என்றோ ஒருநாள் ஏறெடுத்து பார்த்தேன் என்பதற்காக என்னை பைத்தியமாக்கிட்டாயே! உன்னைக்காணும் ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா ஆனந்தம் என்னைஅறியாமலே! என்ன செய்வது அடிமையாகிட்டேன் நித்தம் உன் ஞாபகத்தினாலே! மூச்சுவிடுகிறேன் மிகுந்த பற்றுகொண்டதனாலே! முயற்சிக்கிறேன் மீண்டுவர இயலாமலே!
நீ என்னைக் காண வந்த நாட்கள் யாவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றுமில்லை என்றாலும் நாம் இருவரும் சந்தித்த நாட்கள் பற்றிச் சொல்ல துடிக்கும் என் மனதோ!
ஏதும் பேச முன் வரவில்லை
மெய்மறந்து நின்றேனடா!
உன் பார்வை முழுவதும் என் மீது இருந்ததனால்.....