கிஷோர் திலக்தான் யுவனை கொல்ல weapon வாங்கி கொடுத்ததை அறிகிறான்.அனால் யுவனை யார் கொன்றார் என்கிற விவரம் அறியவில்லை.அதே சமயம் மணி தன்னை கொல்ல போவதாக சதீஷ் சொன்னதாக வைஷ்ணவியிடம் சொல்கிறான். வைஷ்ணவி சதீஷிடம் பேசுகிறாள் கொஞ்சம் பொறுமையாக இரு சதீஷ். நாங்கள் குற்றவாளியை நெருங்கி விட்டோம் என்றாள். நான் சும்மாதான் மணியை மிரட்டினேன் வேறு ஏதாவது வீணா பற்றி தகவல் கிடைக்குமா என்று பார்த்தேன் என்றான். கிஷோர் மலர்விழியை கடத்தி தீபன் கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தங்க வைத்திருந்தான் அது சுஜாவுக்கு தெரியாது.வைஷ்ணவி சுஜா, தீபன் மற்றும் சுரேஷை மீட்டிங் ஒன்றிற்கு அழைத்திருந்தாள். எங்களுக்கு வேறு வழியில்லை சதீஷை நாங்கள் encounter செய்ய முடிவெடுத்திருக்கிறோம். இதை கேட்ட மூவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் வெளியில் வக்கீல்களும் பொதுமக்களும் மலர்விழியை கிஷோரின் பிடியில் இருந்து காப்பாற்ற போராட்டம் நடத்தினர்.தீபன் வைஷ்ணவியிடம் நான் சதீஷிடம் பேசுகிறேன் என்றான்.சிறப்பு அனுமதி பெற்று சிறையில் இருக்கும் சதீஷிடம் பேசினான் தீபன். நம்முடைய அடுத்த திட்டம் என்ன என்றான் தீபன். பிரதாப்புக்கு பாக்கி பணத்தை செட்டில் செய்து மணியை சிறைக்குள்ளேயே கொல்ல ஏற்பாடு செய்ய வேண்டியதுதான் என்றான். கிஷோர் தற்போது இருக்கும் சூழ்நிலையில் திலக்கை பற்றி சொன்னால் தீபன் தன்னை நம்ப மாட்டான் என்று அந்த விஷயத்தை மறைத்தான்.
சதீஷிடம் பேசியபடி ஜானின் சகோதரனுடன் பேசி பாக்கி பணத்தை செட்டில் செய்து மணியை பிரதாப் மூலம் கொல்ல ஏற்பாடு செய்தான். மணி கொலையில் சதீஷ் பங்கு பெறாதது போல தோற்றத்தை உண்டாக்கினான். கிஷோர் திலக்கிடம் பேசினான். மலர்விழியை விட்டுவிடும்படியும் தான் போலீசில் சரண்டர் ஆகிறேன் எனவும் தெரிவித்தான். நீ முதலில் சரண்டர் ஆகு பிறகு மலர்விழியை ரிலீஸ் செய்கிறேன் என்றான் கிஷோர். மணியை பிரதாப் சிறையில் வைத்து கொலை செய்தான் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியின் எல்லைக்கே போனாள் வைஷ்ணவி. ஏன் இப்படி செய்தாய் பிரதாப் என்றாள் வைஷ்ணவி. சதீஷ் இல்லையென்றால் என்னை கொன்று விடுவார் அதற்கு பயந்துதான் இவ்வாறு செய்தேன் என்றான் பிரதாப். சதீஷை வேறு சிறைக்கு மாற்றும் போது அவனை encounter செய்ய போலீஸ் முடிவெடுத்தது. சிறைக்கு போகும் வழியில் என்னை நீங்கள் கொன்று விட்டால் மலர்விழியும் உயிரோடு இருக்க மாட்டாள் என்றான் சதீஷ்.encounter செய்ய போவதற்கு சற்று முன்பாக திலக்கிடம் இருந்து வைஷ்ணவிக்கு போன் வந்தது தான் சரண்டர் அடைய விரும்புவதாக சொன்னான். போலீஸ் சதீஷின் encounter ரத்து செய்தது. மலர்விழியை கிஷோர் விடுவித்தான். போலீஸ் திலக்கை கைது செய்தது. தீப்தி இந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்தாள்.
தீபன் தீப்தியை சென்னைக்கு உடனே வர சொன்னான்.தீபன் தீப்திக்கு ஆறுதல் சொன்னான். தீப்தி மலர்விழியை சந்தித்தாள். எப்படியும் என் மகனை விடுவிப்பேன் என மலர்விழி சொன்னாள். சுரேஷ் தீபனிடம் பேசிக்கொண்டிருந்தான். தான் தான் சாரதாவை கொன்றதாகவும், அந்த ஆயுதத்தை குமார் வீட்டில் போட்டதாகவும் சொன்னான். சுஜாவுக்கும் இது தெரியும் என்றான். சுஜாவும் நானும் சேர்ந்துதான் இதை பிளான் பண்ணினோம் என்றான். இதை கேட்ட சுரேஷ் இதை ஏன் முன்பே சொல்லவில்லை என்றான். திலக் ஆயுதம் மட்டுமே வாங்கி கொடுத்திருக்கிறான். நாம் உடனடியாக அவனை சந்திக்க வேண்டும் யுவனை கொன்றவர்கள் யார் என்று அவனுக்குத்தான் தெரியும் என்றாள் சுஜா . திலக் வைஷ்ணவியால் விசாரிக்கப்பட்டான். நான் கத்தியை சாரதாவுக்கு கொடுத்தது உண்மை ஆனால் என்னிடம் இரண்டு கத்திகள் இருக்கவில்லை என்றான். பிரவீன் நீ ஆர்டர் போட்டது இரண்டு கத்திகள். மற்றொரு கத்தி எங்கே என்றாள் வைஷ்ணவி. நான் இன்னொரு கத்தி ஆர்டர் போட்டது மணியை தீர்த்து கட்ட ஆனால் அந்த திட்டத்தை நான் தள்ளிப்போட்டேன். எனக்கு வந்த கத்திகளில் ஒன்று மிஸ் ஆனது அது பற்றி கூரியர் நிறுவனத்துக்கு ஒரு கம்ப்ளைண்ட் ஒன்றும் கொடுத்தேன் என்றான்.
கூரியர் நிறுவன ஊழியரிடம் பேசியபோது அப்போது டெலிவரி செய்தவன் இப்போது வேலையில் இல்லை. அவன் குடித்துவிட்டு தகராறு செய்வதால் வேலையை விட்டு நீக்கி விட்டோம் என்றார்கள். அவன் பெயர் பிரவீன் சொன்னார்கள். அவனை உடனடியாக தேடும்படி போலீஸ் உத்தரவு போட்டது. அவனுடைய போட்டோ எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டது. அவனுடைய போட்டோவை பார்த்த தீபன் அதிர்ந்தான். பிரவீன் தன்னுடைய சம்யுக்தாவை அழைத்து சென்ற பிரவீன்தான் இந்த வேலையை செய்திருக்கிறான் என்று அறிந்தான். பிரவீனை போலீஸ் இரண்டு நாட்களில் கைது செய்தது. தீபன், சுரேஷ், சுஜா, தீபதி எல்லோரும் அவனை பார்த்தார்கள். சுரேஷ் மேலும் அதிர்ச்சிக்குள்ளானான். தீப்தியின் முன்னாள் காதலன்தான் இந்த பிரவீன்.
போலீஸ் விசாரணையை தொடர்ந்தது. தீப்தியிடம் போலீஸ் விசாரணை நடத்தியது. விசாரணையில் அவன் என் முன்னாள் காதலன் தான் ஆனால் ஏன் யுவனை கொன்றான் என்று புரியவில்லை என்றாள். பிரவீன் எதையுமே சொல்ல மறுத்தான். என்னை தூக்கில் போடுங்கள் என்று சொல்லி வந்தான். தீப்தியிடம் பேசவேண்டும் என சொன்னான். என்ன பிரவீன் என்னை காட்டிக்கொடுப்பாயா என்றாள் தீப்தி . உன்னை எப்படி காட்டிக்கொடுப்பேன் சாம் . சம்யுக்தா உனக்காக உயிரையும் கொடுப்பேன். உன் பிளாஸ்டிக் சர்ஜரி பற்றிய ரகசியம் எப்படியோ யுவனுக்கு தெரிந்து விட்டது அதனால் யுவனை கொன்றேன். ஆனால் அந்த வீணா உன்னை மிரட்டினாள் . அவளுக்கு கொடுக்க கடத்தல் நாடகம் ஆடி 10 லட்சம் ஏற்பாடு செய்தாய்.நீ தீபனோடு இருக்க தடையாக யார் வந்தாலும் அவர்களையும் கொல்லுவேன் என்றான், சம்யுக்தாவின் கண்கள் கலங்கின. பிரவீன் நான் உன்னை ஏமாற்றிவிட்டேன் என்றாள். எப்படியாவது உன்னை ஜாமீனில் எடுக்கிறேன் நீ வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்கிறேன் என்றாள்.
தீப்தி என்ற சம்யுக்தா வெளியே வந்தாள். அவன் யார் கொலை செய்ய சொன்னது என்பதை சொல்ல மறுக்கிறான் என்றாள். வைஷ்ணவி தீபன் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாள். தீப்தி பற்றி மேலும் விவரம் அறிய சுரேஷ் முனைந்தான். அப்போது அவள் படித்த காலேஜ் பற்றிய விவரங்களை அறிய அவள் காலேஜுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். அதே சமயம் பிரவீனை சந்தித்த தீபன் சம்யுக்தா எங்கே அவளுக்கு என்ன ஆனது என்றான். நீதான் அவளை மறந்துவிட்டு போய்விட்டாயே அவள் உன்னை மறக்கவில்லை என்றான் பிரவீன். நீ அவளை மறந்துவிட்டு சுஜா பின்னால் போய்விட்டாய். அவள் எங்கோ கண் காணாத தூரத்தில் இருந்து கொண்டு உன்னை பார்த்து கொண்டிருக்கிறாள் என்றான். சுரேஷ் வைஷ்ணவியிடம் சொல்லி தீப்தி எங்கிருந்தாள் தீபனை சந்திப்பதற்கு முன் என விசாரிக்க சொன்னாள்.
கோர்ட்டில் இருந்து சிறைக்கு செல்லும் வழியில் பிரவீன் தப்பித்து விட்டதாக செய்தி வந்தது. அவனுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தாள் சம்யுக்தா . நல்லவேளை நீ என்னை காப்பாற்றினாய் என்றான். அதே சமயம் சுரேஷ் சம்யுக்தாவின் அப்பா அம்மா மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. முதலில் தற்கொலை என்று சொல்லப்பட்டாலும் இப்போது அது கொலை என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது, அதை செய்ததும் பிரவீன் தான் என தெரிய வந்தது. இதை உடனே தீபனுக்கு சொன்னான் சுரேஷ். எனக்கு சம்யுக்தாவை உடனே பார்க்க வேண்டும் அவளை கண்டுபிடிக்க வேண்டும் என்றான், அது பற்றித்தான் நானும் விசாரித்து கொண்டிருக்கிறேன் என்றான். என்ன பிரவீன் நீ எனக்காக கொலையும் செய்வாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் என் அப்பா அம்மாவை கொல்லுவாய் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை என்றாள். நீ சாக வேண்டும் என்றாள் . நீ சொல்லித்தானே யுவனை கொன்றேன் என்றான். நீ என் அப்பா அம்மாவை கொன்றதை மறைத்தாய் அதோடு என்னையும் தீபனையும் பிரித்தாய். இவ்வளவுக்கும் காரணம் நீ உயிரோடு இருக்க வேண்டாம் என்று சுட்டாள் .
திலக் ஜாமீனில் வந்து விட்டான். அவனை எப்படியோ ஜாமீனில் கொண்டு வந்து விட்டார்கள் மலர்விழியும் தீபனும். திலக் சம்யுக்தாவை யாரென்று அறிந்திருக்கவில்லை. பிரவீனின் பிணம் கடற்கரையில் ஒதுங்கியது. எல்லாம் முடிந்தது என்று நினைக்கும் வேளையில் சுரேஷ் அந்த உண்மையை கண்டுபிடித்தான். சம்யுக்தாவுடைய பாஸ்போர்ட் விவரங்களை வைஷ்ணவியிடம் வாங்கி வைத்திருந்தான். அதில் போவதற்கு ஒரு முகம் திரும்ப வரும்போது தீப்தி என்ற பெயர் திருத்தம் இருப்பதை கண்டுபிடித்தான், உடனடியாக தீபனுக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்ல போனான். என்ன சம்யுக்தா கிடைத்து விட்டாளா என்றான். தீப்தி தான் சம்யுக்தா என்று சொல்ல வாயெடுக்குமுன் அவன் முதுகில் துப்பாக்கி வைக்கப்பட்டது. நீ ஒன்றும் உண்மையை சொல்ல வேண்டாம் என்று வைஷ்ணவி அவன் முதிகில் இருந்த துப்பாக்கி முனையை அழுத்தினாள் . அவன் திகைத்து போனான். எனக்கு சம்யுக்தாவை ஆரம்பத்தில் இருந்தே தெரியும் நீ காட்டிக்கொடுத்து புகழ் பெற வேண்டாம் என்றாள். சம்யுக்தா ஃபோன் பண்ணியிருந்தாள் . என்னாச்சு வைஷ்ணவி? அவன் ஏதாவது உளறி விட்டானா தீபனிடம். இல்லை அவன் கதையை முடித்து வீடு என்றாள் சம்யுக்தா. சரி என்று சொல்லி அடுத்த நிமிடம் டிரிக்கர் அழுத்தினாள் . குண்டு பாய்ந்து இறந்தான் சுரேஷ். தாங்க்ஸ் வைஷ்ணவி என்றாள் சம்யுக்தா. நான் தீபனுடன் இருப்பதை இனி யாரும் தடுக்க முடியாது என்றாள். வைஷ்ணவி சுரேஷ் மீது பழியை போட்டு என்கவுண்டர் செய்ததாக சொன்னாள் . சுஜா எல்லா பிரச்சனையும் முடிந்தது என்றாள். சுரேஷ் அநியாயமாய் நமக்காக உயிரை விட்டிருக்கிறான் என்றாள் சம்யுக்தா.
நிறைந்தது .. நன்றி ! மீண்டும் சந்திப்போம்.. வணக்கம்.