Nerungi Vaa Devathaiye - 34 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நெருங்கி வா தேவதையே - Part 34

Featured Books
Categories
Share

நெருங்கி வா தேவதையே - Part 34

காமிரா மேன் ரவி, கூத்துபட்டறை நந்தினி,டைரக்டர் பிரவீனா மியூசிக் ஆல்பம் பற்றி டிஸ்கஸ் செய்தனர். மியூசிக் ஆல்பம் தலைப்பு வைக்க எல்லோருடைய ஆலோசனைகளையும் கேட்டிருந்தனர். காற்றே என் வாசல் வந்தாய் என்ற தலைப்பு எல்லோருக்கும் பிடித்திருந்தது. அதையே தலைப்பாக வைக்க தீர்மானித்திருந்தனர். ஒரு வாரம் ஆக்டிங் கோர்ஸ் நடத்த நந்தினி தீர்மானித்திருந்தாள் . பரஸ்பர அறிமுகங்களுக்கு பிறகு பூஜாவும், அருணும் சில காட்சிகளை நடித்து காட்டினர். அவர்களுக்கு சினிமா மொழியை சொல்லிக்கொடுத்தாள் நந்தினி. ஒரு சில சமயங்களில் பூஜாவோ, அருணோ உணர்ச்சிவசப்படும்போது அதை கண்ட்ரோல் செய்ய சொல்லிக்கொடுத்தாள். ராகவுக்கும், ரஷ்மிக்கும் நடிக்க ஆசையாக இருந்தது. ஆனால் அவர்கள் பெற்றோர் சம்மதம் தராததால் வெறுமே வேடிக்கை பார்த்தனர். முதல் நாள் கிளாஸ் முடிந்ததும் இருவரையும் கூப்பிட்டு பேசினாள் நந்தினி. நன்றாக நடிக்கிறீர்கள் ஆனால் நடிப்பது போல தெரிய கூடாது இன்னும் இயல்பாக இருக்க வேண்டும் என்றாள் . நான் சில முக பாவங்களுக்கு இன்னும் சில பயிற்சிகளை சொல்லித்தருகிறேன் அவற்றை நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து பாருங்கள் என்றாள்.

காற்றே என் வாசல் வந்தாய் என சொல்லி பார்த்துகொண்டான் ராகவ் . நாமளும் நடிச்சிருந்தா நல்லா இருக்குமே என்றாள் ரஷ்மி. உனக்கு ஆசை இருக்குற அளவுக்கு தைரியமில்லை . நீ என்னை குறை சொல்லாதே இப்போதே வேண்டுமானாலும் நான் நடிக்க தயார் என்றாள். ம் அதை விடு நாம் ஒரு ரெண்டு ஸீன் வந்து போகிறமாதிரி ஏற்பாடும் இருக்கிறது என்றான் ராகவ். அப்போ அதில் ஒரு கலக்கு கலக்குவோம் என்றாள் ரஷ்மி. நந்தினி எல்லோரையும் வர சொல்லியிருந்தாள். இன்று தென்றலும், சுகன்யாவும் கதையை சொல்ல போகிறார்கள். கதை சொல்லும் திறனும் அவசியம். இல்லாவிட்டால் எமோஷன் கிடைக்காது என்றாள் நந்தினி.ஆனால் நடித்துக்கொண்டே கதை சொல்ல வேண்டும் என்றும் சொன்னாள். இதைக்கேட்ட தென்றலும் சுகன்யாவும் நமக்கு எதுக்கு இதெல்லாம் என்றனர். எமோஷன் எல்லோருக்கும் முக்கியம் என்றாள் நந்தினி. முதலில் சாதாரணமாக கதை சொல்லுங்கள் பிறகு நடித்துகொண்டே கதை சொல்லுங்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. தென்றலும் சுகன்யாவும் கதை நன்றாக சொன்னார்கள். ஆனால் நடிப்புடன் சொல்வதற்கு தயங்கினார்கள். எதிர்பார்த்த பீலிங்க்ஸ் வரவில்லை. ராகவும், ரஷ்மியும் கதை சொல்லும்போதே சிறப்பாக சொன்னார்கள். ஓரளவு நடித்தும் காட்டினார்கள். ஜோ டான்ஸ் ஆடிக்காட்டினான். அவன் முக பாவத்தில் சில திருத்தங்களை சொன்னார்கள்.


என்ன இது ஆக்டிங் கோர்ஸ் இதெல்லாம் எதற்கு என்றான் ஜோ. நம்மை அழகாய் காட்டுவதற்கு என்றான் அருண். நீ லவ் பண்ணுவதற்கு நாங்கள் கஷ்டப்பட வேண்டுமா என்றான் சிரித்து கொண்டே. பிரதீபா பாடல் எழுதியிருந்தாள் . அதை அருண் கூட போனில் டிஸ்கஸ் செய்தாள். நீ நம்முடைய காலேஜ் வந்துவிடு ட்யூன் போடும்போது நீயும் இருந்தால் பாட்டில் திருத்தங்கள் மேற்கொள்ள வசதியா இருக்கும் என்றான். சரி நான் வருகிறேன் என்றாள் பிரதீபா.பிரவீனா ஜோ வை கூப்பிட்டனுப்பினாள். உனக்கு ஆக்டிங் கோர்ஸ் பிடிக்கவில்லை என்றால் ஆல்பத்தில் இருந்து விலகி கொள். எங்களுக்கு நல்ல அவுட்புட் தான் முக்கியம். நீ போய் உடனே கிருஷ்ணன் சாரை பார் நான் எல்லாம் சொல்லிவிட்டேன். அவர் மியூசிக் சென்டரில் உனக்காக காத்திருக்கிறார் என்றாள். ஜோவுக்கு ஆத்திரமாக வந்தது. அங்கே கதவு மூடப்பட்டு இருந்தது. கதவை தள்ளினான் . ஹாப்பி பர்த்டே டூ யு என்று எல்லோரும் வாழ்த்து பாடினார்கள். சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ் அன்று ஒரு புது கிடார் ஒன்றை பரிசளித்தார் கிருஷ்ணன். ஜோவுக்கு ஒன்றும் புரியவில்லை. சும்மாதான் பிரவீனா சொன்னார். நீ இல்லாமல் உன் டான்ஸ் இல்லாமல் ஆல்பம் இல்லை என்றார் கிருஷ்ணன்.

பிரதீபா வந்ததும் ட்யூன் போட ஆரம்பித்தான் அருண். பிரதீபா பாட்டின் வரிகளை எழுதினாள். பிரவீனா அதை
வாங்கி பார்த்தாள். அதை கேட்டுக்கொண்டு திருத்தங்கள் சொன்னாள். அருண் மொத்தம் 5 பாடல்கள். நீ ஒன்றும், பூஜா ஒன்றும், ரஷ்மி ஒன்றும், ராகவ் ஒன்றும் பாடுகிறார்கள். ஜோ அதோடு ஒன்று பாடுகிறான் என்றாள் . சிட்சுவேஷன் சொல்லி அதன் படி பாட்டு எழுதினாள் பிரதீபா. நன்றாக வந்திருக்கிறது பாட்டு என்றாள் பிரவீனா. ஒரு பாட்டு தான் தயார் செய்திருந்தான். இதை வைத்தே ஒரு ஒத்திகை பார்த்து விடுவோம் என்றாள் பிரவீனா. பூஜா சௌமியாவிடம் பேசினாள். என்ன மேம் இவ்ளோ கஷ்டமா இருக்கு என்றாள். அது அப்படித்தான் இன்னும் லைட்டிங் இருக்கிறது அவுட்டோர் இருக்கிறது நீ கடுமையாகத்தான் உழைத்தாக வேண்டும் என்றாள் சௌமியா. பிரவீனா மற்ற டெக்னீசியன்ஸ் எல்லாரையும் அரேஞ்ச் செய்தாள். ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர் போலவும் அவள் செயல்பட்டாள். பூஜா அருணிடம் பேசினாள் . இது வொர்கவுட் ஆகுமா என்றாள். இவ்வளவு தூரம் வந்த பிறகு ஏன் பயப்படுகிறாய் என்றான்.

ஒரு வார ஆக்டிங் கோர்ஸ் முடிந்ததும் நந்தினி திருப்தி தெரிவித்தாள் . இடையிடையில் சூட்டிங் வந்து பார்ப்பதாகவும் சொன்னாள். பூஜா அருண் அறிமுகமாகும் காட்சியை அன்று எடுத்தார்கள். இருவரும் ஸ்டிரேஞ்சர்ஸ் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றாள் பிரவீனா. மியூசிக் ஃபெஸ்டிவல் நடப்பதாக கற்பனை செய்து கொண்டு நடனம் ஆடுங்கள் என்றாள் பிரவீனா அந்த பாட்டு போடப்பட்டது. அருணும் பூஜாவும் சிறப்பாக ஆடினார்கள். வெரி குட் கீப் it அப் என்று சொன்னாள் பிரவீனா . காமிரா மேன் ரவி வெவ்வேறு கோணங்களில் அவற்றை பதிவு செய்தார். ஓகே நாளைக்கு போட்டோ ஷூட் இருக்கிறது. பூஜா அதில் நீ கொஞ்சம் அருண் உடன் நெருக்கமாய் இருக்கிற மாதிரி இருக்கும உனக்கு ஓகே தானே என்றாள் பிரவீனா. ஓகே மேம் என்றாள்.பூஜாவுக்கெனவும், அருணுக்கும் பிரத்யேக உடைகள் வாங்கப்பட்டு இருந்தது, இரவு பூஜா அருணுக்கு ஃபோன் செய்தாள். என்ன அருண் நெருக்கமான போட்டோ ஷூட் என்கிறார்கள் அப்பாவுக்கு தெரிந்தால் அவ்வளவுதான் என்றாள். இதைவிட கடைசியில் liplock ஸீன் ஒன்றும் இருக்கிறதாம் என்றான் அருண், நீ ரொம்ப மோசம் என்றாள். ஏற்கனவே நீ கொடுத்தது தானே அப்புறம் என்ன என்று சிரித்தான்.


ஒரு வழியாய் 5 பாட்டுக்களும் தயார் ஆனது எல்லாமே நன்றாக வந்திருந்தது. இனி ரெகார்டிங் போக வேண்டியதுதான் பாக்கி. அதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணன் செய்திருந்தார். முதல் பாட்டு ரஷ்மி பாடுவதாக இருக்கட்டும் என கிருஷ்ணன் சொன்னார். எல்லோருமே ரெகார்டிங் ஸ்டுடியோவுக்கு வந்து விட்டார்கள்.அதற்கு முன்பாக கோவிலுக்கு போய் எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டிக்கொண்டிருந்தார்கள்.முதலில் சில இடங்களில் சொதப்பினாலும் நன்றாகவே பாடி முடித்தாள் ரஷ்மி. பாட்டு நன்றாக வந்ததில் எல்லோருக்குமே திருப்தி. ரஷ்மி ராகவிடம் திரும்ப திரும்ப நான் எப்படி பாடினேன் என கேட்டுக்கொண்டிருந்தாள். எப்பவும் போலத்தான் சூப்பர் ஆக பாடினாய் என்றான். எல்லோருக்கும் இரண்டு நாட்கள் பிரேக் அளிக்கப்பட்டது. அதற்குள் பேக்ரவுண்ட் ஆர்டிஸ்ட்கள் மற்றும் ஆர்ட் வொர்க் சம்மந்தமான வேலைகள் முடியும் என சொன்னாள் பிரவீனா. பூஜா சற்று சோர்வாக இருந்தாள். என்னாச்சு பூஜா என்னவோ இந்த ஆல்பம் இவ்வளவு சிரமமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றாள் பூஜா.


ராகவ் liplock ஸீன் எல்லாம் இருக்கிறதாமே என்றான் சௌமியாவிடம். இது முன்பே தெரிந்தால் நீயே நடித்திருப்பாய் என்றாள் சௌமியா. அப்படி இல்லை மேம் என்றான் ராகவ். ஜோவுடைய பர்த்டேவை முன்னிட்டு எல்லோரையும் டின்னர் சாப்பிட ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தான். காமிரா மேன் ரவி, நந்தினி, பிரவீனா,கிருஷ்ணன், பிரதீபா எல்லோரையும் கூப்பிட்டு இருந்தான். என்னப்பா பெரிய ஏற்பாடாக இருக்கிறதே என்றார் கிருஷ்ணன். நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு முன்னால் இது வெறும் சின்ன பார்ட்டி தான் என்றான். எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஜோ வுடைய பாட்டும் நடனமும் நன்கு பேசப்பட வேண்டும் என்று பிரவீனா சொல்லிக்கொண்டிருந்தாள். பூஜாவுக்கு தன் அப்பாவை பார்க்க வேண்டும் போல இருந்தது, சௌமியாவிடம் அதை சொன்னாள். ஏற்பாடு செய்கிறேன் என்றாள். சூட்டிங் துவங்கலாம் என முடிவு செய்தார்கள். துவங்குவதற்கு முன் பூஜை போட்டார்கள். பூஜா அப்பா காரில் வந்திரங்கினார். பூஜா ஓடிச்சென்று அவரை கட்டிக்கொண்டாள். நேற்றுதான் சௌமியா மேம் சொன்னார்கள். அதுதான் வந்துவிட்டேன் என்றார். எல்லோருக்கும் அவளுடைய அப்பாவை அறிமுகம் செய்து வைத்தாள்.

சூட்டிங் துவங்கியது. இருவரது அறிமுக ஸீன் என்பதால் கொஞ்சம் டென்ஷன் ஆகவே இருந்தாள் பிரவீனா கூடவே நந்தினியும்.நந்தினி எதிர்பார்த்தது போல இருவரும் கூச்சமின்றி நடித்தனர். பூஜா அப்பாவுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. அருண் கூட நெருக்கமான ஸீன் இருக்குமா என விசாரித்தார் பிரவீனாவிடம். அதெல்லாம் தேவையை பொறுத்தது என்றாள் பிரவீனா. அடுத்து தென்றல் , சுகன்யா பேசிக்கொள்ளும் காட்சியை எடுத்தார்கள். அவர்கள் கூட பூஜா, அருண் பேசும் காட்சியை எடுத்தார்கள். அந்த நாள் அத்தோடு முடிவடைந்தது. ஜோ உன்னிப்பாக எல்லவற்றையும் கவனித்து கொண்டிருந்தான். காற்றே என வாசல் வந்தாய் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் படப்பிடிப்பில் வளர்ந்து வந்தது. எடுத்த வரை வீடியோவை எல்லோரும் சேர்ந்து பார்த்தார்கள். கொஞ்சம் விறுவிறுப்பு குறைவாக இருப்பதாக கிருஷ்ணன் நினைத்தார். அதரக்காக ஜோ இடையில் வரும் ஸீன்களை கடைசியில் சேர்த்து கொள்ளலாம் என்று காமிராமேன் ரவி சொன்னார். சரி அப்படியே பிரதீபாவையும் end கிரெடிட்ஸ் போடும் போது காட்ட முடியுமா என கேட்டார். நிச்சயமாக என்றார் ரவி.