Yadhumatra Peruveli - 9 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | யாதுமற்ற பெருவெளி - 9

Featured Books
Categories
Share

யாதுமற்ற பெருவெளி - 9

சுஜா பெங்களூர் போவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் இருந்தன. அவ்வப்போது வேண்டிய பொருட்களை ஷாப்பிங் செய்து வந்தாள் . யுவனும் அவளுக்கு வேண்டிய உதவிகள் செய்து வந்தான். திடீரென அவனுக்கு அந்த யோசனை தோன்றியது. ஏன் சுஜா நாம் தீபனை ஒரு லஞ்ச்க்கு invite பண்ணக்கூடாது என்றான். அதற்கென்ன கூப்பிட்டால் போச்சு என்றாள் . என்ன தீடீர்னு? நமக்கு எவ்வளவோ ஹெல்ப் பண்ணியிருக்காரு அதுதான் என்றான் யுவன். சரி வர சண்டே வர சொல்லுவோமா சரி . நீயே ஃபோன் பண்ணி கூப்பிடு அதுதான் சரியாக இருக்கும் என்றாள் சுஜா. சரி. தீபன் ஆச்சர்யத்தில் உறைந்து போனான். வருவதாக ஒப்புக்கொண்டான். அன்று எங்கேயும் போய் விடாதீர்கள் என்று யுவனை கேட்டுக்கொண்டாள். தீபனை அலுவலகத்தில் சந்தித்த போதும் அவள் அவனிடம் அவனுடைய வருகையை உறுதிபடுத்திக்கொண்டாள் . வீணாவிடம் சொல்லிய போது இது நல்ல விஷயம் என்றாள். தீபன் சரி என்று சொல்லிவிட்டானே தவிர அவன் மனமும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அவளை விரும்புவதாக அவன் சொன்ன பொழுதை விட இப்போது பல மடங்கு அவனுடைய இதயம் துடித்தது. சுஜா சுஜா என்று அவனுடைய உதடுகள் முணுமுணுத்தன.


மணி மதியம் 12 அளவில் வந்து விடுவதாக சொல்லி இருந்தான் தீபன். இவர்கள் எல்லாவற்றையும் சமைத்து தயாராய் வைத்திருந்தார்கள். தீபன் சரியாய் 12 மணிக்கு வந்து விட்டான். யுவன் ஏதோ வாங்க மறந்து விட்டதால் போய் வாங்கி வர போனான். என்ன யுவன் இப்படி பண்ணுற என்று கோவித்து கொண்டாள் . சரி சீக்கிரம் வந்து விடு என்றாள் . உட்காருங்க சார் என்றாள் சற்றே கூச்சத்துடன். வீடு மிகவும் நீட் ஆக இருக்கிறது என்றான் . எல்லாம் யுவன்தான் பார்த்து கொள்கிறார். அவள் அவன் அமர்ந்திருந்த சோபா எதிரே ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்தாள். கிச்சன் உள்ளே போய் ஜூஸ் எடுத்து வருகிறேன் என்றாள் . சரி நான் உங்கள் கிச்சன் பார்க்கலாமா என்றான். ம் அதில் என்ன இது வெறும் வாடகை வீடுதானே என்றாள் . ஜூஸ் போட்டு எடுத்து வந்தாள் அவள் பின்னாலே பூனைக்குட்டி போல நடந்து வந்தான். எனக்கு உங்களை விட யுவன் கேரக்டர்தான் பிடித்திருக்கிறது என்றான்.எவ்வளவு நம்பிக்கையுடன் உங்களை நடத்துகிறார் என்றான்.
ம் அப்போது என்னை உங்களுக்கு பிடிக்கவில்லையா என்று கேட்டு நாக்கை கடித்து கொண்டாள் . அதென்ன அப்படி கேட்டு விட்டீர்கள் நான் எதையும் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்பவன் அல்ல உங்களுக்கே தெரியும் என்றான்.

யுவன் வேர்த்து விறுவிறுத்து வந்தான். சாரி யுவன் உங்களை ரொம்பவும் தொந்தரவு செய்துவிட்டேன் போல என்றான் தீபன். அதெல்லாம் ஒன்றுமில்லை. வாருங்கள் சாப்பிடலாம் என்றான். நீங்களும் உட்காருங்கள் சுஜா என்றான். அதெல்லாம் வேண்டாம் நீங்கள் முதலில் சாப்பிடுங்கள். யுவனும் அவனும் ஏதோ பேசிக்கொண்டு சாப்பிட்டனர். தீபன் ஒரு கிப்ட் பாக்ஸ் ஒன்றை கொடுத்தான். இதெல்லாம் எதற்கு சார் . நீங்கள் என் வீட்டிற்கு வரவேண்டும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இது என்னுடைய சிறிய அன்பளிப்பு அவ்வளவுதான் என்றான். அவனை வழி அனுப்பி வைத்தார்கள் யுவனும், சுஜாவும்.ரொம்ப தாங்க்ஸ் நீண்ட நாள் கழித்து ஒரு உண்மையான ஹோம் லஞ்ச் என்றான் தீபன் . தீபன் விடை பெற்றுக்கொண்டான். சுஜாவுக்கு புதியதொரு இனம் புரியா உணர்வு ஏற்பட்டது. மேற்கொண்டு அதை ஆராய்ச்சி செய்யாமல் அந்த நாளின் அந்த பொழுதை உற்சாகத்துடன் அனுபவித்தாள் .மறுநாள் ஆபீஸ் போன போது புதியதொரு பார்வையுடன் தீபனை அணுகினாள் . அவனுக்கு அதிக வித்தியாசம் தெரியவில்லை.

தான் தீபனை விரும்ப தொடங்கி விட்டோமோ என அவளுக்குள் ஒரு கேள்வி இருந்து கொண்டே இருந்தது. பதில் அவளிடமே இருந்தது. ரகசியமாக இந்த உரையாடல் மனதுக்கும் உடலுக்கும் இடையே நடந்து கொண்டிருந்தது. அந்த வார கடைசியில் அவள் மட்டும் பாண்டிச்சேரி போக வேண்டியிருந்தது. நேரம் கிடைத்தால் கடற்கரைக்கு போக வேண்டும் என நினைத்தாள்.ஒரு ஏதும் அற்ற கடல் பரப்பு எந்த நேரமும் தன்னை உள்வாங்கும் என்ற அச்சமின்றி அதன் அலைகளோடு சிறு பிள்ளை போல விளையாட வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது . நேரம் கிடைக்கவில்லை. யுவனிடம் தன் வருத்தத்தை பகிர்ந்து கொண்டாள் . இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்றான் யுவன். அந்த கடல் தனக்காக காத்திருப்பதாக அவளுக்கு தோன்றியது. காத்திருப்பு இந்த வார்த்தை செய்யும் மாய சுழலில் தான் எவ்வாறு இருப்போம் என்பதே சுஜாவுக்கு புரியாத புதிராக இருந்தது. தீபன் ஃபோன் பண்ணியிருந்தான் என்ன வொர்க் எல்லாம் நல்லபடியாக முடிந்ததா என்றான். ரிப்போர்ட் அனுப்பி விட்டேன் என்றாள் . தாங்க்ஸ் சுஜா என்றான்.

அவளை ஒரு பக்குவப்பட்ட பெண்மணியாய் அவன் பார்க்கவில்லை. அவளது தவிப்பின் போது அவள் திசைமாறும் அழகை ரசிக்க விரும்பினான். அவளை கட்டாயப்படுத்தி காதல் மலரச்செய்ய தீபனுக்கு விருப்பமில்லை. அவளோடு நேரம் செலவு செய்ய என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராய் இருந்தான். யுவன் என்ன கடற்கரையில் என்ன பார்க்க விரும்பினாய் என்றான். ம்ம் நீ தான் என்னை எங்குமே அழைத்து போவதில்லையே என்றாள் . சாரி சுஜா நாம் போவோம் நிச்சயம். தாங்க்ஸ் யுவன் என்றாள். உனக்காக சில புத்தகங்கள் வாங்கினேன் என்று அவனிடம் நீட்டினாள். அவளை இழுத்து பிடித்து உதட்டில் முத்தமிட்டான். நீயே நான் படிக்க விரும்பும் முடிவில்லா புத்தகம் என்றான். ம்ம் நீ பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்றாள் . அவள் மிதந்து கொண்டிருந்தாள். அந்த கடல் வெளி அவள் மனதுக்குள் புகுந்து கொண்டு அவளை ஆக்கிரமிக்க தொடங்கி இருந்தது.

சுஜா நானும் உங்களோடு வருவதாய் இருந்தது லாஸ்ட் மினிட் மீட்டிங் இருந்ததால் வர முடியவில்லை என்றான் தீபன். எனக்கு இதெல்லாம் இப்போது பழகிவிட்டது. நான் தனியாகவே சிலவற்றை எதிர்கொள்வது எனக்கு பிடித்திருக்கிறது என்றாள் . நீங்கள் கடற்கரை போக விரும்பியதாக டிரைவர் சொன்னார். ம்ம் அது வந்து பரவாயில்லை அடுத்த முறை போவோம் என்றான். தாங்க்ஸ் சார் என்றாள். தீபன் அவள் மனம் திறந்து பேசுவாள் என எதிர்பார்த்தான். அவள் மனம் முழுக்க கண்களால் துளைத்து பார்த்தும் ஏதும் பிடிபடாமல் இருந்தது. பாஸ்கரிடம் இது பற்றி பேசலாம் என நினைத்தான். பாஸ்கர் எழுதிய இலக்கில்லா பயணங்களில் இது பற்றி நிறைய சொல்லப்பட்டு இருந்தது.யுவன் வீடு மாற்றத்துக்கான எல்லா வேலைகளையும் செய்து முடித்து விட்டான். இவனுக்கு அந்த புறா தங்கிய சிறிய அறையே போதும். சுஜாவுக்கு அப்படி இல்லை. அவள் வித விதமான செடிகளை வளர்க்க ஆர்வமாய் இருந்தாள். சுஜா இந்த வாரம் வீணாவோடு மூவி போவோமா என்றான். சரி என்றாள் . வீணா, சதீஷ், இருவரோடு இவர்கள் இருவரும் படம் பார்க்க போனார்கள். இண்டர்வெல் சமயத்தில் தீபனும் வந்து விட்டான். இவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.


படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே ஃபோன் கால் வந்தவுடன் வெளியே போய் விட்டான். படம் முக்கால்வாசி முடியும்போதே உள்ளே வந்தான். என்ன செய்ய சுஜா ஃபிரண்ட்ஸ் உடன் நிம்மதியாக ஒரு படம் பார்க்க முடியவில்லை என்றான். நீங்கள் நீங்களாய் இருக்கிறீர்கள் . எனக்கு அதில் குறை ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. இப்படியே பேசி மயக்குகிறீர்கள் என்று உள்ளுக்குள் நினைத்து கொண்டான் தீபன். எல்லோரும் சேர்ந்து டின்னர் சாப்பிட்டார்கள். சதீஷ் கொடுத்து வைத்தவன் வீணாவுடன் நன்கு பழகுகிறான். யுவனையும்,சுஜாவையும் வீட்டில் டிராப் செய்தான் தீபன். என்ன படம் பிடித்திருந்ததா என்றான் யுவன் . ம் என்னவோ ஃபிரண்ட்ஸ் கூட படம் பார்ப்பதே ஜாலி தான் என்றாள். அவள் முகம் சிறு வயது போட்டோ போல இருந்தது . மறுநாள் மதியம் 3 மணி போல தீபன் ஃபோன் செய்தான். என்ன பிஸி ஆகிய இருக்கிறீர்களா ? ஆமா சார். என் கூட ஒரு இடம் வரை போக வேண்டும் வர முடியுமா என்றான். ஒரு அரைமணி நேரம் ஆகும் என்றாள் . சரி நான் கீழே வெயிட் பண்ணுகிறேன் என்றான்.

என்னாச்சு சார் திடீர்னு என்னவோ எனக்குன்னு நேரம் கிடைக்கவே மாட்டேங்குது . இன்னைக்கு கிடைச்சுது . அதுதான் உங்களை கூப்பிட்டேன். இவளுக்கு ஒரு மாதிரி இருந்தது. டோன்ட் வொர்ரி சீக்கிரம் வந்து விடலாம் என்றான். பக்கத்துல ஸ்னோ தீம் பார்க் ஒண்ணு போட்டிருக்காங்க ஜஸ்ட் அரைமணி நேரம் போயிட்டு வந்து விடலாம் என்றான். தீம் பார்க் அதிக கூட்டமில்லை. ஒவ்வொரு பனிச்சிற்பத்தையும் ரசித்து பார்த்தான். அவள் கையை பிடித்து கொள்ள வேண்டும் போல இருந்தது. அவளுக்கோ தயக்கமும். வெட்கமும் சேர்ந்து உள்ளத்தை தாக்கி கொண்டிருந்தது. எண்ண சுஜா இடம் பிடித்திருக்கிறதா ?அதுக்கென்ன சார் இந்த மாதிரி இடத்துக்கு ரொமான்டிக் கப்புள்ஸ் ஆக வந்தாள் நன்றாக இருக்கும் என்றாள். சார் நீங்கள் சீக்கிரம் யாரையாவது லவ் பண்ணுங்கள். இங்கே பனிக்கட்டி வீசி மகிழலாம் என்றாள் . உங்களுக்கு காதால் உணர்வு வந்த போது எப்படி உணர்ந்தீர்கள் சுஜா. அதெல்லாம் கல்யாண பந்தத்தில் அடிபட்டுவிடும் சார் என்றாள் . சரி ஏதாவது சாப்பிடலாம் எனக்கு பசிக்கிறது என்றான். ஐஸ் கிரீம் வாங்கி இருவரும் சாப்பிட்டார்கள். சுஜா எனக்கு பொருத்தமான பெண்ணை நீங்கள்தான் பார்க்க வேண்டும் என்றான். நானா ? நீங்கள்தான். என்னால் முடியாது . அவள் முகம் வாடிவிட்டது. இதற்கே கோவப்பட்டால் எப்படி என்றான்.

சுஜாவை வீட்டில் விட்டான். யுவன் வந்திருக்கவில்லை. இவளுக்கு உள்ளுக்குள் தகித்து கொண்டிருந்தது. தீபனுக்கு பொருத்தமானவள் இல்லையா நான் . இப்படியாக அலை அவள் அந்த பெருவெளியின் கடல் அலை காலை நனைக்க தொடங்கியது.