கொள்ளையடித்தவள் நீயடி

(0)
  • 12
  • 0
  • 561

இறைவன் நினைத்துவிட்டால்நீ எதையும் வெல்வாய்!வேகம் வேகம் வேகம் ரேஸ் கார்களின் வேகம் காற்றைக் கிழித்துக் கொண்டுப் பறந்தன.சுற்றி நிற்கும் மக்களின் கண்களுக்கு எந்த கார் முதலிடம் வரும் என்று புரியவில்லை. முதலில் வருவதை கணித்து அவர்கள் ஆரவாரம் செய்தால் இரண்டாவதாக வருவது அதனை முந்தி அவர்களின் கருத்தை பொய்யாக்கி வருகிறது.முதலில் வரும் காருக்காக ஒரு பக்கம்  பணம் கட்டிப் பந்தயம் வைத்துக் கொண்டிருந்தார்கள் சிலர்.அதில் ஒருவன்"மச்சான் ஒரு லட்ச்சம் பெட்றா"டேய் என்னடா வாங்குன சம்பளத்த அப்படியே இதுல எறக்குற.அப்புறம் பிச்சை எடுத்து தான் வீடு போயி சேரப் போற. என் கிட்ட மச்சி அஞ்சு கொடு பத்துக் கொடுனு வாய தொறந்த கொன்றுவேன் பாத்துக்கோ"டேய் பெட்டா இல்லயா"டேய் உன் நல்லதுக்கு சொன்னா.சரிடா பெட்டுடா" இரண்டாமவனும் ஒத்துக் கொள்ள"என்னைப் பார்த்தா பிச்சை எடுக்கப் போறேன்னு சொல்ற. பாருடா வெண்ண மவனே. நான் பெட்டு கட்டுனது யாரு மேலனு நெனச்ச"மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.கார்களின் வேகம்

1

கொள்ளையடித்தவள் நீயடி - 1

இறைவன் நினைத்துவிட்டால்நீ எதையும் வெல்வாய்!வேகம் வேகம் வேகம் ரேஸ் கார்களின் வேகம் காற்றைக் கிழித்துக் கொண்டுப் பறந்தன.சுற்றி நிற்கும் மக்களின் கண்களுக்கு எந்த கார் முதலிடம் என்று புரியவில்லை. முதலில் வருவதை கணித்து அவர்கள் ஆரவாரம் செய்தால் இரண்டாவதாக வருவது அதனை முந்தி அவர்களின் கருத்தை பொய்யாக்கி வருகிறது.முதலில் வரும் காருக்காக ஒரு பக்கம் பணம் கட்டிப் பந்தயம் வைத்துக் கொண்டிருந்தார்கள் சிலர்.அதில் ஒருவன் மச்சான் ஒரு லட்ச்சம் பெட்றா டேய் என்னடா வாங்குன சம்பளத்த அப்படியே இதுல எறக்குற.அப்புறம் பிச்சை எடுத்து தான் வீடு போயி சேரப் போற. என் கிட்ட மச்சி அஞ்சு கொடு பத்துக் கொடுனு வாய தொறந்த கொன்றுவேன் பாத்துக்கோ டேய் பெட்டா இல்லயா டேய் உன் நல்லதுக்கு சொன்னா.சரிடா பெட்டுடா இரண்டாமவனும் ஒத்துக் கொள்ள என்னைப் பார்த்தா பிச்சை எடுக்கப் போறேன்னு சொல்ற. பாருடா வெண்ண மவனே. நான் பெட்டு கட்டுனது யாரு மேலனு நெனச்ச மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.கார்களின் வேகம் ...Read More

2

கொள்ளையடித்தவள் நீயடி - 2

காக்க காக்க கனகவேல் காக்கநோக்க நோக்க நொடியில் நோக்கதாக்கத் தாக்கத் தடையறத் தாக்கபார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட..இறுக்கமாக மூடிய விழிகளின் ஓரத்தில் துளிர்த்த கண்ணீர் கன்னங்களில் ஓடிடும் முன்பே விழி மடல் திறந்து அதற்கு முட்டுக் கட்டை போட்டாள் ஐஸ்வர்ய நத்தினி. சில நேரங்களில் வாய் விட்டு கூற முடியாத பிரார்த்தனையை ஒரு துளி கண்ணீர் வார்த்தையாக வடித்து விடும். சொல்லிச் சொல்லி மரத்து போன விஷயம். சொல்வதற்கு அவளிடம் வார்த்தையே இல்லை. வார்த்தைகள் வற்றி போகும் போது கண்ணீர் அந்த இடத்தை நிரப்புவது இயல்பு தானே?"நர்மதா இன்னும் எவ்ளோ நேரம்டி வெயிட் பண்றது. உன் பொண்ணு என்ன கோவில் பூசாரியா? சாமி கும்பிட போனா ஒரு மணி நேரம், குளிக்கப் போனா ஒரு மணி நேரம், ஒருவேளை சொன்னா முடிஞ்சது.அன்னைக்கு நாள் பூரா அதையே செஞ்சிகிட்டு இருக்கிறது. சரியான அசமஞ்சம்.. பட்டுனு வர சொல்லுடி உன் பொண்ண" ஈஸ்வரன் ...Read More

3

கொள்ளையடித்தவள் நீயடி - 3

தந்தை பின்னால் பார்க்கும் கண்ணாடி வழியாக தன்னை பார்த்துக் கொண்டே இருப்பதை உணர்ந்தாலும் அவரின் பார்வையை லாவகமாக ஒதுக்கினாள் ஐஸ்வரிய நந்தினி.அவர் பாசத்தால் அவளை பார்க்கவில்லை. முகத்தில் இருக்கும் பருக்களை நகத்தால் கீறி கொண்டிருக்கிறாளோ என்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தார் ஈஸ்வரன்.ஐஸ்வரிய நந்தினி, அவளது முகம் முழுவதுமே பிக்மென்டேஷன் எனப்படும் சரும குறைபாடு. அதாவது சாதாரண முகப்பருவை காட்டிலும் அதிக வலியைத் தரக்கூடியது. அளவிலும் 1 சென்டிமீட்டர் இருக்கும். முகத்தில் ஆங்காங்கே என்றால் பிரச்சனை இல்லை.முகம் முழுவதுமே இப்படி ஒரு சென்டி மீட்டர் அளவு கொண்ட பெரிய பெரிய பருக்களால் நிறைந்திருக்க பாவம் அவளும் தான் என்ன செய்வாள்?நெற்றி, கன்னம்,நாசி, உதடை சுற்றி,ஏன் கழுத்தில் கூட சிலது இருக்கிறது. வெயிலில் சென்றாலோ வேர்க்கடலை அல்லது எண்ணெய் பதார்த்தங்களை விரும்பி உண்டாலோ இருக்கும் முகப்பரு பத்தாது என்று இன்னும் வந்து சேரும்.வலி பொருக்க முடியாமல் சிலதை அவளே நகத்தை வைத்து கீறி விடுவாள். ...Read More