம். திருப்பதி போய் வரலாம் என்றார் அப்பா. சரி நான் ஏற்பாடு செய்கிறேன் என்றான். அதன்படியே டெம்போ டிராவலர் வண்டி ஒன்றை புக் செய்தான்.நிம்மதியாக ஸ்வாமி தரிசனம் செய்து வருவோம் என கிளம்பினார்கள். ரஞ்சனி , தீபா , பிரேம் அப்பா, அம்மா ஆகியோர் காலையிலேயே கிளம்பிவிட்டார்கள். கடவுளே சுபா கல்யாணம் நல்லபடியாக நடைபெற வேண்டும் என பிரேம் அம்மா வேண்டிக்கொண்டாள் . திருப்பதி அவன் பல முறை போய் வந்த இடம்தான் என்றாலும் தீபா கூட இப்போதுதான் போகிறான். அவள் கையை பிடித்துக்கொண்டான். குழந்தைக்கு இங்கேதான் மொட்டையடித்து காதுகுத்த வேண்டும் என எண்ணிக்கொண்டாள்.இரண்டு நாட்கள் தங்கியிருந்து அருகில் உள்ள ஸ்தலங்களுக்கும் போய் வந்தார்கள்.
ஏதோ ஒரு whatsapp குரூப்பில் சுபா கல்யாண போட்டோ வந்திருந்தது.எல்லோருக்கும் மகிழ்ச்சி. கல்யாணம் நல்லபடியாய் நடந்ததாய் மெசேஜ் போட்டிருந்தாள் சுபா. தீபா எப்படியோ சுபாவுக்கு நல்லது நடக்கிறது என்றாள்.மூன்று நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்த போது சுபாவும் அவர் கணவரும் வந்ததாகவும் வீட்டில் யாருமில்லாததால் திரும்ப சென்றதாகவும் சொன்னார்கள். அவராகள் இன்னும் ஒரு வாரத்தில் அமெரிக்கா போக இருப்பதாகவும் சொன்னார்கள். அவளை கடைசியாய் ஒருமுறை பார்க்கலாம் என நினைத்தேன் அந்த வாய்ப்பும் போய் விட்டது என்றான். பிரேம் சுபா நல்லபடியாய் போய் வரட்டும் அமெரிக்கா என்றாள் தீபா. திருப்பதி பயணம் நிறைவை தந்தது குடும்பத்தாருக்கு . ரமேஷ் வந்திருந்தான். எப்படி இருக்கிறாய் ரமேஷ் . நான் நன்றாக இருக்கிறேன்.அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தான். அப்பா நீ ஏண்டா ஒரு கல்யாணம் பண்ணாம இப்படி சுத்திட்டு இருக்குர ? யாரையாவது லவ் பண்ணுறியா என்றார். அதெல்லாம் இல்லை என்றான். மதியம் அவனுக்கு பிடித்த வகையில் சமைத்திருந்தார்கள். என்ன அண்ணி எப்படி இருக்கிறீர்கள் என விசாரித்தான். பிரேம் ஈவினிங் சீக்கிரமாக வந்து சேர்ந்தான். ரொம்ப நேரம் அவன் பிஸினஸ் பற்றி பேசினார்கள். அவன் இரவே புறப்பட்டு போய் விட்டான். நகையை பத்தி ரமேஷ் ஏதாவது சொனனானா ? என கேட்டான் அப்பாவிடம் . அவர் ஒன்றும் சொல்லவில்லை.
பிஸினஸ் விஷயமாக சில மாதங்கள் பிரேம் வெளிநாட்டுக்கு போக வேண்டிய கட்டாயம் வந்தது. வீட்டில் உள்ள எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.தீபா மாசமா இருக்குறப்போ இப்போ நீ போக வேண்டாம் என்றார் அப்பா. வேறு யாரையும் அனுப்ப முடியாது. கம்பெனி ஒரு கிரிடிகல் ஸ்டேஜ் ல இருக்கு. நான் போய்ட்டு 3 மாசத்துல வந்துடுவேன் என்றான். தீபா அரைமனதாக சம்மதித்தாள் . இன்னும் ஒரு வாரத்தில் கிளம்ப வேண்டும் என்றான். பிரேம் அம்மா நான் தீபாவை கவனமாக பார்த்துக் கொள்கிறேன் என்றாள். உன்னுடைய வளைகாப்பு நிகழ்ச்சியின் போது நிச்சயம் நான் இங்கு இருப்பேன் என்றான். ரஞ்சனி எதுவும் சொல்லவில்லை. எப்போதும் இருக்கும் உற்சாகம் அவளிடத்தில் இல்லை. இன்னும் 6 மாதங்களில் ரஞ்சனி படிப்பும் முடித்து விடுவாள். அதன் பிறகு கவலையில்லை. ஊருக்கு கிளம்புவதற்கு முன் தீபாவுடன் மனம் விட்டு பேசினான். நம்ம ஃபேமிலி இது. அதனாலே நான் இல்லாதப்ப என்ன நடந்தாலும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போ என்றான். சரி பிரேம் .நீதான் எல்லாத்தையும் பார்த்துக்கணும் உன்னையும், நம் பிள்ளையையும்.
பிரேம் கிளம்பி போய்விட்டான். தீபாவுக்கு என்னவோ போல இருந்தது. போய் சேர்ந்தவுடன் ஃபோன் பண்ணினான். ஊரில் கோவில் விசேஷம் இருந்தது அதற்காக பிரேம் அப்பா போயிருந்தார்.வீட்டில் ஆண் துணை இல்லாமல் இருப்பது சற்றே கடினமான காரியமாக இருந்தது. தீபா,ரஞ்சனி இருவரும் ஸ்வாமிகளை பார்க்க போவோம் என முடிவெடுத்தனர். பிரேம் அம்மா எதுவும் சொல்லவில்லை. நீ பயப்படும்படி ஒன்றும் நடக்காது. பிரேம் நல்லவன் என்றார் ஸ்வாமிகள். நீ பதட்டத்தை குறைத்து கொள். நல்லதே நடக்கும். உன்னுடைய குழந்தை பிறக்கும் நேரம் உனக்கு எல்லாம் கூடி வரும் . நன்றி ஸ்வாமிகளே என்றாள். இப்போது ஒரு தெளிவு வந்தாற்போல் இருந்தது தீபாவுக்கு.
ரமேஷ் ஆரம்பகட்ட சிக்கல்கள் போன்றவற்றில் இருந்து விடுபட்டு ப்ரொடக்ஷன் ஸ்டார்ட் பண்ணிவிட்டான். அவனுடைய பிஸினஸ் விரிவடைய தொடங்கி இருந்தது. அவன் மனதில் வைராக்கியம் இருந்தது. பிரேம் அப்பா மறுபடி அவனிடம் கல்யாணம் பண்ணிக்கோ என்றார். நீங்களே பெண் பாருங்கள் என்று சொல்லிவிட்டான். ரொம்ப சந்தோஷம் ரமேஷ் என்றார். திருவிழா கோவில் பிரசாதம் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்தார். ரமேஷ் திருமணத்துக்கு சம்மதித்து விட்டதை சொன்னார். எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர். பிரேம் இப்பவாவது அவனுக்கு ஒரு துணை வேண்டும் என்று தோன்றியதே என்றான். மீட்டிங்களிலேயே முக்கால்வாசி நேரம் போனது பிரேமுக்கு. சரியான சாப்பாடு இல்லை. அதையெல்லாம் அவன் பொருட்படுத்தவில்லை.
நாட்கள் ஓடின. தீபா,ரஞ்சனி இருவருமே பிரேம் அம்மா, அப்பா பேச்சை மதித்து நடந்தார்கள். எல்லோரும் சேர்ந்து போய் ஒரு சில இடங்களில் ரமேஷுக்கு பெண் பார்த்து வந்தார்கள். தீபாவை வீணாக அலைய விட வேண்டாம் என்றான் பிரேம். பிரேம் போய் 3 மாசம் கடந்துவிட்டது.என்னாச்சு பிரேம் நிலைமை இன்னும் சீராக வில்லையா என்றாள். ஆமாம் ஒரே இழுபறியாக இருக்கிறது. நான் இல்லாது போனால் ஆர்டர் கை நழுவி போய்விடும் என்றான். ரஞ்சனி எப்படி படிக்கிறாள் . அவளே பேசினாள் எப்படியும் நல்ல ரேங்க் வந்துவிடும் மாமா. எக்ஸாம் சமயத்தில் ஷாப்பிங் எல்லாம் போகாதே என்றான். சரி மாமா. டாக்டர் செக்அப் போய் வந்தாள் தீபா. நீங்கள் ரொம்பவும் கவலைப்பட கூடாது என அட்வைஸ் பண்ணினார்.பிரேம் எங்கே எனவும் டாக்டர் விசாரித்தார். நான் பிரேமிடம் பேச வேண்டும் என்றார். அவரை உங்களிடம் பேச சொல்லி நினைவு படுத்துகிறேன் டாக்டர்.
வளைகாப்பு இந்த மாதம் வைக்கலாமா அடுத்தமாதம் பிரேம் வந்தவுடன் வைக்கலாமா என பிரேமின் அப்பா அம்மா பேசிக்கொண்டனர். பிரேம் வந்துவிடட்டும் என்றார் அப்பா. அவன் போய் 6 மாதம் ஆகிறது. இதோ வந்துவிடுவான் அதோ வந்துவிடுவான் என நாட்கள்தான் தீருகிறது. என்னம்மா ரஞ்சனி எக்ஸாம் எல்லாம் முடிந்து விட்டதா என்றாள். முடிந்து விட்டது. இனி உனக்கும் ஒரு கால்கட்டு போட்டு விட வேண்டியதுதான் என்றாள். இவள் சிரித்தக்கொண்டே அங்கிருந்து போய் விட்டாள் . ரமேஷுக்கு ஒரு பெண்ணை பிடித்து விட்டது. நல்ல குடும்பம். நிச்சயம் நடத்தலாம் என ஜோசியர் சொல்லிவிட்டார்.பிரேம் வரட்டும் என ரமேஷ் சொல்லிவிட்டதால் அதுவும் அப்படியே இருக்கிறது. ஒரு வழியாக ஆர்டர் கிடைத்தது. பிரேம் இத்தனை நாள் காத்திருப்புக்கு பலன் கிடைத்துவிட்டது. பிரேம் ஊர் திரும்ப தயாரானான் . இன்னும் இரண்டு நாட்களில் வீட்டில் இருப்பேன் என்றான். தீபாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது. அவனிடம் வெளிப்படுத்தினால் மறுபடி போய் விடுவான் அதனால் அவனை கண்டித்து வைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள். 9 வது மாசம் வளைகாப்பு நடத்த தேதி பார்த்தார்கள். பிரேம் வந்து சேர்ந்தான், அவனை கட்டிக்கொண்டு அழுதாள் தீபா. நான்தான் சொன்னேனே உன் வளைகாப்பு விழாவில் நிச்சயம் நான் இருப்பேன் என்று. எல்லோரும் நிம்மதி அடைந்தார்கள்.