Nandhavanam - 8 in Tamil Love Stories by Narumugai books and stories PDF | நந்தவனம் - 8

Featured Books
  • उड़ान (5)

    दिव्या की ट्रेन नई पोस्टिंग की ओर बढ़ रही थी। अगला जिला—एक छ...

  • The Great Gorila - 2

    जंगल अब पहले जैसा नहीं रहा था। जहाँ कभी राख और सन्नाटा था, व...

  • अधुरी खिताब - 52

    एपिसोड 52 — “हवेली का प्रेत और रक्षक रूह का जागना”(सीरीज़: अ...

  • Operation Mirror - 6

    मुंबई 2099 – डुप्लीकेट कमिश्नररात का समय। मरीन ड्राइव की पुर...

  • नेहरू फाइल्स - भूल-87

    भूल-87 ‘सिक्युलरिज्म’ बनाम सोमनाथ मंदिर (जूनागढ़ के लिए कृपया...

Categories
Share

நந்தவனம் - 8

அர்ஜுனை அங்கு பார்த்ததில் ஏற்பட்ட அதிர்ச்சி குறைய நந்தனாவிற்கு சில நிமிஷங்கள் எடுத்தது. அந்த சமயத்தில் டாக்டர் அழைத்தார் என்று நர்ஸ் வந்து சொல்ல, அர்ஜுனும், அரவிந்தும் டாக்டரை பார்க்க சென்றனர். அவர்கள் சென்றவுடன் கதிர் நந்தனாவிடம், நந்து கிளம்பு போலாம் என்றான். எங்க? வீட்டுக்கு போலாம் என்றான் கதிர், அப்ப யாழினி என்றவளை நேராக பார்க்காமல் அதுதான் அவளோட அப்பா இருக்காரே என்று சுவரை பார்த்தபடி கூறினான். நீ சொல்லுறத புரிஞ்சு தான் சொலிறிய கதிர்? நான் வரல, யாழினி கண் முழிச்சா என்ன தேடுவாள். அவள என்னால ஏமாத்த முடியாது என்றாள். அப்படினு சொல்லி உன்ன நீ ஏமாத்திக்கபோறயா, என்றவனை கண்ணில் வலியுடன் பார்த்தாள் நந்தனா. தன் தோழியின் வலியை காண பிடிக்காமல், இப்ப நான் என்ன செய்யனும்? கூட இருபோதும் என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள். இப்போதைக்கு யாழினி தான் முக்கியம் என்று எண்ணி கதிரும் அமைதியாக அவள் அருகில் அமர்ந்தான்.

வெளியில் வந்த அர்ஜுன் நேராக நந்தனாவிடம் வந்து யாழினி உன்கிட்ட எதாவது சொன்னாளா? என்றான், அரவிந்த் முன்னாடி எதுவும் சொல்ல வேண்டாம் என்று எண்ணி தனியா பேசலாமா என்று கேட்டாள் நந்தனா. சரி என்று சொல்லி சற்று தள்ளி வெளியில் இருந்த மரத்தடிக்கு சென்றனர். அர்ஜுன், நந்தனா செல்வதை பார்த்துக்கொண்டிருந்த அரவிந்த், கதிர் இருவரும் வேறுபட்ட சிந்தனையில் இருந்தனர். இனி தன் தோழியின் நிலை என்ன என்ற கலக்கத்தில் இருந்தான் கதிர், நந்தனாவிடம் தன் காதலை சொல்ல முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்தான் அரவிந்த். அங்கு நந்தனாவின் நிலையோ வேறாக இருந்தது. தனக்குள் ஏற்பட்ட அதிர்ச்சி வெளியில் தெரியாது எப்படி அர்ஜுனிடம் பேசுவது என்று தனக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அர்ஜுனின் சிந்தனை முழுவதும் டாக்டர் சொன்னதையே எண்ணிக்கொண்டிருந்தது, அதிகப்படி ஸ்ட்ரெஸ் தான் யாழினியின் வலிப்புக்கு காரணம் மீண்டும் ஒருமுறை இதுபோல வந்தால் அது அவளது உயிருக்கே ஆபத்தாகலாம் என்று டாக்டர் சொல்லி இருந்தார் அந்த செய்தி அர்ஜுனை நிலைகுலைய செய்தது. இப்படி அனைவரையும் பலவித மன போராட்டத்தில் விட்டுவிட்டு ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள் யாழினி.

சில நிமிட அமைதிக்கு பிறகு பேச தொடங்கினாள் நந்தனா, அர்ஜுன் யாழினி என்கிட்ட என்ன சொன்னானு நான் உங்களுக்கு சொல்றதுக்கு முன்னாடி யாழினிய பற்றி முழுதும் எனக்கு நீங்க சொல்லுங்க. யாழினிக்கு வலிப்பு வருங்குற விஷயத்தை கூட நீங்க வீட்டுல சொல்லல. அதுக்கு என்ன காரணம் என்று நந்தனா கேட்க, யாரிடமாவது மனம் விட்டு பேசினால் நன்றாக இருக்கும் என்று நினைத்த அர்ஜுன், அவளிடம் யாழினி பற்றி சொல்ல தொடங்கினான். யாழினி பிறந்த உடனே அவளோட அம்மா இறந்துட்டாங்க, எங்க பொண்ண கொன்னுட்டு பிறந்த இந்த குழந்தைக்கும் எங்களுக்கு எந்த சம்மந்தமும் இல்லைனு சொல்லிட்டு போயிட்டாங்க ஸ்வாதியோட அப்பா அம்மா, ஓ! அர்ஜுன் மனைவி பெயர் ஸ்வாதியா, என்று நினைத்த நந்தனா, எந்த இடத்திலும் அர்ஜுன் ஸ்வாதியை மனைவி என்றோ, அவள் பெற்றோரை அத்தை, மாமா என்றோ கூறவில்லை என்பதை கவனிக்க தவறவில்லை. தன்னோட சிந்தனையில் இருந்து வினாடியில் வெளியில் வந்து அர்ஜுன் சொல்வதை கவனிக்க தொடங்கினாள். கை குழந்தையா இருந்த யாழினிய எங்க அம்மா தான் பாத்துக்கிட்டாங்க. யாழினிக்கு மூனு மாசம் இருக்கும் போது  ஒரு நாள் நான் ஆஃபிஸில் இருந்து சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்டேன். வீட்டுக்குள்ள நுழையும்போது எங்க அம்மா, அப்பாகிட்ட போன மகராசி இந்த குழந்தையையும் கூடவே கூட்டி போயிருந்தா என் பையன் வாழ்க்கையாவது நல்ல இருந்து இருக்கும். இப்ப பாருங்க என் பொண்ணுதான் எனக்கு எல்லாம் அப்படினு சொல்லிட்டு சுத்திட்டு இருக்கான் என்று சொல்லிட்டு இருந்தாங்க. அவங்க பேசுனத கேட்டு எனக்கு ரொம்போ அதிர்ச்சிய இருந்துச்சு இனி யாழினி அவங்ககிட்ட வளரக்கூடாதுனு முடிவு பண்ணி நானே டெல்லிக்கு மாத்திகிட்டு யாழினியும் கூட்டிகிட்டு போயிட்டேன். அங்க யாழினியப் பாத்துக்க ஒரு வயசான அம்மாவ வீட்டோட வேலைக்கு வைச்சேன். எல்லாம் நல்லா தான் இருந்துச்சு யாழினி 5 வயசுல ஸ்கூல் போக ஆரம்பிச்சா, அப்பதான் யாழினிக்கு பிரச்சனை வர ஆரம்பிச்சுது.

நானும், அவள பாத்துக்குற பாட்டியும்தான் உலகம் என்று இருந்த யாழினிக்கு ஸ்கூல்ல கூட இருக்க பசங்க மூலம வீட்டுல அம்மா இருப்பாங்க, லீவுக்கு தாத்தா, பாட்டி வீட்டுக்கு போவாங்க, இப்படி எல்லா உறவுகளும் அறிமுகம் ஆக ஆரம்பிச்சுது. என்கிட்ட இதைப்பத்தி எல்லாம் கேள்வி கேட்க தொடங்குன யாழினிக்கு பதில் சொல்ல என்னால முடியல, வாய்க்கு வந்தத சொல்லி சமாளிச்சேன். ஆனா அதெல்லாம் அவள மனசளவில் ரொம்போ பாதிச்சிருக்குனு நான் உணரத்துக்கு முன்னாடியே நிலைமை கை மீறி போயிடுச்சு. ஒருநாள் ஸ்கூல்ல இருந்து போன் வந்துச்சு யாழினிக்கு வலிப்பு வந்து ஹாஸ்பிடல்ல இருக்கானு, அவங்க சொன்னது கேட்டு ஏற்பட்ட அதிர்ச்சியில இருந்து வெளியில வந்து ஹாஸ்பிடல் போன எனக்கு, டாக்டர் அடுத்த அதிர்ச்சிய குடுத்தாரு.

யாழினிக்கு வலிப்பு வர கரணம் அதிகப்படி ஸ்ட்ரெஸ். அப்படி சொன்னப்ப எனக்கு எதுமே புரியலை ஸ்ட்ரெஸ் வர வயசா இது அப்படினு கேட்ட என்கிட்ட டாக்டர் அதே கேள்விய திருப்பி கேட்டாரு, நானு அதுதான் கேக்குறேன் அர்ஜுன் இந்த வயசுல எப்படி யாழினிக்கு இவ்வளவு ஸ்ட்ரெஸ், நீங்க தான் அதுக்கு பதில் சொல்லனுனு சொன்னாரு. எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. டாக்டர் கவுன்சலிங் ஏற்பாடு  செஞ்சாரு அதுமூலம்தான் யாழினிக்கு அம்மா இல்லாதது, குடும்ப உறவுகள் இல்லாதது, கூட படிக்குற பசங்க உனக்கு யாருமே இல்லையானு கேக்குறது எல்லாம் சேர்ந்து மனஅழுத்ததை குடுத்திருக்குனு  தெரிஞ்சிது. யாழினிக்கு தேவை குடும்ப சூழ்நிலைனு டாக்டர் சொன்னாரு, திரும்ப சென்னை வந்துடுறத பத்தி நான் யோசிச்சுட்டு இருக்கப்பவே யாழினிக்கு அடுத்த வலிப்பு வந்துச்சு. அதுக்கப்புறம் கொஞ்சம் கூட யோசிக்காம வேலைய மாத்திக்கிட்டு யாழினிய கூட்டிகிட்டு இங்க வந்துட்டேன். என்கிட்டயே ஒட்டிக்கிட்டு இருந்த யாழினி இங்க அரவிந்த் கிட்டதான் முதல்ல ஓட்டிகிட்டா, 5 வருசமா யாழினிய பாக்காத அரவிந்தும் அவள பாத்துக்குறது, கூட விளையாடுறது, ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறதுனு அவன்கூடவே அவள வெச்சுக்க ஆரம்பிச்சுட்டான், அது யாழினிக்கு ஒரு வகையில் நல்லதுனு நானும் விட்டுட்டேன். இந்த பிஞ்சு வயசுல யாழினிக்கு நடந்தவற்றைக் கேட்ட நந்தனாவிற்கு அவளை மீறி அழுகை வந்தது. கண்களில் வழியும் கண்ணீரைத் துடைக்கக் கூட மறந்து, யாழினி பற்றியச் சிந்தனையில் நின்றாள். தீடீரென்று ஏதோ தோன்றியவளாக அர்ஜுனைப் பார்த்து 5 வருசமா உங்க வீட்டுல இருந்து யாரும் டெல்லி வந்து உங்கள பார்க்கலயா? என்று கேட்டாள். நான்தான் யாரையும் வரவேண்டானு சொல்லிட்டேன். என் பொண்ணு பொறக்காம இருந்து இருந்தா நல்ல இருந்திருக்குனு பேசுனவீங்கள என்னால மன்னிக்க முடியலை. என்று சொன்னவனின் குரல், நந்தனாவின் மனிதிற்குள் ஆழமாக ஊடுறுவியது.