Yadhumatra Peruveli - 8 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | யாதுமற்ற பெருவெளி - 8

Featured Books
Categories
Share

யாதுமற்ற பெருவெளி - 8

இரவு 11 மணி ஆகிவிட்டது சுஜா வீட்டை அடைய. யுவன் சுஜாவுக்காக ஏதோ சமைத்திருந்தான். எனக்கு பசிக்கல யுவன் கொஞ்சம் பால் இருந்தா சுட வைத்து குடுங்க என்றாள். என்னாச்சு சுஜா மீட்டிங் எப்படி போச்சு என்றான். மீட்டிங் நல்லாத்தான் போச்சு ஆனா அவள் முகத்தையே பார்த்தபடி இருந்தான் . சாரி யுவன் எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு காலைல பேசிக்கலாம் என்றாள் . அவன் மடியிலே படுத்தவாறு தூங்கி போனாள்.யுவன் அன்று சீக்கிரமே எழுந்து விட்டான்.சுஜா எழுந்திருக்க சற்று லேட் ஆகிவிட்டது. என்னை எழுப்பி இருக்கலாமே என்றாள் . நைட் நீயே ஏதோ டென்ஷன் ஆ இருந்தே அதான் கொஞ்ச நேரம் தூங்கட்டும் அப்படின்னு விட்டுட்டேன். லவ் யு யுவன் என்று அவனை அணைத்துக்கொண்டாள் . இன்னைக்கு ஆபீஸ் போகலையா மதியம் போல போறேன். இப்போ குளிக்க போறேன் என்றாள் . சுஜா மனதில் அலையலையாய் தீபன் பற்றிய சித்திரங்கள் ஓடின. குளித்து விட்டு வந்ததும் மேக்அப் செய்து கொண்டாள் . தன்னையே கண்ணாடியில் பார்த்து கொண்டாள். எனக்கு என்ன குறை. நான் அழகாய்த்தான் இருக்கிறேன் எனக்கு யுவன் மட்டும் போதும் என முணுமுணுத்தாள்.

யுவனும் சுஜாவும் சேர்ந்து டிபன் சாப்பிட்டார்கள். யுவன் நாம பக்கத்துல இருக்குற கோயிலுக்கு போயிட்டு வரலாமா . ம்ம் போகலாம் என்றான். அவள் மனதில் உள்ள சலனங்கள் எல்லாம் போய்விட வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். யுவன் தன் கூடவே கடைசிவரை சுஜா இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டான்.அது பேராசைதான் என்ற போதும் அவனுக்கு வேறு வழியில்லை. கோவில் விட்டு வெளியில் வந்த போது ஃபோன் வந்தது தீபனிடம் இருந்து. சுஜா சேஃப் ஆ ரீச் ஆகி விட்டீர்களா ஏன் ஃபோன் பண்ணவில்லை என்றான். நீங்கள்தான் தீப்தி கூட பிஸி ஆக இருந்தீர்களே என்றாள் . ஓ என்று சிரித்தான். எப்போது ஆபீஸ் வருவீர்கள். இன்று தீப்திக்கு பிறந்த நாள். அவள் உங்களுக்காக காத்திருக்கிறாள். சீக்கிரம் வாருங்கள் என்றான். என்ன சொல்கிறான் இவன் அவள் பர்த்டேவாயிருந்தால் எனக்கென்ன. சரி சார் வருகிறேன். அப்போதே அவனை பார்க்கவேண்டும் என தோன்றியது. ஏன் என்னை அவாய்ட் செய்தாய் என கேட்க வேண்டும் போல தோன்றியது.

மதியம் போல ஆபீஸ் கிளம்பி போனாள். அங்கே கேக் வெட்ட எல்லா ஏற்படும் செய்யப்பட்டு இருந்தது . தீப்தி இவளை விட அழகுதான். என்னாச்சு சுஜா என்னிடம் சொல்லாமல் போய் விட்டீர்களே. அப்படி எல்லாம் ஒன்றுமில்லை அவசரமாக போனதால் சொல்ல முடியாமல் போயிற்று. சுஜா சாரி நாங்கள் நேற்று அந்த அறையை பகிர்ந்து கொள்ளவில்லை ஏதோ ஒரு தவறு ரிசப்ஷனில் நடந்து விட்டது. தீபன் ரொம்ப கோவப்பட்டார். இப்போதுதான் சுஜா முகத்தில் புன்னகை தோன்றியது. சாரி நான் அதை பற்றி அதிகம் யோசிக்கவில்லை என்றாள் . ம் தீபன் உங்களை பற்றித்தான் அதிகம் பேசினார். சரி பேசியது போதும் கேக் வெட்டலாமா என்றான் தீபன். எல்லோரும் வாழ்த்து பாட கேக் வெட்டினாள் தீப்தி. தீபன் சுஜாவிடம் வந்து கோபம் தனிந்ததா என்றான். எனக்கு ஏன் உங்கள் மேல் கோவம் . ம் புரிகிறது என்று சொல்லிவிட்டு நகர்ந்தான். தீப்தீயை ஏர்போர்ட் வரை சென்று வழி அனுப்பி வைத்தார்கள் சுஜாவும் தீபனும் . என்ன எதுவுமே பேசாமல் வருகிறீர்கள் என்றான். என்ன பேசவேண்டும் என எதிரபார்க்கிறீர்கள் என்றாள் சுஜா. ம் என்னால் உங்கள் தவிப்பை சரி செய்ய முடியாததற்காக மன்னித்து விடுங்கள் என்றான்.

எவ்வளவு சுலபமாக தப்பா நினைத்து விட்டாள் . அதுவும் இஷ்டத்துக்கு கற்பனை செய்து விட்டாள் . நினைக்கும் போதே வெட்கமும் வந்தது.வீணாவுக்கு ஃபோன் செய்தாள். வீணா நானே உனக்கு ஃபோன் பண்ண வேண்டும் என்று நினைத்தேன் . சண்டே ஃபங்சன் இருக்கே நீ என்னடாவென்றால் ஒரு ஃபோன் பண்ண கூட இல்லை என்றாள். சரி கொஞ்சம் ஷாப்பிங் போக வேண்டும் நீ ஈவினிங் 6 மணி போல தயாராய் இரு நான் வந்து பிக்அப் செய்து கொள்கிறேன் என்றாள் . சரி வீணா. மாலை 6 மணிக்கு சொன்ன படி வந்து விட்டாள் வீணா. என்ன பாண்டிச்சேரி ட்ரிப் போனாயாமே யுவன் சொன்னான். ம் சதீஷ் எப்படி இருக்கிறார் ஃபோன் பண்ணினாரா என்னை விட அவர்தான் டென்ஷன் ஆக இருக்கிறார். உன்னை மாதிரி ஒருத்தி கிடைக்க அவர் கொஞ்சம் நெர்வஸ் ஆகத்தான் இருக்க வேண்டும் என்றாள் சுஜா. எப்படி இருக்கிறார் தீபன் ? அவருக்கென்ன எல்லாமே விளையாட்டுத்தான். ம் சுஜா உன்னிடம் நிறைய மாற்றம் தெரிகிறது என்றாள் . அப்படியா ? என்று விழிகள் விரிந்தாள் .சுஜாவும்,வீணாவும் சில உடைகளை பர்சேஸ் செய்தார்கள். ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிட்டார்கள்.


ஏன் யுவன் என்னிடம் ஏதாவது மாற்றம் தெரிகிறதா அப்படியொன்றும் இல்லையே என்றான் யுவன். சும்மா சொல்லாதீர்கள் யுவன் உண்மையை சொல்லுங்கள். ம் சொல்லவா நீ அழகாகிவிட்டாய் அது உனக்கொரு சுமையாய் தெரிகிறது. எல்லோரும் உன்னிடம் செலுத்தும் அன்பு உன்னிடம் பிரகாசிக்கிறது.ம் போதும் என்று அவனை அணைத்துக்கொண்டாள் . நாம் ஒரு குழந்தையை தத்தெடுத்து கொண்டால் என்ன என்றாள் . யோசித்து சொல்கிறேன் என்றான். நம் வாழ்வில் மாற்றம் தேவை என்றான் யுவன்.சுஜா ஒரு வேளை நமக்கென குழந்தை இருந்தால் தேவை இல்லாத சிந்தனைகள் வராது என நினைத்தாள். சண்டே வீணாவை பெண் பார்க்க சதீஷ் தன்னுடைய அப்ப அம்மாவோடு வந்திருந்தான். இது வெறும் ஃபார்மாலிட்டி தான். கூடவே தீபனும் வந்திருந்தான். அவன் அதிகம் பேசாமல் இருந்தான். வீணா குடும்பத்தார் நிச்சயம் செய்வதற்கான தேதியை குறித்தனர். எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம் . யுவன் தீபனிடம் பேசிக்கொண்டிருந்தான். என்ன யுவன் உங்களுக்கு பெங்களூர் செல்ல விருப்பமா என்றான். ஏன் சார் நான் சுஜாவுக்கு ப்ரமோஷன் குடுக்கலாம்னு யோசிக்கிறேன் . ரொம்ப சந்தோஷம் சார். எதுக்கும் நீங்க சுஜாகிட்ட பேசிட்டு சொல்லுங்க என்றான். சரி சார் .

விஷயத்தை கேள்விப்பட்டதும் முதலில் சந்தோஷப்பட்ட சுஜா அப்புறம் வேண்டாம் யுவன் நமக்கு சென்னையே போதும் . இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும் என்றாள் . நாம நினைக்கிறப்ப நமக்கு ப்ரமோஷன் கிடைக்காது என்றான். அதுவும் சரிதான் கொஞ்சம் டைம் குடுங்க நான் யோசிக்கிறேன் என்றாள் . தீபனிடம் இது பற்றி பேச வேண்டும் என நினைத்தாள். மதியம் லஞ்ச் பிரேக்கில் தீபனை சந்தித்தாள் . நான் என்ன தப்பு செய்தேன் என்ன திடீர்னு ட்ரான்ஸ்பர் பண்ண பார்க்கிறீர்களே என்றாள் . நீங்க ஒரு தப்பும் பண்ணல. உங்க நல்லதுக்குத்தான். ம் புரியுது.வீணாவிடம் பேசியபோது உனக்கு நல்லதுதான் தீபன் சொல்லியிருக்காரு பேசாம பெங்களூர் போ என்றாள் . தீப்தீயும் இந்த விஷயத்தை வரவேற்றாள். யுவன் சுஜாவை வற்புறுத்தவில்லை. சுஜா ஒரு முடிவெடுக்க முடியாமல் தவித்தாள் . அவளுடைய அப்ப அம்மாவும் அதுதான் சரி என்று சொன்னார்கள். சதீஷ் ஒரு சிறிய டின்னர் பார்ட்டிக்கு அவனுடைய வீட்டிற்கு அழைத்திருந்தான். வீணாவும், சுஜாவும் சென்றிருந்தார்கள். தீபன் வரவில்லை. இது பெரிய ஏமாற்றமாக இருந்தது சுஜாவுக்கு. என்னாச்சு ஏன் தீபன் வரவில்லை. அவனுக்கும் கொஞ்ச நாள் பெங்களூர் ஆபீஸ் போகலாம் என்று ஒரே யோசனை. அங்கே நிலைமை சரியில்லை என்றான் சதீஷ் .

யுவனிடம் தன் சம்மதத்தை தெரிவித்தாள் சுஜா. நாம பெங்களூர் போகலாம். ஆனா பிடிக்கலை அப்படின்னா உடனே சென்னை வந்துடனும் என்றாள் . எல்லாமே உன் விருப்பம்தான் என்றான். தீபனுக்கும் இதில் சந்தோஷம் தான். அடுத்த மாசம் ஜாயின் பண்ணுங்கள் என்றான் தீபன். எல்லா ஹெல்ப்பும் தீப்தி பண்ணுவாங்க என்றான். ரொம்ப தாங்க்ஸ் சார் . சுஜா ஒரு முக்கியமான விஷயம். எனக்கு உங்க மேல இருக்கிற நம்பிக்கைய காப்பத்துவீங்க அப்படீன்னு நம்புறேன். சென்னை வீட்டை காலி செய்வதற்கான ஏற்பாடுகளை யுவன் செய்தான். பெங்களூர் சென்று வீடு பார்த்து வைத்து விட்டு வந்தான். பெங்களூர் அடுத்த வாரம் நாம் இருவரும் போகிறோம். ஃப்ளைட் புக் பண்ணுங்க . நான் வந்து உங்களை அறிமுகபடுத்துவதுதான் சரியாக இருக்கும என்றான். யுவன் ஏர்போர்ட் வந்திருந்தான். அடுத்தடுத்த சீட் என்பதால் கொஞ்சம் சங்கடமாக இருந்தது சுஜாவுக்கு. சுஜா ஆர் யு ஓகே என்றான். எஸ் சார் என்றாள்.

பெங்களூர் ஆபீஸ் எளிமையாக இருந்தது. தீப்திதான் எல்லாமே. மார்கெட்டிங் ஹெட் ஆக சுஜாவை promote செய்திருந்தான். வெல்கம் டூ பெங்களூர் என்றாள் தீப்தி . எல்லோருக்கும் சுஜாவை அறிமுகப்படுத்தி வைத்தான் தீபன் . அன்று மாலையே சென்னை திரும்ப ஏற்பாடு செய்திருந்தான்.என்ன சுஜா பெங்களூர் ஆபீஸ் பிடித்திருக்கிறதா ?இங்கே யாரும் உன்னை தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்னை மாதிரி என்று சொல்லி சிரித்தான். சுஜாவுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.
நீங்கள் ஒண்ணும் கெட்டவரில்லை.அப்படியே இருந்தாலும் எனக்கு அதை பற்றி கவலை இல்லை என்றாள். ம்ம் சதீஷ் வீணா கல்யாணதுக்கு ஒன் வீக் முன்னாடியே வந்துடுங்க என்றான். யுவன் ஏர்போர்ட் வந்திருந்தான். எப்படி இருக்குது பெங்களூர் ஆபீஸ் ?என்றான் யுவன். யுவன் நான் நினைத்தது மாதிரி இல்லை நன்றாகவே இருந்தது . டின்னர் வெளியில் எங்காவது சாப்பிடலாம் என்றான். வீணாவையும் கூப்பிட்டு இருந்தான். சதீஷ் வந்திருந்தார். ப்ரமோஷன் கிடைத்ததற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். சுஜா மனதில் கவலைகள் இல்லை. ஆனால் தீபன் தன்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுத்திருப்பதை பற்றி யோசித்தாள் . பதிலுக்கு தன்னிடம் என்னதான் எதிர்பார்ப்பான்?இப்படியாக அவளது சிந்தனை நீண்டது.அதற்கான பதிலை காலம்தான் சொல்ல வேண்டும்.சுஜாவின் எதிர்காலம், யுவனின் எதிர்காலமும் தீபனின் அடுத்த அசைவில் இருந்தது.