nizhal tharum vasantham in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நிழல் தரும் வசந்தம் - 50

Featured Books
Categories
Share

நிழல் தரும் வசந்தம் - 50

பிரியத்திற்குரிய குமரனுக்கு அப்பா பிரேம் எழுதுவது.. நீ சவுகரியமாய் இருப்பாய் என நம்புகிறேன். அம்மாவும், நானும் உன் நினைப்பிலேதான் இருக்கிறோம். நீ போய் இரண்டு வருடங்கள் கடந்து விட்டது.நான் சொந்த ஊருக்கு போனதை உனக்கு சொல்லியிருப்பார்கள். நீ நன்கு படிக்க வேண்டும்.விளையாட்டில் சாதிக்க வேண்டும். நானும் உன் அம்மாவும் விரைவில் யு எஸ் வர இருக்கிறோம். சுபா ஆண்ட்டி , லலிதா, வாசன் அங்கிள் ஆகியோரை நலம் விசாரித்ததாய் சொல்லவும்.இப்படிக்கு பிரேம் உன் அன்பு அப்பா. ரஞ்சனி நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவளுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. பிரேமும், தீபாவும். மூன்று மாத காலம் பெங்களூரிலேயே தங்கி இருந்தார்கள். நீலன் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே போனான்.குழந்தைக்கு கனிகா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். அடுத்த வாரம் பிரேமும், தீபாவும் யு எஸ் போகிறார்கள் குமரனை பார்க்க. தீபா குமரனுக்கு உடைகள், விளையாட்டு பொருட்கள் போன்றவற்றை வாங்கி இருந்தாள்.லலிதா, சுபாவுக்கும் பொருட்கள் வாங்கியிருந்தாள். வாசனுக்கு தாங்கள் யு எஸ் வருவதாய் தகவல் சொல்லியிருந்தார்.

ஊரில் கதிரேசனிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தான். ஸ்வாமிகள் சமாதிக்கு போய் விளக்கு போட்டு வழிபட்டான். அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி விட்டிருந்தது. வாழ்க்கை மாறிக்கொண்டே இருப்பதை கண்கூடாக உணர்ந்தான் . தினந்தோறும் அது தன்னை சோதனை செய்வதாகவும் கூட சிந்தித்தான். சௌமியா , ராக்கி தான் இப்போது ஆபீஸ் வேலைகள் முழுக்க பார்த்துக்கொள்கிறார்கள். ஆபீஸ் இடையில் போயிருந்தான். நல்ல ப்ராக்ரஸ் இருந்தது. ரஞ்சனியும், குடும்பத்தாரும் கோவிலுக்கு போய் வந்தனர்.பிரேம் அவன் குடும்பம். மகன், ரஞ்சனியின் மகள் என விரிவடைந்து வந்தது. சொல்லப்போனால் சௌமியாவின் குடும்பமும் அவர்களுடன் சேர்ந்தே பயணித்தது. தீபா அவள் ரஞ்சனிக்கு தாய் மாதிரி கண் இருந்து பார்த்துக்கொண்டாள். ரஞ்சனியின் உலகம் பிரேம் மாமா, அக்கா தீபாவில் இருந்து விலகி இனி அவள் குழந்தை கனிகாவுக்கே சொந்தம்.

நன்கு மியூசிக் கேட்கிறாள் கனிகா என்றான் நீலன். ரஞ்சனியின் தாலாட்டில் கண் மயங்கி தூங்குகிறாள் கனிகா.
வெயில், மழை என மாறி மாறி பருவம் வந்த போதும் அன்பு நிலைத்திருந்தது. பிரேம் மீது ரஞ்சனி கொண்ட நம்பிக்கையும் அபாரமானது. ரஞ்சனி மென்மேலும் பிஸினசில் வளர பிரேம் நம்பிக்கை அளித்தான். சௌமியாவுக்கும், ராக்கிக்கும் நடைபெற்ற திருமணம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது பிரேம் வாழ்வில். ராக்கி அப்பா, அம்மா இன்னும் சமாதானம் ஆகவில்லை. எவ்வளவோ சங்கடங்களை கடந்து ராக்கியும், சௌமியாவும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். மோகிதா அவர்களின் சொத்து. பிரேம் இந்த நதி போன்ற வாழ்க்கையின் படகோட்டி . நதி எப்படி இருந்தாலும் அவன் இந்த குடும்பத்தை கரைசேர்க்க உழைத்தாக வேண்டும்.

என்ன மாமா கனிகா கூப்பிடுகிறாள் பாருங்கள். சாமியார் மாமா என்று சொன்னாள் ரஞ்சனி. ஆம் அவன் சாமியார் தான். அவனால் ஆசைகளை துறக்க முடிந்தது. ஆனால் சொந்தங்களை விட்டு விலக முடியவில்லை.சாமியாராய் போவது சுலபம். ஆனால் அந்த கோட்பாடுகளை காப்பாற்ற கடவுள் அவனுக்கு சக்தி கொடுக்க வேண்டும். அருள் வேண்டும். நீலன் மாதுளம்பழம் வாங்கி வந்திருந்தான். நீலனை நினைத்தால் பெருமையாய் இருந்தது. அவனுக்கு பொருத்தமான துணையாய் ரஞ்சனி இருந்தாள்.தீபா அந்த மாதுளம்பழங்களை கழுவி அறிந்து ஜூஸ் போட்டு கொண்டு வந்தாள். ஆன்மீக தேடல் இன்னும் சிறு வயதில் இருந்திருந்தால் பிரேம் எப்போதோ சாமியாராய் போயிருப்பான். அவன் தேடல் தீபாவால் மாற்றப்பட்டது. குமரகுரு அவன் பாதையை மாற்றினார். பயணங்கள் எவ்வளவு முக்கியம் என உணரச்செய்தார்.

இவன் வெகுதூரம் பயணித்து விட்டான். ஆனால் இலக்கு இன்னும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது, ஒவ்வொரு பயணமும் பாடம். தீபா இவனை பிரிந்து கஷ்டப்பட்டாள் .அவளுக்கு பயணம் போகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.ரஞ்சனி எப்போதும் பயணத்துக்கு தயார். அவள் ஒரு சுதந்திர பறவை. ரஞ்சனி தன் படிப்பை சிறப்பாக முடித்தாள். அதன் தொடர்ச்சியாக தன் அப்பா பிஸினசை காப்பாற்றினாள். கடைசியாக குமரகுரு. அவர் தன் பெண்ணை பிரேமுக்கு கட்டிக்கொடுத்து ஒரே இரவில் தீபாவின் வாழ்க்கையையும், பிரேமின் வாழ்க்கையையும் மாற்றினார், அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. பிரேமின் சகோதரன் பிரேமுக்கே துரோகம் செய்தான். அதை பிரேம் பொருட்படுத்த வில்லை. பிரேம் அப்பா, அம்மா அவர்களும் கால ஓட்டத்தில் மறைந்தார்கள்.

சிக்கலான சமயங்களில் ஒருவர்க்கொருவர் துணையாக இருந்தனர் தீபாவும் , பிரேமும். எல்லாமே புதிராக இருந்த ரஞ்சனி வாழ்வில் ஒளியாக வந்தான் நீலன். சுபா தன்னுடன் ஆரம்பத்தில் இருந்தே துணை நிற்பவள். அவள் வாழ்விலும் எவ்வளவு சிக்கல்கள், தனியாக போராடி வென்றவள்.சௌமியா இவனை காதலித்ததை தவிர ஒரு பாவமும் செய்ய துணியாதவள். அவள் வாழ்க்கை முழுக்க ஏமாற்றம்.அவளும் தனியாக போராடியவள். பிரேம் நினைத்து பார்த்தான் இந்த பெண்கள் தன் வாழ்வில் எவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் தன்னையும் காத்துக்கொண்டு இவனையும் காப்பாற்றி இருக்கிறார்கள். வெகுளியாக இருந்த பிரேம் குடும்ப தலைவனாக,நிறுவன தலைவனாக மாற இந்த பெண்களே காரணம். ஒரு பிள்ளைக்கு அப்பாவாக மாறி இருக்கிறான்.

தீபா தன்னை ஒருபோதும் கைவிடாத, சந்தேகப்படாத பிரேமை நினைத்து பார்த்தாள். பிரேம் அவளை கல்யாணம் செய்யும்போது அவள் சிறு பெண். முதிர்ச்சி அடையாத பெண். கால ஓட்டத்தில் பிரேம் அவளுக்கு எல்லாமுமாகி இருக்கிறான். அவனில்லாத வாழ்க்கையை நினைக்க முடியாது. என்ன பிரேம் குமரனை நினைத்தாயா என்றாள் . அவனை கூட்டிக்கொண்டு வந்துவிடுவோமா என்றாள். அதெல்லாம் வேண்டாம். அவன் இப்போது அவர்கள் வீட்டுப்பிள்ளை. நிறைய கவனம் எடுத்து அவனை வளர்த்து வருகிறார்கள். அதை நாம் கெடுக்க வேண்டாம் என்றான். பிரேம் நாம் குலதெய்வம் கோவிலுக்கு போய் வருவோமா என்றாள். நிச்சயமாக நான் நாளைக்கே ஏற்பாடுகளை செய்கிறேன் என்றான்.

பிரேம் குமரனின் மொட்டையடித்து ,காதுகுத்து நடத்திய நிகழ்வை நினைத்தான். சாமிக்கு படையல் வைக்க எல்லாம் செய்தான். சௌமியாவும், ராக்கியும், மோகிதாவும் வந்திருந்தார்கள்.சாமிக்கு புதிய புடவை சாத்தினார்கள். எல்லோரும் அன்று இரவே ஊருக்கு திரும்பினார்கள். சௌமியாவுக்கும்,ராக்கிகக்கும் மோதிரம் ஒன்றை அணிவித்தான் பிரேம். நீங்கள் எங்கள் இடத்தில் இருந்து கம்பெனி ஐ நடத்துகிறீர்கள். நன்றி என்றான். எத்தனை மாதம் பிரேம் நாம் யு எஸ் சில் தங்க போகிறோம் என்றாள் தீபா. 3 மாதம். சுபா நீ குறைந்தபட்சம் 6 மாதம் வரையிலும் தங்கலாம் என்றாள்.இங்கு ரஞ்சனி தனியாய் இருப்பாள். அதனால் 3 மாதமே அதிகம் என்றான் பிரேம். யு எஸ் ஃப்ளைட் ஏறும் நாள் வந்தது. ரஞ்சனி , நீலன், ராக்கி, சௌமியா எல்லோரும் வந்திருந்தார்கள். மாமா இந்த பயணமும் நல்லவிதமாகவே அமையட்டும் என்றாள் ரஞ்சனி. சௌமியா கண்களால் விடை கொடுத்தாள் .

இரண்டு நாட்கள் பயணத்துக்கு பிறகு அவர்கள் யு எஸ் சென்றடைந்தார்கள். ஏர்போர்ட் லாஞ்ச்சில் குமரன் அமர்ந்திருந்தான். பிரேமை பார்த்ததும் அவனுடைய உடலசைவே மாறி விட்டது. அவன் எழுதிய கடிதத்தை கையில் வைத்திருந்தான். பிரேம் குமரா என்று கூப்பிட்டவுடன் அவன் சில நிமிடம் உறைந்து போயிருந்தான். பிறகு ஏன் என்னை பார்க்க சீக்கிரம் வரவில்லை என அழுதான்.தீபா அவனை கட்டிக்கொண்டாள். சுபா செய்வதறியாது நின்று கொண்டிருந்தாள்.லலிதா தான் அழாதே குமரா என்று சொன்னாள். எப்படி இருக்கே சுபா? வாசன் எப்படி இருக்காரு என்றான். அவர் நல்லா இருக்கார் . எப்பவும் பிஸி என்றாள்.
வீட்டுக்கு வந்ததும் அவணுக்கென வாங்கிய பரிசு பொருட்கள், பொம்மைகளை கொடுத்தான் பிரேம். கதை சொல்லுவியா அப்பா என்றான் பிரேம். நிச்சயமாக. லலிதா பிரேமையும்,குமரனையும் மாறி மாறி பார்த்தாள் .

எல்லோருக்கும் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள் லலிதா.சுபா ஆளே மாறிப்போயிருந்தாள். என்ன சுபா இந்தியா வர ஐடியாவே இல்லையா என்றான்.எனக்கும் ஆசைதான். இந்த முறை ரஞ்சனி குழந்தையை பார்க்க வருவேன் என்றாள். பிரேம் இந்த அறையில் தங்கிக்கொள் என்றாள். வாசன் ஆபீஸ் விட்டு வந்ததும் நலம் விசாரித்தார், பிரேம் நீ அதிர்ஷ்டசாலி என்றார். உன் பிள்ளை எப்பவுமே உன்னை நினைக்காமல் இல்லை என்றார். நீ போகும்போது அவன் அழுது எங்களையும் அழ வைக்க போகிறான் . நான் அவனிடம் பக்குவமாக சொல்கிறேன் என்றான் பிரேம்.

இரவு தூங்கிக்கொண்டிருந்தான் பிரேம். தீபா அருகில் படுத்திருந்தான் குமரன். இவன் விழித்து பார்த்தான் . என்ன குமரா தூங்கவில்லையா ? என்றான். கதை சொல்லு என்றான். ஒரு ஊரில் ஒரு பையன் இருந்தான். அவனுக்கு அப்பா ,அம்மா மேல் பிரியம் அதிகம்.ஒரு நாள் மீன் பிடிக்க போனவனுக்கு ஒரு மீன் கிடைத்தது, அந்த மீன் சொன்னது என் அப்பா அம்மா தேடுவார்கள் என்னை விட்டு விடு என்றது, என் அப்பா அம்மா பசியோடு இருப்பார்கள் உன்னை விட்டுவிட்டால் நான் என்ன செய்வது என்றான். அப்போது அந்த மீன் ஒரு முத்து ஒன்றை கொடுத்து விட்டு மறைந்தது . குமரன் தூங்கியிருந்தான். வீட்டை சுற்றிலும் பனிக்கட்டிகள் இருந்தன. அவற்றை வாரி போட்டுக்கொண்டிருந்தனர் சிலர். பிரேம், தீபா, குமரன் மூவரும் அதை வீசி விளையாடிக்கொண்டிருந்தனர். லலிதாவும் , சுபாவும் கூட அதில் கலந்து கொண்டனர். வாசன் பார்த்து ஜாக்கிரதை என்று சொன்னார்.

இரவு டின்னர் முடிந்த பிறகு ரஞ்சனியிடம் வீடியோ காலில் பேசினான் பிரேம். மாமா எப்படியிருக்கிறான் குமரன் என்றாள் . அவன் தூங்கிவிட்டான் என்றாள் தீபா. கனிகா பாட்டு கேட்டு கொண்டிருக்கிறாள். நீலன் அவளுக்காக பாட்டு ஒன்றை எழுதி இருக்கிறான் என்றாள் ரஞ்சனி.தீபா நல்லா குளிருது . ஹீட்டர் அட்ஜஸ்ட் பண்ணி வைங்க என்றாள். அவனும் நானும் ஒரு ஹீட்டர் தான் என்றான். போதும் பிரேம் குமரன் விழித்துக்கொள்ள போகிறான் என்றாள். அங்கிருந்த பார்க் ஒன்றிற்கு விளையாட போனான் குமரன். இவனையும் அழைத்து போனான். குமரன் சறுக்கு மாதிரி இருந்த ஒன்றில் விளையாடினான். கீழே இறங்கும் போது அப்பா என குரல் கொடுத்துக்கொண்டே தாவினான். பிரேம் தடுமாறினாலும் அவனை கீழே விடவில்லை. நான் பிடித்துக்கொள்வேன் உன்னை நழுவ விடாமல் எப்போதும் என்றான்.

நிறைந்தது.. நன்றி! மீண்டும் சந்திப்போம்.. வணக்கம்..