Yadhumatra Peruveli - 11 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | யாதுமற்ற பெருவெளி - 11

Featured Books
Categories
Share

யாதுமற்ற பெருவெளி - 11

அந்த வார கடைசியில் யுவனும் சுஜாவும் பெங்களூர் சென்றனர் அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. பெங்களூர் அவர்களுக்கு சந்தோஷத்தையும் நிறைவையும் தர வேண்டுமென தீபன் வாழ்த்து அனுப்பியிருந்தான். தீப்தி சுஜாவுக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தாள். சுஜாவுக்கு படபடப்பு இருந்த போதும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து நடந்து கொண்டாள்.தீபன் அடுத்த வாரம் வந்து பார்ப்பதாக சொல்லியிருந்தான். புது இடம் புது வாழ்க்கை என சுஜாவின் வாழ்க்கையில் மாற்றங்கள் நிம்மதியைக் கொடுத்தன அது எவ்வளவு தூரம் நீடிக்குமென சுஜா நினைத்துக்கூட பார்க்கவில்லை அவருடைய காதல் நிலைக்குமா என்பதெல்லாம் அவள் யோசித்துக் கூட பார்க்கவில்லை. மறு புறம் யுவன் தன்னுடைய நீண்ட கால திட்டங்களை பற்றி யோசிக்காமல் சுஜாவுக்கு எது சந்தோஷமோ அதையே தனது சந்தோஷமாக கருதினான் . தீபன் வரும்போது அவனை வீட்டுக்கு அழைக்க வேண்டும் என சுஜா நினைத்திருந்தாள். யுவன் மறுப்பேதும் சொல்லவில்லை.
வீணா ஃபோன் பண்ணி இருந்தாள். புது இடம் எப்படி இருக்கிறது என விசாரித்தாள். சுஜாவும் புது இடம் தனக்கு பிடித்திருப்பதாகவும் சொன்னாள் தீபன் பெங்களூர் ஆபீஸ் வந்ததும் சுஜா இல்லாமல் சென்னை ஆபிஸ் போரடிப்பதாகவும் கூடிய சீக்கிரம் நிலைமை சரியானதும் தானும் பெங்களூர் வந்துவிடலாம் என நினைப்பதாகவும் சொன்னான்.தீபனுக்கு தன்னுடைய அடுத்த கட்ட நகர்வை சுஜாவை எப்படி நெருங்குவது என்று தெரியாமல் தவித்தான்.சுஜாவை நேரடியாகவே கேட்டுவிடலாம் என எண்ணினான். சுஜா நீங்கள் என் கூட ஏர்போர்ட் வரை வர முடியுமா எனக் கேட்டான் நிச்சயமாக வருகிறேன் சார் என்றாள். அவன் கிளம்பும் நேரம் வந்ததும் சுஜா எனக்கு எதையும் மறைத்துப் பேசத் தெரியாது அதனால் நேரடியாக கேட்கிறேன் உங்கள் விருப்பம் என்ன சுஜா? நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்றான். சுஜா ஒரு நிமிடம் யோசித்தாள். அவசரப்பட வேண்டாம் சார் எனக்கு உங்கள் மேல் காதல் இருக்கிறது அது உண்மை ஆனால் யுவன் என்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை எப்படி உடைப்பது என்று தெரியவில்லை என்றாள். ம் அதுவும் சரி தான் நான் வேண்டுமானால் யுவனிடம் பேசிப் பார்க்கட்டுமா அதெல்லாம் வேண்டாம் சார் நானே பேசுகிறேன் பேசிவிட்டு சொல்கிறேன் என்றாள். என்னுடைய காதலை புரிந்து கொண்டதற்கு நன்றி என்றான் தீபன்.சுஜா தன்னுடைய காதலை தீபனிடம் ஒப்புக்கொண்டாளே தவிர தன்னுடைய எதிர்காலம் பற்றி யோசிக்கவில்லை.யுவன் வீட்டை ஒழுங்குபடுத்தினான். தன்னுடைய. குறையை சுஜா பெரிதுபடுத்தாமல் இருப்பது அவளுடைய பெருந்தன்மை என எண்ணினான் .அன்று மதியம் அவளுக்காக சிறப்பு லஞ்ச் ஏற்பாடு செய்திருந்தான் .சுஜா எப்படி தான் தீபனை விரும்புவதைப் பற்றி யுவனிடம் சொல்வதென்று யோசித்தாள் . அதை தன்னால் செய்ய முடிந்தால் அது யுவனுக்கு செய்யும் துரோகமாகத்தான் இருக்கும் இன்று நினைத்தாள் .

இரவு 7 மணி போல தீபன் சுஜாவுக்கு ஃபோன் செய்தான் என்ன சுஜா என்ன முடிவு எடுத்தீர்கள் என்றான். உங்களோட காதல், யுவனுடைய அன்பு இரண்டுக்கும் இடையில் சிக்கி தவிக்கிறேன் நான். உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லையா சுஜா அப்படி ஒருநாளும் நான் நினைத்ததில்லை என்றாள் . சரி சுஜா உங்களுக்காக காத்திருக்கிறேன் எவ்வளவு நாள் ஆனாலும் நான் உங்களுக்காக காத்திருப்பேன் என்றான். சரி சுஜா ஃபோனை வைக்கட்டுமா வேற எதாவது பேசுங்களேன் என்றாள் அடுத்த வாரம் பாண்டிச்சேரி வருகிறீர்களா நான் கொஞ்சம் ப்ரீ தான் என்றான் நிச்சயம் வருகிறேன் என்றாள்.
யுவன் அடுத்த வாரம் பாண்டிச்சேரி வரை போகிறேன் உங்களுக்கு ஓகே தானே என்றாள் . சரி சுஜா .உங்களுக்கு என்ன வாங்கி வரட்டும் ?ஏதாவது உனக்கு பிடித்தது என்றான். இவனையா ஏமாற்ற போகிறோம் என்று கவலை அடைந்தாள் . என்னைக்கு இருந்தாலும் தெரியத்தான் போகிறது என்றும் யோசித்து பார்த்தாள் .

காதல்தான் எவ்வளவு பொல்லாதது அவளுக்கு அது புரிந்த போதும் தன்னை கட்டுப்படுத்த அவளுக்கு துணிச்சல் இல்லை. அவள் முழுவதும் தீபன் வசம் ஆகி விட்டாள்.ரயில்வே ஸ்டேஷன் போய் அவளை வரவேற்றான் தீபன் .எனக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள் சுஜா தேங்க்ஸ் என்றான். அவனுடைய கையை பிடித்துக்கொண்டாள்.எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொன்னாள்.தீபனுக்கென பிரத்யேக பங்களா இருந்தது. அந்த பங்களாவில் வேலைக்காரர்கள் இருந்தார்கள். இருக்கிற இடமே தெரியாத மாதிரி இருந்தார்கள். உனக்கு இந்த சிறிய மாளிகை பிடித்திருக்கிறதா சுஜா, ரொம்ப அருமையாக இருக்கிறது கடலை ஒட்டி என்றாள். நீ போய் குளித்து பிரெஷ் ஆகிவிட்டு வா என்றான். சரி . அவள் என்ன ஏதென்று யோசிப்பதற்குள் இவ்வளவு தூரம் வந்து விட்டாள்.யுவன் போன் பண்ணியிருந்தான். நான் கொஞ்சம் பிஸி ஆக இருப்பேன் அதனால் அடிக்கடி கால் பண்ணவேண்டாம் என்றாள். சரி சுஜா டேக் கேர் . காலை டிபனுக்கு பிறகு சுஜாவும், தீபனும் வெளியே கிளம்பினார்கள். எதாவது பிளான் பண்ணியிருக்கிறாயா சுஜா உனக்கு பிடித்த இடத்துக்கே போவோம் என்றான். அதெல்லாம் ஒன்றுமில்லை நான் உன் வசம் ஆகிவிட்டேன்.உன் விருப்பமே என் விருப்பம் என்றாள் .அந்த புத்தம் புது காலையில் அவர்கள் இளம் ஜோடிகளாக காரில் புறப்பட்டனர். அவள் அவன் வாங்கி கொடுத்த சாரியை உடுத்தியிருந்த விதத்தில் மிகுந்த கவர்ச்சியாய் இருந்தாள்.

அது ஒரு பூங்காவாக இருந்தது அதிகம் பேர் அங்கு இல்லை. தீபனும் அவளும் அருகருகே நெருங்கி அமரும்படியாக ஒரு பெஞ்ச் இருந்தது. அவள் மனம் எதை எதையோ சொல்லியது. திடீரென தீபனுக்கு அப்போவே அவளுக்கு தாலி கட்டி சுஜாவை தனக்கு சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்று தோன்றியது. நீ இந்த சாரியில் என்னவோ போல இருக்கிறாய் அதோடு என்னை ஆட்டிப்படைக்கிறாய் என்றான். அப்படியென்றால் ? எனக்குள் ஒரு புது உலகம் திறப்பதற்க்கான சகலமும் உன்னிடத்தில் இருக்கிறது என்றான். சுஜாவும் அவனும் நெருக்கமாக அந்த பெஞ்சில் அமர்ந்தார்கள். காற்று லேசாக வீசியது. சுஜா ?ஏன் எதுவுமே பேச மாட்டேன் என்கிறாய். அப்படியெல்லாம் நான் நினைத்து பேசாமல் இல்லை. அவள் தோள் மேல் கையை போட்டான் அது வழுக்கி கொண்டு போனது. அவன் தோளில் மயக்கத்துடன் சாய்ந்து கொண்டாள்.கண்களை மூடிக்கொண்டு தானும் அவனும் சேரப்போகும் நிமிஷங்கள் குறித்து யோசனை செய்தாள் .அப்போது ஏதோ ஒரு போன் கால் அவனுக்கு வந்தது. எடுத்து பேசியவன் சற்றே பதட்டம் அடைந்தான். சுஜா ரொம்ப நேரம் நாம் இங்கே இருக்க வேண்டாம் போய்விடலாம் என்றான். என்னாச்சு தீபன் ஏதாவது பிரச்சனையா என்றாள் . பிரச்னை ஒன்றும் இல்லை .சரி தீபன் நாம் போகலாம்.

தான் தீபன் மீது கொண்டிருப்பது வெறும் மயக்கமா என யோசனை தோன்றியது. அப்படியெல்லாம் இருக்காது என்று அவள் உள் மனம் சொல்லியது . அவளை திரும்ப பங்களாவில் விட்டு விட்டு எங்கேயோ போயிருந்தான். அவள் அந்த சிறிய மாளிகையில் தவிப்புடன் காத்திருக்க தொடங்கினாள்.மாலை ஆனதும் அவள் அவனுக்கு கவலையுடன் போன் செய்தாள். நீ கவலைப்படாதே சிறிய பிரச்னைதான் நான் 7 மணிக்கு வந்து விடுகிறேன் என்றான் .ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. அவள் அவனை பாஸ் ஆக மட்டுமே அறிவாள். அவனுடைய மறுபக்கம் இது குறித்து யோசிக்கும் போதே லேசான கலக்கம் உண்டாயிற்று. 7 மணிக்கு வந்து விட்டான். அவளுக்கென பூக்கள் அடங்கிய மலர்க்கொத்து ஒன்றை வாங்கி வந்திருந்தான். அவள் அவனை கட்டிக்கொண்டாள்.ஹேய் நீ பயப்படும்படி ஒன்றும் நடக்கவில்லை என்றான். டின்னர் சாப்பிட வெளியே போகலாம் நீ கிளம்பி இரு என்றான். தீபன் எதுவாக இருந்தாலும் நீ என்னிடம் வெளிப்படையாய் இருப்பாய் என நம்புகிறேன் என்றாள் .நிச்சயமாக என்றான்.

அது ஒரு மெழுவர்த்தி டின்னர் ஏற்பாடாக இருந்தது. ரொம்ப ரம்மியமாக இருந்தது. அவளை முதலில் அமரச்செய்தான். என் தேவதையே உனக்கு பிடித்ததை செய்வதற்காக இந்த பூதத்திற்கு ஆணையை இடுங்கள் என்றான் . அவள் மெதுவாக சிரித்தாள்.பூ பூத்து மலர்வதை போன்ற சிரிப்பது. அப்போது மறுபடியும் அவனுக்கு போன் வந்தது. அவன் சாரி சாரி என்று சொல்லிவிட்டு அதை அட்டென்ட் செய்தான் அவன் முகம் மாறியது. நீ சாப்பிட்டு கொண்டிரு இப்போது வந்து விடுகிறேன் என்று ஓடினான். ஒரு 15 நிமிடம் கழித்து வந்தவன்என்னால் என்னுடைய இந்த வெளித்தோற்றத்தை உதற முடியவில்லை என்றான். இட்ஸ் ஓகே என்றாள்.
நாம் இப்போது கடற்கரையின் அழகை காண முடியுமா இப்போதே போக வேணும் போல இருக்கிறது என்றாள் . சரி போகலாம் என்றான் . காரை பார்க் செய்து விட்டு இருவரும் மணல் வெளியில் நடந்தே கடலை ஒட்டி நடந்தார்கள். நீ என் தேவி என்றான். சொல்வதெல்லாம் பெரிதாக இருக்கிறது ஆனால் தவிக்க விட்டு விடுகிறீர்கள் என்றாள் . இனி நிச்சயம் அப்படி நடக்காது என்றான். அவள் அவன் கையை பிடித்தபடி கொஞ்ச தூரம் கடலுக்கு உள் போனாள். அவள் உடல் கடலலை பற்றி நனைந்தது. அவன் அவளை கெட்டியாக பிடித்து கொண்டான்.இருந்த போதும் அவன் மேல் சாய்ந்தாள்.அவளது மென்மையான பகுதிகள் அவன் மேல் சரிந்து விழுந்தது. நேரம் ஓடிக்கொண்டிருந்தது. நாம் போகலாமா என்று கேட்டான். ம் எனக்கு போவதற்கு மனமே இல்லை என்றாள். நீ விருப்பியபோதெல்லாம் நாம் இங்கே வருவோம் என்றான். நிச்சயமாக கண்டிப்பாக என்றான்.நனைந்த உடைகளுடன் அவளுடைய பின்புற அழகை ரசித்தவன் கண்களை வேறு திசையில் திருப்பிக்கொண்டான் . செல்லம் என்ன பார்க்குறீங்க ?என்று அவன் காதை திருகினாள்.அவன் சாரி என்றான், நான் உனக்குத்தான் உனக்கு மட்டும்தான் என்றாள் கிசுகிசுப்பாக காதில்.