Yadhumatra Peruveli - 14 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | யாதுமற்ற பெருவெளி - 14

Featured Books
Categories
Share

யாதுமற்ற பெருவெளி - 14

சுரேஷுக்கு போன் செய்தான் அவன் எடுக்கவில்லை . தீபன் லொகேஷனை நெருங்கி விட்டான். அவனுடைய மனதில் வெவ்வேறு எண்ணங்கள் ஓடின. அதில் தனக்கு ஏதும் ஆகிவிட்டால் சுஜாவின் நிலை என்ன என்பதும் சேர்ந்தே ஓடியது. சுரேஷ் தெருமுனையில் நிற்பது தெரிந்தது. வண்டியை ஓரமாக பார்க் செய்து விட்டு சுரேஷை நெருங்கினான். என்னடா ஆச்சு ஏன் போனை எடுக்கலை என்னவோ எனக்கு தனியா போக யோசனையா இருந்தது என்றான். சரி வா போகலாம் என்றான். சீக்கிரம் வீட்டுக்கு போக வேண்டும் சுஜா தனியாக இருப்பாள் என்றான் தீபன். கால்லிங் பெல் அடித்தவுடன் கதவு திறக்கப்பட்டது ஒரு பெண்மணிதான் திறந்தாள்.ரவி இல்லையா என்றான். அவர் இப்போதான் ஊர்லேயிருந்து வந்தாரு தூங்கிட்டு இருக்காரு எழுப்பவா என்றாள். வேண்டாம் வேண்டாம் நாங்க வந்துட்டு போனதா சொல்லுங்க இந்த கார்டை அவர்கிட்ட குடுங்க என்றான் சுரேஷ். சுரேஷ் ஏன்டா இப்படி பண்ணினே அவனை நாலு சாத்து சாத்துவேன்னு பார்த்தா ம் வேண்டாம்டா அவனை வார்ன் பண்ணி விட்டுடலாம் என்றான். சரிடா அப்போ நான் கிளம்புறேன் சாரி டா உன்னை வீணா டென்ஷன் பண்ணினத்துக்கு. அதெல்லாம் பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் இந்த பரதேசியோட பைல் உன்கிட்ட இருக்கட்டும் என்றான். சரி சுரேஷ்.

சுஜாவிடம் இருந்து போன் வந்தது எங்கே போன தீபன் எனக்கிங்கே தனியா இருக்க பயமா இருக்கு என்றாள். அதெல்லாம் ஒன்னும் பயப்படாதே இன்னும் அரைமணியிலே நான் அங்கு இருப்பேன் என்றான். சரி சீக்கிரம் வந்து சேர் என்றாள்.ரவியிடம் இருந்து எந்நேரமும் போன் அழைப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்தான் தீபன். சுஜா கொஞ்சம் பதட்டமாகவே இருந்தாள்.கொஞ்ச நேரத்தில் சுரேஷ் கிட்டேயிருந்து போன் வந்தது என்னடா என்ன ஆச்சு என்றான், யாரோ என்னை follow பண்ற மாதிரி இருக்கு நாம அவனை சாதாரணமா எடை போட்டுட்டோம்னு நினைக்கிறேன் என்றான். சரி நான் வரேன் நீ எங்கே இருக்க சொல்லு, இப்போ வேண்டாம் நான் சமாளிச்சுக்கிறேன் நீ சுஜாவை கவனமா பார்த்துக்க என்றான். ஓகே டா பை என்றான். வீட்டிற்கு வந்து சுஜாவை பார்த்த பிறகுதான் தீபனுக்கு நிம்மதியாய் இருந்தது.என்னாச்சு தீபன் என்ன நடக்குது இங்கே நீ ஏன் இவ்வளவு பதட்டமாய் இருக்கிறாய் என்றாள்.அதெல்லாம் ஒண்ணுமில்லை சொல்லு தீபன் என்னிடம் எதை மறைக்கிறாய். சரி சரி சொல்லுகிறேன் என்று நடந்ததை சொன்னான். இவ்ளோ நடந்திருக்கிறதா? யார் ரவி அந்த பைல் வாங்கி பார்த்தாள். இவனை உனக்கு தெரியுமா ?என்றான். இல்லை எனக்கு தெரியாது. நீ செய்ததுதான் சரி பேசாமல் அவனை வார்ன் செய்து விட்டுவிடு என்றாள்.

சுஜாவை இப்படியே தன் வீட்டில் வைத்திருக்க முடியாது என்பதை தீபன் உணர்ந்திருந்தான். யுவனுக்கு ஃபோன் செய்தான் . யுவன் என்ன வேண்டும் தீபன் அதுதான் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய் விட்டாயே என்றான். விவாகரத்து வேண்டும் யுவன் என்றான். ம் நீங்கள் எல்லா ஏற்படும் செய்யுங்கள் எங்கு வேண்டுமோ அங்கு கையெழுத்து போடுகிறேன் என்றான். ரொம்ப நன்றி யுவன் என்றான். நன்றி ம் அது நான்தான் உனக்கு சொல்லவேண்டும் என்றான் யுவன். சுஜா நீ ஆபீஸ் போ எல்லா வேலைகளும் அப்படியே இருக்கின்றன என்றான். சரி எனக்கும் ஒரு மாற்றம் ஆக இருக்கும் என்றாள் .ரவி ஃபோன் செய்யாதது நல்ல விஷயமாய் பட்டது சுஜாவுக்கும்,தீபனுக்கும். வக்கீலை பார்க்க சுஜாவை அழைத்துக்கொண்டு போனான். யுவனையும் அங்கு வர சொல்லியிருந்தான்.வக்கீல் யுவனுக்கு இருக்கும் மெடிக்கல் பிரச்னையை வைத்தே விவாகரத்து வாங்கிவிடலாம் என்று சொன்னார். யுவன் அதிகம் பேசவில்லை, வக்கீல் நீட்டிய பேப்பர்களில் எல்லாம் கையெழுத்து போட்டான். சுஜாவும் விவகாரத்துக்குரிய போர்மாலிட்டீஸ் எல்லாவற்றையும் முடித்தாள்.விவாகரத்து கிடைக்க மூன்று மாதங்கள் ஆகுமென வக்கீல் சொன்னார்.

இன்னும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டுமா என்று சுஜா சொன்னாள். ம் இவ்வளவு நாள் காத்திருந்தேன் இன்னும் கொஞ்ச நாட்கள் தானே என்று தீபன் சொன்னான். சுஜா அலுவலக வேலைகளில் பிஸி ஆனாள். சுரேஷுக்கு போன் பண்ணினான் தீபன். சுரேஷ் ரவி உனக்கு போன் பண்ணினானா என்றான்.இல்லையே நீ ஏன் அவனை பற்றியே கவலை படுகிறாய் என்றான். ம் அதுவும் சரிதான் அவனால் எதிர்காலத்தில் எந்த பிரச்னையும் வராதென உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றான். நிச்சயமாக எந்த பிரச்னையும் வராது. வீணா போன் பண்ணியிருந்தாள் சுஜாவுக்கு. சுஜா நீ அவசரப்பட்டு இருக்கக்கூடாது என்றாள். என்னால் தீபனை நிராகரிக்க முடியவில்லை வீணா என்றாள்.இப்போது நீ எங்கு இருக்கிறாய் சென்னை வந்து விட்டேன் என்றாள்.இப்போது நீ தீபன் கூட இருப்பதாக சதீஷ் சொன்னான். ஆமாம் விவாகரத்துக்கு 3 மாதம் டைம் எடுக்கும் . நீ யுவனை உதறும் முன் எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் என்றாள்.யுவன் பித்துபிடித்தவன் போல் சுற்றிக்கொண்டிருக்கிறான் .சாரி வீணா. என்னால் ஒன்றும் செய்யமுடியாத நிலைமை . சரி தீபனோடு சந்தோஷமாக இருக்கிறாயா. ம் அதோடு பாதுகாப்பாக இருக்கிறேன் என்றாள்.


தீபன் சுஜாவோடு வாழ எல்லா ஏற்பாடுகளையும் செய்தான் . ஹனிமூன் போக பிளான் செய்தான்.கல்யாணத்துக்கு பிறகு சுஜாவுக்கு சர்ப்ரைஸ் ஆக பல விஷயங்களை செய்ய ஏற்பாடும் செய்தான். நாட்கள் இனிமையாக கழிந்தன. ரவி விஷயத்தை மறந்தே போனான் தீபன். எங்காவது ட்ரிப் போகலாம் என்று சொன்னாள் சுஜா. ம் எங்கு போகலாம் என நீயே பிளான் பண்ணிவிட்டு சொல் என்றான். நாம குலுமணாலி போகலாம் என்றாள். சரி என்றான், அவளுக்கு குளிர் பிரதேசங்கள் என்றால் கொள்ளை பிரியம் . ஹோட்டல் புக் செய்வது, மற்ற பயண ஏற்பாடுகளை செய்தாள்.இந்த ட்ரிப் மறக்கமுடியாததாக இருக்க வேண்டும் என நினைத்தாள். யுவன் நினைவு வந்தது, அவனை இப்படி தவிக்கவிட்டு ட்ரிப் தேவைதானா என யோசித்தாள். இனி அவனில்லாமல் வாழ பழகி கொள்ள வேண்டும் என்றும் நினைத்தாள்.

குலுமணாலி ரம்மியமாக இருந்தது படகு சவாரி, பனிமலைகள் என நாட்களை தீபனோடு இன்பமாக கழித்தாள் சுஜா. அவர்கள் எதைப்பற்றியும் கவலை கொள்ளவில்லை.
சுரேஷ் போன் செய்திருந்தான். தீபன் நான் சந்தேகப்பட்டது சரிதான் ரவி, அவன் தனி ஆளில்லை அவர்கள் ஒரு gang ஆக செயல்படுகிறார்கள். நானும் நீயும் அவன் வீட்டுக்கு போன போது எதற்கும் இருக்கட்டும் என்று அவன் காரில் ஒரு ஒட்டு கேட்கும் கருவியை பதித்து வைத்தேன்.அவன் பேசுவதை பார்த்தால் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் போல தெரிகிறது. நீ ஜாக்கிரதையாக இரு என்றான். சரி சுரேஷ் இது சுஜாவுக்கு தெரிய வேண்டாம் என்றான் தீபன். சரி . சுஜாவுக்கு எதுவும் ஆபத்து ஏற்படாமல் இருக்க licensed துப்பாக்கி ஒன்றை வாங்கி வைத்திருந்தான் தீபன். சுஜாவும் தீபனும் நெருக்கமாக போட்டோ எடுத்துக்கொண்டார்கள். தீபன் சுஜாவை அளவுக்கு மீறி நேசித்தான் .பேசாமல் ரவியின் கதையை முடித்து விடலாமா என்று கூட யோசித்தான் .உல்லாச பயணத்தின் கடைசி நாள் சுஜா ஏன் சோர்வாக இருக்கிறாய் தீபன் உடம்பு சரியில்லையா என்று தொட்டு பார்த்தாள். இன்று நாம் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன, நீ இவ்வாறு இருந்தால்? டீ ஆர்டர் செய்யவா என்றாள். ம் சுஜா இன்றைக்கு நீ மட்டும் போய் வா நான் கொஞ்சம் அலுவலக வேலைகளை பார்க்கிறேன் என்றான். இல்லையென்றால் மதியம் இருவரும் சேர்ந்து போவோம் என்றான், ம் அதுவும் சரிதான் என்றாள். சுஜாவை கட்டிக்கொண்டு கொஞ்ச நேரம் தூங்கினான். லேப்டாப் திறந்து வைத்து ஆபீஸ் பைல்களை கொஞ்ச நேரம் பார்த்தான்.

சுஜாவும் அவளுடைய ஆபீஸ் பணிகளை பார்க்கத்தொடங்கினாள். மதியம் ஆனதும் சாப்பிட்டுவிட்டு இருவரும் பாராகிளைடிங் செல்லலாம் என முடிவு எடுத்தனர். தீபன் மனமெல்லாம் ரவி gang மீதே இருந்தது.இதை அறியாத சுஜா உள்ளமெல்லாம் மகிழ்வாக இருந்தாள். சாயங்காலம் போல ரூம் திரும்பினர். சுரேஷுக்கு போன் செய்து விசாரித்தான். மேற்கொண்டு இப்போது தகவல்கள் இல்லை . தகவல்கள் கிடைக்கும் போது நானே சொல்கிறேன் என்றான். இரவு 11 மணிக்கு பிளைட் புக் பண்ணியிருந்தான். இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கிறது நாம் நடந்து போய்விட்டு வருவோமா என்றாள் . சரி போகலாம் ஆனால் ரொம்ப தூரம் போக வேண்டாம் என்றான். சரி சரி என்று அவன் தோளில் கைபோட்டுக்கொண்டாள். இருவரும் கொஞ்ச தூரம் நடந்து சென்று காபி ஷாப் ஒன்றில் அமர்ந்தனர். சந்தேகப்படும்படி யாரும் இருக்கின்றனரா என்று பார்த்தபடி இருந்தான் தீபன். அப்படி யாரும் இல்லை என்றவுடன் நிம்மதி அடைந்தான். திடீரென என்ன நினைத்தானோ சுஜா நீ இங்கேயே இரு நான் ஹோட்டல் வரை போய் வருகிறேன் என்றான். என்னாச்சு தீபன் உனக்கொரு surprise இருக்கிறது என்றான், வேகவேகமாக ஹோட்டல் வந்து தன்னுடைய அறைக்கு வந்தான், சுவர்களை கவனமாக ஆராய்ந்தான். தன்னுடைய கையிலிருந்த கேமராக்கள் கண்டறியும் கருவி மூலம் ஏதாவது மறைமுக கேமரா அந்த அறையில் பாதிக்கப்பட்டிருக்கிறதா என சோதித்தான். பாத்ரூமிலும் சோதித்தான். ஏதுமில்லை என நிம்மதி அடைந்தான்.
சுஜாவுக்கு ஒரு மோதிரம் அணிவித்தான் தீபன் . இதற்க்கென்ன அவசரம் என்றாள் . அவசரம் இருக்கிறது என்றான். அதில் அவள் எங்கு போனாலும் அறியும் ஜி பி எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. சுஜாவும், தீபனும் 11 மணி பிளைட் பிடித்து சென்னை வந்து சேர்ந்தார்கள். அவர்கள் எதிர்பாராத செய்தி ஒன்று அவர்களை அடைய காத்திருந்தது . இன்ஸ்பெக்டரிடம் இருந்து போன் வந்தது நீங்கள் உடனே புறப்பட்டு ஸ்டேஷன் வாருங்கள் என்று சொன்னார்.