Yadhumatra Peruveli - 13 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | யாதுமற்ற பெருவெளி - 13

Featured Books
  • अनकही मोहब्बत - 7

    ‎‎ Part 7 -‎‎Simmi के पास अब बस कुछ ही दिन बचे थे शादी के।‎घ...

  • डायरी

    आज फिर एक बाऱ हाथों में पेन और और डायरी है, ऐसा नहीं की पहली...

  • उड़ान (3)

    उसने दस-बाय-दस का एक कमरा ले लिया। एक खिड़की, एक बल्ब, एक गैस...

  • मां... हमारे अस्तित्व की पहचान - 6

    चिड़िया दोबारा आती है और आसु के करीब से पंख फड़फड़ाते हुए नि...

  • पवित्र बहु - 2

    ⭐ ▲ चित्रा की पहली शादी — दर्द, अपमान और टूटनचित्रा की शादी...

Categories
Share

யாதுமற்ற பெருவெளி - 13

யாருடா நீ உனக்கென்ன வேணும் என்றான் தீபன். அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஒரு நிமிடம் சுஜாவை நினைத்துதான் கவலைப்பட்டானே தவிர அவனுடைய பதவி, அதிகாரம், அந்தஸ்து பற்றி அவன் கவலைப்படவில்லை. சுஜாதாவிடம் இது பற்றி சொல்லலாமா வேண்ண்டாமா என யோசித்தான். பிறகு வீணாய் அவள் குழம்ப வேண்டி வரும் என்பதால் அதை அப்படியே விட்டு விட முடிவு செய்தான். அந்த போன் நம்பர் யாருடையதென்று trace செய்ய அவனுடைய டிடெக்ட்டிவ் நண்பனுக்கு போன் செய்தான். என்னப்பா இது ஏதோ பிராங்க் ஆக கூட இருக்கலாம் இதற்கு போய் பயப்படுகிறாயே என்றான் சுரேஷ். ஹேய் இது எனக்காக இல்லை அவளுடைய பாதுகாப்புக்காக என்றான் தீபன். நிச்சயம் எனக்கு ஒரு வாரம் டைம் குடு என்றான். தாராளமா எடுத்துக்கொள்.சுரேஷ் நம்பகமானவன் தான் அதே சமயம் விளையாட்டுத்தனமானவன் . எப்படியோ அவன் யாரென்று கண்டுபிடிக்கத்தான் வேண்டும் . தீபன் சுஜாவுக்கு போன் செய்தான் சுஜா எங்கிருக்கிறாய் என்றான். ஆபீசில் தான் கொஞ்சம் பிஸி அதுதான் போன் பண்ண முடியவில்லை என்றாள். சரி நீ ப்ரீ ஆனதும் போன் பண்ணு என்றான். என்ன விஷயம் தீபன் ஏதும் பிரச்னையா ?சொல்லு தீபன் அதெல்லாம் ஒன்றுமில்லை நீ வேலையை பார் . ஓகே தீபன் பை என்றாள்.

தீபனுக்கு யுவன் மேல் ஒரு சந்தேகமும் இருந்தது ஆனால் இப்போது பேசினால் சுஜாவுக்கு கோவம் வரும். கொஞ்சம் ரெஸ்ட்லெஸ் ஆக இருந்தான். தனக்கென ஒரு நிலையான உறவு ஒரு பெண்ணிடம் தான் ஏற்பட முடியும் அது சுஜா கூடத்தான் என உறுதியாக இருந்தான். சுஜா வேலைகளில் மூழ்கி இருந்தாள். அவளுடைய இந்த புதிய பொறுப்பு அவளுக்கு சுமையாய் இருந்தாலும் தன்னை நம்பி தீபன் கொடுத்த பொறுப்பு என்பது அவளுக்கு உற்சாகத்தை கொடுத்தது. அடுத்த ட்ரிப் எப்போது போவோம் எங்கு போவோம் என அவள் மனம் தவித்தது, தீபன் தனக்கென பிரத்யேகமான உலகை செதுக்குவான் என நினைத்தாள்.யுவன் மனம் இருவரின் நெருக்கம் குறைந்ததற்கான காரணங்களை அலசி கொண்டிருந்தது. தன்னுடைய குறையை மறைக்க தான் அளவுக்கு அதிகமாக சிந்திக்கிறோமோ என யோசித்தான். சுஜாவிடமே கேட்டுவிடுவோம் என முடிவெடுத்தான். சுஜா காலையில் 8 மணிக்கு போனால் இரவு 8 மணிக்குத்தான் வீடு திரும்புகிறாள்.அவள் அயராது உழைக்கிறாள் . அதற்கு மேல் அவளை நிறுத்தி வைத்து கேள்வி கேட்பது சரியா என யோசித்தான். வீணா சொன்ன மாதிரி வெளிநாடு ட்ரிப் போகலாம் என முடிவு எடுத்தான்.

அவள் எப்போது வீடு திரும்புவாள் என தவித்திருந்தான்.அவள் வந்தவுடன் அவளை அணைத்துக்கொண்டான். ஒரே வியர்வையாய் இருக்கிறேன். குளித்து விட்டு வருகிறேன் அப்புறம் கொஞ்சலாம் என்றாள்.சரி சரி நீ குளித்து விட்டு வா நான் டின்னர் தயார் செய்கிறேன் என்றான். அவள் குளிக்கும் போது தீபனை நினைத்துக்கொண்டாள் . சிரிப்பு வந்தது. அவன் ஏன் எவ்வளவோ பேர் இருக்கும் போது என்னை தேர்ந்தெடுக்க வேண்டும் என எண்ணினாள். தன் மனதும் உடலும் ஒரே புள்ளியில் அவனுக்காக இயங்குவதை எண்ணி தன்னை தானே வியந்தாள்.என்ன surprise யுவன் நாம எங்க tour போறோம் என்றாள். அது எப்படி கரெக்ட் ஆ கண்டுபிடிச்ச ?என்றான். நீ எப்போ என்ன செய்வேன்னு கூட தெரியாமலா இருப்பேன். சிங்கப்பூர் பிளான் பண்ணியிருக்கேன் என்றான் ஒன் வீக் . நீ இப்போவே லீவு சொல்லிடு, அப்புறம் மாட்டேன்னு சொல்ல போறாங்க என்றான். ம் யுவன் இப்போதுதான் நாம் மாற்றல் ஆகி வந்திருக்கிறோம் அதுவும் ரொம்ப முக்கியமான பொறுப்பு தீபன் கொடுத்திருக்கிறார். இருந்தாலும் உனக்காக நான் அவரிடம் பேசி பார்க்கிறேன் என்றாள். சரி சுஜா எதுவாக இருந்தாலும் உன்னுடைய விருப்பம்தான் என்றான். சுஜா யுவன் மனதை நோகடிக்க விரும்பவில்லை.

சுஜா தீபனுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னாள். ஒரு வாரமெல்லாம் முடியாது வேண்டுமென்றால் மூன்று நாட்கள் லீவு எடுத்துக்கொள் என்றான். அதுக்கு போகாமலேயே இருக்கலாம் என்றாள். சரி நீ போய்விட்டு வா நான் மேனேஜ் செய்து கொள்கிறேன் என்றான்.ரொம்ப தேங்க்ஸ் தீபன் . உன்னை யாருக்கும் விட்டுக்கொடுக்க எனக்கு மனமில்லை அதனால் நீ ஒரு முடிவோடு திரும்பி வரவேண்டும் என்றான். சரி தீபன். சுரேஷுக்கு போன் செய்தான், என்ன ஆச்சு சுரேஷ் அவனை பற்றி ஏதாவது தெரிந்ததா ? அட்ரஸ் கண்டுபிடித்து விட்டேன் அவன் ஏதோ வெளியூர் போயிருப்பதாக சொல்கிறார்கள்.இன்னும் ஒரு வாரம் டைம் குடு தீபன் . சரி ஜாக்கிரதை எனக்கு எதுவாக இருந்தாலும் அப்டேட் பண்ணு என்றான்.சுஜா யுவனுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னாள் . ரொம்ப சந்தோஷம் சுஜா. நானே தீபனுக்கு ஃபோன் பண்ணி தாங்க்ஸ் சொல்கிறேன் என்றான். அதெல்லாம் வேண்டாம் அவர் ரொம்ப பிஸி என்றாள். சரி நீ சொன்னா சரிதான் என்றான். அவன் திட்டமிட்டபடி எல்லாம் நடக்கிறது என்பதில் யுவனுக்கு சந்தோஷம்.

நாளைக்கு நான் பெங்களூர் ஆபீஸ் வருகிறேன் என்றான் தீபன். என்ன திடீர்னு என்றாள் . நீ சிங்கப்பூர் போகிறாய் என்றவுடன் எனக்கு தூக்கம் இல்லை . ஜஸ்ட் ஒரு வாரம் தானே அதெல்லாம் ரொம்ப கஷ்டம் என்றான். நாளைக்கு உங்க வீட்டுக்கு வரேன் என்றான். ஓகே ஓகே என்றாள். யுவனிடம் பாஸ் நாளைக்கு வருகிறார் என்றாள் . சரி சுஜா. மறுநாள் மதியம் போல வந்திருந்தான். நான் சாப்பிட்டுவிட்டுத்தான் வந்தேன். யுவன் என்ஜாய் தி ட்ரிப் என்றான். யுவன் நான் கொஞ்சம் சுஜாவை கூப்பிட்டு கொண்டு போகட்டுமா ? ஆபீஸ் வேலை இருக்கிரது நைட் லேட் ஆகும் . நானே கொண்டு வந்து விட்டு விடுகிறேன் என்றான். சரி முக்கியமான வேலை என்றால் போய்த்தான் ஆக வேண்டும் .சுஜா எதுவும் சொல்லவில்லை. அவன் தங்கியிருந்த ஹோட்டல் சென்றார்கள். தீபன் அவளை அணைத்தான். அவள் விலகி கொண்டாள் . ஏதோ வேலை என்று சொன்னாயே தீபன் . ம்ம் நிச்சயம் இருக்கிறது என்று சில ஆபீஸ் விஷயங்களை பேசினான். யுவன் மனதில் தன்னை விட்டு சுஜா விலகி விடுவாளோ என்ற அச்சம் படர்ந்தது . சுஜாவை காலை 3 மணி போல வீட்டில் விட்டு சென்றான் தீபன். சுஜா வீட்டுக்கு வந்ததும் நமக்கு இந்த வேலை வேண்டாம் என்றான் யுவன். சுஜா இப்போது யுவன் கோவத்தில் இருப்பதால் எதுவும் பதில் சொல்ல வேண்டாமென அமைதி காத்தாள்.சுஜா குளித்து விட்டு உடை மாற்றி கொண்டு வந்து அவன் அருகில் படுத்தாள்.அவனை அணைத்துக்கொண்டாள். எல்லாம் நல்லதுக்குத்தான் என்றாள்.

சுஜாவும், யுவனும் சிங்கப்பூர் ட்ரிப் போவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தனர்.ஷாப்பிங் இருவரும் செய்தனர், சுஜா அந்த நாளைக்கு பிறகு பிறகு தீபனிடம் அதிகம் பேசவில்லை. அவள் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டாள். இதுதான் அவர்களுடைய கடைசி பயணமாக கூட இருக்கலாம் என்பதால் சுஜா யுவனுடன் மகிழ்ச்சியாக இருக்க நினைத்தாள்.அவர்கள் இருவரும் சிங்கப்பூர் புறப்பட்டனர். அந்த ஊரின் அழகை ரசித்தனர். யுவன் அவளிடம் நெருக்கமாக இருப்பதாக உணர்ந்தான். நாம் நிரந்தரமாக சிங்கப்பூர் வந்து விட்டால் என்ன என்றான். அது முடியுமா யுவன் ? நிச்சயமா என்றான். இன்னும் தூரமாக போக வேண்டும் என்றாள்,சிங்கப்பூரின் எல்லா இடங்களையும் சுற்றிபார்த்தனர். அவர்களுடைய நண்பர்களின் சிலரின் வீட்டுக்கும் போய் வந்தனர். சுற்றி சுற்றி சுஜா போட்டோ எடுத்துக்கொண்டாள். யுவன் நீ சொல்வது போல வேறு ஒரு நாட்டுக்கு நம்மால் போய் வேலை பார்க்க முடியுமா என்றாள்.நான் முதலில் போகிறேன் பிறகு உன்னை அழைத்து கொள்கிறேன் என்றான். . நான் வேலைக்கு அப்ளை செய்கிறேன் நீ கவலைப்படாதே என்றான். அதற்கு அவசியம் இருக்காது என்றாள்.ஏன் அப்படி சொல்கிறாய் என்றான். உனக்கு என் கூட வர விருப்பம் இல்லையா ? இல்லை வாழ விருப்பம் இல்லையா என்றான். ஹ்ம்ம் ஏன் அப்படி கேட்கிறாய் யுவன். உன்னிடம் இருக்கும் மாற்றங்கள் அப்படி என்னை கேட்க தூண்டியது சாரி என்றான்.

நாம் இப்போது இதை பற்றி இப்போது இங்கு பேச வேண்டுமா என்றாள்.நிச்சயமாக உன் மனம் ஒரு திசையில் இல்லாத போது நாம் அதை பற்றி பேசித்தான் ஆக வேண்டும் என்றான். நான் தீபனை விரும்புகிறேன் என்றாள்.ம் இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றான்.என்ன சொல்வதென்று தெரியவில்லை நான் அவருடன் வாழ தீர்மானித்து இருக்கிறேன் என்றாள்.ம் நீ இதை சொல்வதற்கு இத்தனை காலம் எடுத்து கொண்டிருக்க வேண்டியதில்லை. இந்த பயணம் இத்தனை நாளாய் வேஷம் போட்டு உன்னையே ஏமாற்றிக்கொண்டு ? போதும் யுவன். நான் சொல்ல விரும்புவதெல்லாம் இதுதான். என்னை மன்னித்துவிடுங்கள் என்றாள்.சரி நான் உனக்கு விரும்பியதை செய்கிறேன் இப்போது நான் என்ன செய்ய வேண்டும் விவாகரத்து அதுதானே நிச்சயம் தருகிறேன் என்றான். சுஜா அழுதாள்.அவளை ரூமில் விட்டுவிட்டு எங்கோ போய் சுற்றிவிட்டு குடித்து விட்டு அறைக்கு வந்தான். சுஜா ரூமில் இல்லை. சுஜாவை தேடினான். அவள் நம்பர் சுவிட்ச் ஆப் என்று வந்தது. இனி அவளை தேடுவதில் பயனில்லை என்ற போது தீபனிடம் இருந்து போன் வந்தது , நான் அவளை பிக்கப் செய்து கொண்டேன். சிரமத்துக்கு மன்னிக்கவும் என்றான். யுவன் இடிந்து போனான். அவனுடைய இந்த செய்கையை தன்னால் சுஜாவின் பொருட்டு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என நினைத்தான். சுஜாவை தன்னுடைய சென்னை வீட்டுக்கு அழைத்து சென்றான் தீபன் . எது நடக்க கூடாதோ அது நடந்து விட்டது. சாரி சுஜா என்றான் . நான் யுவனை அப்படியே விட்டு விட்டு வந்திருக்க கூடாது என்றாள். நான் அவரிடம் பேசுகிறேன் என்றான். வேண்டாம் இப்போது வேண்டாம் என்றாள். அப்போது சுரேஷிடம் இருந்து போன் வந்து விட்டது போனில் மிரட்டியவன் ஊரிலிருந்து வந்து விட்டான் நான் இப்போது அங்குதான் போகிறேன் நீயும் வா லொகேஷன் அனுப்புகிறேன் என்றான். லொகேஷன் 5 நிமிடத்தில் வந்துவிட்டது. சுஜாவிடம் ஏதும் சொல்லாமல் அங்கு காரில் விரையத்தொடங்கினான் .