Nandhavanam - 6 in Tamil Love Stories by Narumugai books and stories PDF | நந்தவனம் - 6

Featured Books
  • अनकही मोहब्बत - 7

    ‎‎ Part 7 -‎‎Simmi के पास अब बस कुछ ही दिन बचे थे शादी के।‎घ...

  • डायरी

    आज फिर एक बाऱ हाथों में पेन और और डायरी है, ऐसा नहीं की पहली...

  • उड़ान (3)

    उसने दस-बाय-दस का एक कमरा ले लिया। एक खिड़की, एक बल्ब, एक गैस...

  • मां... हमारे अस्तित्व की पहचान - 6

    चिड़िया दोबारा आती है और आसु के करीब से पंख फड़फड़ाते हुए नि...

  • पवित्र बहु - 2

    ⭐ ▲ चित्रा की पहली शादी — दर्द, अपमान और टूटनचित्रा की शादी...

Categories
Share

நந்தவனம் - 6

அதன்பின் வந்த நாட்கள் நந்தனாவிற்கு சவாலாக இருந்தது, அர்ஜுனின் அருகில் இருந்து கொண்டு முகத்தில் எதுவும் காட்டாமல் இருக்க போராட வேண்டியிருந்தது. அதையும் மீறி  சிலசமயம் அவனைப் பார்த்தது பார்த்தமாதிரி நிற்பவளை கதிர் தான் மண்டையில் தட்டி நிகழ்காலத்திற்கு இழுத்துவருவான். விளம்பர படப்பிடிப்பு, எடிட்டிங், போஸ்ட் புரொடக்ஷன், என்று நாட்கள் பறந்தன. அரவிந்த் ஒரு முக்கியமான கேஸ் விஷயமாக அலைந்து கொண்டிருந்தான், அதனால் அவன் நந்தனாவை பார்ப்பது அரிதாகி போனது, இந்த கேஸ் முடிந்த கையோடு நந்தனாவிடம் மனதில் உள்ளதை சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தான். யாழினிக்கும், நந்தனாவிற்கும் உள்ள நெருக்கம் அரவிந்திற்கு திருப்தியாக இருந்தது. நந்தனாவிடம் தன் மனதை சொல்லப்போகும் நாளுக்காக காத்திருந்தான். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கும். பார்ப்போம் யாரு நினைப்பது நடக்குதென்று.

நந்தனா தன்னோட விளம்பர தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் இருந்தபோது, விக்டரி குரூப் ஆப் கம்பனிஸ் நந்தனா கம்பனியுடன் விளம்பர ஒப்பந்தம் போட அழைத்தனர். விக்டரி குரூப் ஆப் கம்பனிஸ் இந்திய அளவில் மிகவும் புகழ் பெற்ற கம்பெனி, சிறிதுகாலமாக வெளிநாடுகளிலும் தங்களது கிளைகளைப் பரப்ப தொடங்கி  இருந்தது. அந்தக் கம்பெனியின் அழைப்பு அர்ஜுனுக்கும், அவனது MD க்கும்  மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களது  MD, அர்ஜுனையும், நந்தனாவையும் சென்று ஒப்பந்தம் சம்மந்தமாக விஷயங்களைப் பேசிவர சொன்னார். காரில் செல்லும்போது அர்ஜுன் நந்தனாவிடம் விக்டரி குரூப் ஆப் கம்பனிஸ் பற்றி பேசிக்கொண்டு வந்தான், அவன் கூறியதில் இருந்து அந்த கம்பெனியின் உயரம் அவளுக்கு புரிந்தது. அங்கு அவர்கள்  அந்த கம்பெனியின் MD ராகேஷ்யை சந்தித்தனர். உள்ளே நுழைந்தவர்களை வரவேற்ற ராகேஷ், நந்தனாவை பார்த்த பார்வையை எதிரில் இருந்த இருவரும் விரும்பவில்லை.

தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு அர்ஜுன் ஒப்பந்த விஷயங்களைப் பேசத் தொடங்கினான், அர்ஜுன் சொல்வதைக் கேட்டு கொண்டிருந்தாலும் ராகேஷின் பார்வை நந்தனாவை மொய்த்துக்கொண்டிருந்தது. நந்தனாவிற்கு அவனது கண்ணை நோண்டிவிட வேண்டும்போல் இருந்தது, சூழ்நிலை கருதி அமைதியாக இருந்தாள். அவங்க பேசமாட்டாங்களா என்று நந்தனாவை காட்டி கேட்டான் ராகேஷ். உள்ளே நுழைந்ததில் இருந்து ராகேஷின் பார்வையை அர்ஜுன் கவனித்து கொண்டுதான் இருந்தான், முடிந்தவரைக்கும் நந்தனாவை மறைத்த மாதிரி அமர்ந்துதான் பேசிக்கொண்டிருந்தான். திடீரென ராகேஷ் இப்படி கேட்கவும் அவனை நிதானமாக பார்த்தவன் இவங்க எங்க கிரியேட்டிவ் டீம் லீடர் விளம்பரங்களுக்கான உங்களோட எதிர்பார்ப்புகளை தெரிஞ்சுக்கிட்ட ஒர்க் பண்ண ஈஸியாக இருக்குனு கூட வந்துஇருக்காங்க அவங்க ஒர்க் ஸ்டார்ட் பண்ணணுனா நீங்க முதல  என்கிட்ட ஒப்பந்தத்தை பேசிமுடிக்கனும் என்று சற்று அழுத்தமாக சொன்னான் அர்ஜுன். வேறு வழியில்லாமல் அவனுடன் மேற்கொண்டு பேசத் தொடங்கினான் ராகேஷ். எனக்கு எல்லாம் ஓகே Mr. அர்ஜுன் ஆனா, எங்க சைடுல இருந்து ஒரு கண்டிஷன் இருக்கு, எங்களுக்கு நீங்க தயாரிக்குற விளம்பரங்களுக்கு நா ஏற்கனவே ஹீரோயின் முடிவு பண்ணிட்டேன் என்று சொல்லி, ஹீரோயினை அறிமுகப்படுத்தினான் ராகேஷ். தங்களை கர்வமாக பார்த்தபடி உள்ளே வந்த துர்காவை கண்டு அர்ஜுனிற்கும், நந்தனாவிற்கும் இவளா என்று இருந்தது.

அங்கு துர்கா என்று ஒருத்தி இருப்பதாகவே மதிக்காமல் அர்ஜுன், ராகேஷிடம் திரும்பி நம்ப இன்னும் எந்த ஒப்பந்தமும் செய்துக்கல முழுசா பேசி முடிச்சுட்டு அதுக்கப்புறம் அறிமுகப்படலத்தை வெச்சுக்கலாம் என்றான். அதுவும் சரிதான் என்று நந்தனாவைப் பார்த்துக்கொண்டே சொன்னவன், துர்காவை வெளியில் காத்திருக்க சொன்னான். வெளியில் வந்த துர்கா தான் இந்த வாய்ப்பை அடைந்ததை பற்றி யோசித்துக்கொண்டிருந்தாள் ராகேஷ்  அவனுடைய சில கிளைன்டை கவர்வதற்கு துர்காவைப் பயன்படுத்தி இருக்கிறான். அதை பயன்படுத்தி ராகேஷ் அர்ஜுன் கம்பெனியோடு போடப்போகும் ஒப்பந்தத்தில் தான்தான் ஹீரோயினாக இருக்க வேண்டும் என்று கேட்டாள். அதனால் தனக்கு எந்த நஷ்டமும் வரப்போவது இல்லை என்று கணக்கிட்ட ராகேஷ் அதற்கு சம்மதித்தான். அர்ஜுன் தன்னை இதில் இருந்து விலக்க எதுவும் செய்வானென்று அவளுக்குத் தெரியும், ஆனால் ராகேஷ் எப்படியும் அர்ஜுனை ஒத்துக்க வைத்துவிடுவான் என்று அவள் நம்பினாள், ஆனால் உள்ளே நடந்ததோ வேறு.

துர்கா எண்ணியதை போல அர்ஜுன் ராகேஷ்யிடம் சார் உங்களுக்கு நீங்க எதிர்பாக்குறத விட பெட்டர் ஹீரோயின் வெச்சு விளம்பரங்களை முடிச்சு தரோம், நீங்க செலக்ட் பண்ணி இருக்க ஹீரோயின் வேண்டாம் என்றான், நந்தனாவை பார்த்த ராகேஷ் நீங்க சொல்றதுக்கு நான்  ஒதுக்குறேன். துர்கா வேண்டாம், அதுக்குபதில உங்க டீம் லீடர் நடிக்கட்டும் எவளோ ரேட் கேக்குறீங்களோ கொடுக்குறேன். அவன் சொன்ன விதம் அவன் நடிக்க மட்டும் ரேட் பேசவில்லை என்று உணர்த்தியது. நந்தனாவால் தன் காதுகளில் விழுந்ததை சகித்துக்கொள்ள முடியவில்லை அருவருத்து போனாள். உங்க கூட ஒப்பந்தம் போட எங்களுக்கு இஷ்டம் இல்ல, நீங்க வேற கம்பெனி பாத்துக்கோங்க என்று சொல்லி நந்தனாவுடன் வெளியேற முனைந்தான் அர்ஜுன். அதை நீங்க முடிவுசெய்ய முடியாது அர்ஜுன் என்று சொன்ன ராகேஷ்யை தீர்க்கமாக பார்த்தவன் எனக்கு அதுக்கு அதிகாரமும் இருக்கு தைரியமும் இருக்கு என்று சொல்லி அங்கிருந்து வெளியேறினான்.

தன்னைக் கடந்து வேகமாகச் சென்ற அர்ஜுனைப் பார்த்த துர்கா என்ன நடந்தது என்று அறிய உள்ளே சென்றாள். அங்கே அடிபட்ட புலியாக உறுமிக்கொண்டிருந்தான்  ராகேஷ், அவனிடம் யாரும் இதுவரை இவ்வளவு தைரியமாகப் பேசியதில்லை. தன்னை அவமதித்து சென்ற அர்ஜுனை சும்மாவிடக்கூடாது என்று தனக்குள்ளயே கருவிக்கொண்டான். உள்ளே வந்த துர்காவைப் பார்த்ததும் அர்ஜுனைப் பழிவாங்கவும் நந்தனாவை அடையவும் இவள்தான் சரியான ஆள் என்று முடிவு செய்தான்.

அங்கிருந்து வெளியில் வந்ததில் இருந்து நந்தனா அமைதியாகவே இருந்தாள். மனதுக்குப் பிடித்தவனோடு வெளியில் போகும் மகிழ்ச்சியில் காலையில் கிளம்பி வந்தாள். அலுவலகத்தில் இருப்பதுபோல இறுக்கமாக இல்லாமல் தோழனை போல அருகில் அமர்ந்து பேசிக்கொண்டு வந்தவனை இரசித்துக்கொண்டிருந்தாள் நந்தனா. ஆனால் இப்பொழுது எதுவும் அவளது எண்ணத்தில் இல்லை, ராகேஷ் பேசியதே அவளது மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அர்ஜுன் அவளையே பார்த்துக்கொண்டு கார் ஒட்டிக்கொண்டிருந்தான்.  அதுகூட அவளது கவனத்தில் பதியவில்லை. இவ இப்படி அமைதியா இருந்த நல்லாவே இல்ல, இவள இப்படியே விட்டுடக்கூடாது என்று எண்ணிய அர்ஜுன், மரங்கள் அடர்ந்த இடத்தில் காரை நிறுத்தினான். என்ன  ஆச்சு ஏன் இங்க நிறுத்தி இருக்கீங்க, என்ன ஆச்சுனு நீதான் சொல்லனும் இப்ப என்ன நடந்துடுச்சுனு இப்படி இருக்க, எவனோ என்னமோ பேசுனா அதுகெல்லா மூட் அவுட் ஆவாங்களா?, இதே நான், கதிர் மாதிரி ஆளுங்க மாட்டுன எவளோ பேசுற, நான் கூட அதெல்ல பாத்து நீ ரொம்போ தைரியமான பொண்ணுனு நெனச்சேன். இப்ப என்னடானா எவனோ எதோ சொல்லிட்டானு இப்படி உக்காந்து இருக்க.

அவன் சொன்னது எதுமே இல்லைனு சொல்றீங்களா? அது எடுத்துக்குறத பொறுத்து, என்ன  பொருத்தவரைக்கு ரோட்ல குலைக்குற நாய்க்கு நான் இவளோ மரியாத குடுக்க மாட்டேன். ஹ்ம்ம் நீங்க சொல்றது சரிதான் பாஸ், என்ன சுத்தி இப்பவரைக்கு நான் சந்திச்ச எல்லா ஆண்களும் ரொம்போ நல்லவங்க, பெண்களை மதிக்க தெரிஞ்சவங்க. என்னோட அப்பா, அண்ணன், கதிர், என் டீம் நண்பர்கள், நீங்க இப்படி எல்லாரும் ரொம்போ நல்லவங்க. நீங்களே சொன்ன மாதிரி உங்களையெல்லா மிரட்டிகிட்டு ஜாலியா இருந்துட்டேன். அவன் அப்படி சொன்னத என்னால ஜீரணிக்கவே முடியல. நந்தனா உன்ன சுத்தி இவளோ நல்லவங்க இருக்காங்க. இவன மாதிரி ஆள் எல்லா உன்ன எதுவும் செஞ்சுட முடியாது  ரிலாக்ஸ் என்றான். அதை கேட்ட நந்தனாவின் முகத்தில் காதல் குடிகொண்டது. அவன் திரும்பி இவளை பார்க்கவும், பார்வையை வேறுபுறம் திருப்பிக்கொண்டாள்.

பின் எதோ நினைத்தவளாக அவனிடம், நான் வராம இருந்துஇருந்தா இந்த ப்ராஜெக்ட் நம்ப கம்பனிக்கு கிடைச்சு இருக்கும், நீங்க கூட இந்த ப்ராஜெக்ட் கிடைக்கனுன்னு ரொம்போ எதிர்பார்ப்போடு இருந்தீங்களே, நீ புத்திசாலின்னு நெனச்சு இருந்தா இவளோ மக்கா இருக்க, இன்னைக்கு இல்லைனாலும் நாளைக்கு உன்ன பாக்குறப்ப இவன் இப்படித்தான் நடந்துக்க போறான். இவனை நம்பி எப்படி ப்ராஜெக்ட் பண்றது, பிரச்சனை நீ இல்லை அந்த ராகேஷ், நீ தேவையில்லாம யோசிக்காத. வீட்டை விட்டு வெளில வந்து வேல செய்யற  பெண்கள் கூட  வேல செய்ற ஆண்களை நம்பித்தான் வராங்க. அந்த நம்பிக்கைய நாங்க காப்பாத்தனுல, இந்த மாதிரி ஆயிரம் ப்ராஜெக்ட் வரும் பார்த்துக்கலாம் விடு. என்றவனை முன்னிலும் அதிகமா நந்தனாவிற்கு பிடித்து இருந்தது.

என்ன மேடம் அமைதியா இருக்கீங்க என்று கேட்டவனை பார்த்து தாங்க்ஸ் என்றாள். ஒரு சிறு புன்னகையோடு அதை ஏற்றுக்கொண்டவன் வண்டியை ஸ்டார்ட் செய்தான். அவளுக்கான முதல் புன்னகை, நந்தனா மிகுந்த சந்தோஷத்தில் இருந்தாள், அவள் மனதில் பாடல் வரிகள் ஓடின

 

ஒன்னே ஒன்னு சொல்லணும்

உன் முகத்தை பாத்து சொல்லணும்

தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா?

நாணம் மாறி போனதே

என் நளினம் கூடி போனதே

அது தெரிந்தால் நீயே சொல்ல கூடாதா

 

அர்ஜூனே காதலை சொன்ன நன்றாக இருக்கும் என்று எண்ணினாள். அர்ஜுன் பற்றிய எண்ணத்தில் வந்தவள், கதிரிடம் நடந்தவற்றை சொல்லவேண்டாம் என்று அவனை எச்சரிக்க மறந்து போனாள். MD யிடம் நடந்தவற்றை சொல்ல சென்ற அர்ஜுன், அங்கு தற்போது முடிக்கும் தருவாயில் இருக்கும் விளம்பரங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்த கதிர் முன்னிலையிலேயே நடந்தவற்றை சொன்னான்.

MD அர்ஜுன் சொன்னதை கேட்டு கோபம்கொண்டவராக, இவன்கூட பிசினெஸ் செய்ய நினைச்சது நம்ப தப்பு, நீங்க செஞ்சது சரிதான் என்றவர், நந்தனா தற்போது எப்படி இருக்கிறாள் என்று விசாரித்தார், அவள் நன்றாக இருப்பதாக கூறி அங்கிருந்து வெளியேறினான். அர்ஜுன் சொன்னதைக் கேட்டு கோவத்தின் உச்சத்தில் இருந்த கதிர், MD யிடம் சிறிதுநேரத்தில் வருவதாகக் கூறி வெளியில் வந்து நேராக நந்தனாவிடம் சென்றான்.

இன்னைக்கு மீட்டிங் எப்படி போச்சு என்றான், நந்தனாவோ ஒன்னு நல்லா போகல. பாஸ்க்கு அவங்க கண்டிஷன்ஸ் பிடிக்கல அதனால வேண்டான்னு சொல்லிட்டு வந்துட்டோம் என்றாள். அவ்ளோதான் நடந்துச்சா என்றவனை, பார்த்தவள் வேற என்ன அவ்ளோதான் என்று இழுத்தாள். அவள் கைபிடித்து அர்ஜுன் ரூமிற்கு கூட்டிசென்றவன் இப்ப சொல்லு அங்க என்ன நடந்துச்சு என்றான்.  என்ன ஆச்சு கதிர் ஏன் இவ்ளோ கோவமா இருக்க என்றான் அர்ஜுன் , சார் நீங்க MD கிட்ட சொன்னதெல்லா உண்மையா என்றான். நந்தனா அவனை பார்த்து சொல்லாதே என்பதைப்போல தலை அசைத்தாள், சார் என்ன பாத்து சொல்லுங்க நீங்க சொன்னது உண்மையா என்றான் கதிர், ஆமா என்று தலையசைத்தான் அர்ஜுன். நந்தனாவை பார்த்து முறைத்த கதிர் அங்கிருந்து வெளியில் செல்ல சென்றான், அவன் கைபிடித்து தடுத்தவள் நீ எங்கயும் போக கூடாது முடிஞ்ச பிரச்சனையை திரும்ப ஆரம்பிக்காத என்று கெஞ்சினாள், நந்து கையவிடு அவன சும்மா விட சொல்றயா எனக்கு அவன கொண்ணாதான் ஆத்திரம் அடங்கும் என்றான்.

நந்தனா ஏதோ சொல்வதற்குள், போங்க கதிர் நான் வேணா ட்ராப் பண்ணட்டுமா என்றான் அர்ஜுன், சார் கிண்டல் பண்றீங்களா அவன் கேட்டதுக்கு அவன சும்மா விட சொல்றீங்களா என்று கோவம் அடங்காத குரலில் கேட்டான். நான் சொல்லித்தான் உங்களுக்கு நடந்தது தெரியும், நேருல இருந்த எனக்கு எவ்வளோ கோவம் இருந்துச்சுனு உங்களுக்கு தெரியுமா, நான் அமைதிய வந்தது அவனுக்கு பயந்து இல்ல, நாலு சுவருக்குள்ள அவன் கேட்ட கேள்வி எல்லாருக்கும் தெரிய வந்திடக் கூடாதுன்னுதான். அவன்கிட்ட இருக்க பணம் எந்த உண்மையையும் பொய்னு மாத்திடும், நீங்க போய் இப்ப சண்டைபோட்ட பாதிக்கப்படபோறது நந்தனா தான். உங்களுக்கு அதுதான் வேணுமா என்று கதிரின் கோவத்துக்கு சற்றும் குறையாத கோவத்தோடு கேட்டான் அர்ஜுன்.

அர்ஜுன் சொல்லுவதில் இருந்த உண்மை புரிய எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்றான் கதிர். கதிர் எங்கப்போற என்று கேட்ட நந்தனாவிடம் கொஞ்ச நேரம் தனியா இருக்கனும் வேற எங்கயும் போகல பயப்படாத என்று சொல்லிவிட்டு  போனான்.

சாரி பாஸ் கதிர் கிட்ட சொல்லிடாதீங்கன்னு உங்ககிட்ட சொல்லனுனு நினைச்சேன் மறந்துட்டேன் என்றாள் நந்தனா. கதிருக்கு இவளோ கோவம் வருமா என்னால நம்பவே முடியல என்று ஆச்சரியமாக கேட்டான் அர்ஜுன், இவன் மேல ஒரு போலீஸ் கேஸ் இருக்குனு சொன்னா நம்புவீங்களா, நாங்க காலேஜ் படிக்கும்போது ஒருத்தன் என்ன தப்ப பேசிட்டானு சொல்லி அவனை அடிச்சு கைய உடைச்சிட்டான். கேஸ் முடிச்சு அந்த பிரச்சனைய முடிக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. அதனாலதான் கதிர் கிட்ட இதை சொல்லக்கூடாது நினைச்சேன். தாங்க்ஸ் பாஸ் நீங்க இல்லைனா அவனை என்னால கண்டிப்பா தடுத்து இருக்க முடியாது என்று சொன்ன, நந்தனா அங்கிருந்து சென்றுவிட்டாள். அர்ஜுனிற்கு கதிர், நந்தனாவிடையே உள்ள அந்த அழகான நட்பை பார்த்து பொறாமையாக இருந்தது. இந்த மாதிரி உறவுகள் நமக்கும் இருந்து இருந்தா நல்ல இருக்குனு ஏங்கினான்.