Yadhumatra Peruveli - 15 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | யாதுமற்ற பெருவெளி - 15

Featured Books
  • जहाँ से खुद को पाया - 1

    Part .1 ‎‎गाँव की सुबह हमेशा की तरह शांत थी। हल्की धूप खेतों...

  • उड़ान (5)

    दिव्या की ट्रेन नई पोस्टिंग की ओर बढ़ रही थी। अगला जिला—एक छ...

  • The Great Gorila - 2

    जंगल अब पहले जैसा नहीं रहा था। जहाँ कभी राख और सन्नाटा था, व...

  • अधुरी खिताब - 52

    एपिसोड 52 — “हवेली का प्रेत और रक्षक रूह का जागना”(सीरीज़: अ...

  • Operation Mirror - 6

    मुंबई 2099 – डुप्लीकेट कमिश्नररात का समय। मरीन ड्राइव की पुर...

Categories
Share

யாதுமற்ற பெருவெளி - 15

என்னாச்சு இன்ஸ்பெக்டர் ஏதாவது பிரச்சனையா ? என்றான் தீபன். நீங்கள் நேரில் வாருங்கள் சொல்கிறேன் என்றார் இன்ஸ்பெக்டர். தீபன் யாரு போன்ல ஏன் உன் முகம் வெளுத்து போயிருக்கு என்றாள் சுஜா . அதெல்லாம் ஒண்ணுமில்லை ஸ்டேஷன் ல இருந்து இன்ஸ்பெக்டர் கூப்பிட்டாரு நான் போய் என்னன்னு பார்த்துட்டு வரேன் நீ கவனமா இரு என்றான். சுஜா ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தாள் பிறகு சமாளித்துக்கொண்டு சரி தீபன் நீ போயிட்டு வா என்றாள்.ஸ்டேஷன் போனவுடன் வாங்க தீபன் சார் யுவனை உங்களுக்கு தெரியுமா ? தெரியும் சார் எப்படி தெரியும். அவர் மனைவி என் ஆபீஸ்லதான் ஒர்க் பண்றாங்க. அவ்வளவுதானா ? இல்லை சுஜாவும் அவரும் விவாகரத்துக்கு அப்ளை பண்ணியிருக்காங்க .நானும் சுஜாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம் கல்யாணம் பண்ணிக்க போறோம் என்றான். ம் யுவன் உங்க கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சாரா ? அப்படி எதுவும் இல்லை அவர் டிவோர்ஸ் குடுக்க சம்மதிச்சாரு . இப்போ உங்களுக்கும் அவருக்கும் நேரடி பகை எதுவும் இல்லை அப்படித்தானே ?நிச்சயமா சார் . கடந்த ஒரு வாரமா எங்கிருந்தீங்க ? சுஜா கூட குலுமணாலி போயிருந்தேன்.

யுவன் இப்போது உயிரோடு இல்லை வாட் ? யுவன் செத்து விட்டாரா இது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாய் இருக்கிறது என்றான். யாரோ அவரை அவர் வீட்ல கத்தியால் குத்தி போட்டிருக்காங்க இப்போ எனக்கு உங்க மேலதான் சந்தேகமாக இருக்கு. நீங்க குலுமணாலில இருந்ததை நிரூபிக்க முடியுமா நிச்சயம் முடியும் சார்.இந்த கேஸ் ல உங்க ஒத்துழைப்பு தேவை யுவனை இன்னும் அடக்கம் செய்யவில்லை. அவருடைய மனைவி சுஜாவிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என நாங்கள் காத்திருக்கிறோம் என்றார். சரி சார் நாங்களே நல்லடக்கம் செயகிறோம் என்றான். நாங்கள் சுஜாவிடமும் விசாரிக்க விரும்புகிறோம் ஈவினிங் 4 மணிக்கு இங்கே அழைத்து வாருங்கள் என்றார். இப்போது நீங்கள் போகலாம் . சுரேஷுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னான். வீணாவிடமும், சதீஷிடமும் பேசினான். அவர்கள் யுவனின் நல்லடக்கத்துக்கு வருவதாக சொன்னார்கள். யுவன் இறந்ததை எப்படி சுஜாவிடம் சொல்வது என்று தயங்கினான். வேறு வழியில்லை சொல்லித்தான் ஆகா வேண்டும் . சுஜா ஏதோ லேப்டாப்பில் ஆபீஸ் விஷயமாக டைப் செய்து கொண்டிருந்தாள். சுஜா ஒரு முக்கியமான விஷயம் என்றான். நீ அதிர்ச்சி அடையாமல் நான் சொல்வதை பொறுமையாக கேள் என்றான். என்ன விஷயம் தீபன் நான் எதையும் தாங்கிகொள்வேன் சொல்லு என்றாள்.

யுவனை யாரோ கத்தியால் குத்தி கொன்று போட்டிருக்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள் தீபன் எப்போது நடந்தது . ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்று அழுதாள். இரண்டு நாட்கள் முன்னால் சம்பவம் நடந்திருக்கிறது. இன்ஸ்பெக்டரிடம் நான் பேசிவிட்டேன் தெளிவாக நாங்கள் குலுமணாலியில் இருந்ததாக சொல்லிவிட்டேன் என்றான். உன்னை 4 மணி போல ஸ்டேஷன் அழைத்து வர சொல்லி இருக்கிறார்கள். எந்த விசாரணையாக இருந்தாலும் நான் தயார். யுவனை ஏன் கொல்ல வேண்டும் தப்பு செய்தது நான்தானே என்றாள். போலீஸ் விசாரித்து கொண்டிருக்கிறார்கள் அவசரப்படவோ எமோஷனல் ஆகவோ வேண்டாம் சுஜா. சரி தீபன் யுவனை ஒரு முறையாவது கடைசியா பார்க்க வேண்டும் என்றாள். நிச்சயம் அவருடைய உடலை இன்னும் அடக்கம் செய்யவில்லை. யுவன் உடலை உன்னிடம் ஒப்படைக்கவே போலீஸ் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். சுஜா மனதில் யுவன் பற்றிய சிந்தனைகள் அலையலையாய் ஓடின. நான் கொஞ்சம் தனியாய் இருக்க வேண்டும் என்றாள். சரி சுஜா.நான் வீணாவிடமும். சதீஷிடமும் பேசினேன் அவர்களும் வருகிறார்கள் நல்லடக்கத்துக்கு என்றான்.

மாலை 4 மணிக்கு சுஜாவை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து போனான். அவர்கள் சுஜாவை விசாரித்தார்கள். தீபன் வெளியே இருந்தான். ஒரு ஒரு மணி நேரம் கழித்து சுஜா வெளியே வந்தாள். சுஜாவை கேள்வி கேட்டு தொந்தரவு செய்ய விரும்பவில்லை. யுவனை மார்ச்சுவரியில் இருந்து மயானம் கொண்டு வந்து நல்லடக்கம் செய்தார்கள். சுஜா யுவன் நெற்றியில் முத்தமிட்டாள். வீணாவும் அழுதாள்.யுவன் மரணம் சுஜா சற்றும் எதிர்பாராதது. போலீஸ் இந்த கேஸை எப்படி அணுகுவார்கள் என்று தெரியவில்லை. யுவனுக்கென யாருமில்லாதது ரொம்பவும் சிக்கலான கேஸாக இதை மாற்றி விட்டிருந்தது . போலீஸ் சிசி டிவி ஃபுடேஜ் போன்றவற்றை ஆராய்ந்தார்கள். பலனேதும் இல்லை. யுவனுக்கு தொழில் ரீதியாக எதிரிகள் இருந்தார்களா என்ற கோணத்திலும் போலீஸ் விசாரித்தார்கள்.சுரேஷை நேரில் சந்தித்து பேசினான் தீபன். ரவிக்கும் யுவன் கொலைக்கும் சம்பந்தம் இருக்கான்னு செக் பண்ணு சுரேஷ் . எப்படியும் அந்த ரவி gang இதுல இன்வோல்வ் ஆயிருப்பாங்கன்னு எனக்கு தோணுது என்றான் தீபன். கண்டிப்பா செக் பண்றேன். நான் நாளைக்கு யுவன் வீட்டுக்கு போறேன் அக்கம் பக்கம் விசாரிக்கிறேன் சந்தேகப்படுறமாதிரி யாராவது யுவன் வீட்டுக்கு வந்தங்களானு விசாரிக்கிறேன் . எப்படியும் இந்த கேச போலீஸ் சீக்கிரமா கிளோஸ் பண்ணத்தான் பார்ப்பாங்க.நாம அதுக்குள்ள இந்த கேஸ் ல உள்ள மர்மத்தை கண்டுபிடிக்கணும் சுரேஷ். ம் சுஜா எப்படியிருக்காங்க ? அவ இன்னும் யுவன் மரண அதிர்ச்சியில் இருந்து மீளலை என்றான்.

தீபன் அவனுடைய வக்கீலிடம் பேசினான், யுவன் இறந்தது ஒருவகையில் உங்கள் விவாகரத்து கேஸுக்கு சாதகமாக இருக்கலாம் ஆனால் யுவன் கொலை கேஸை போலீஸ் விசாரித்து முடிக்கும் வரை பொறுமை காப்பது நல்லது என்றார். சுஜாவை சமாதானப்படுத்தி பழைய நிலைமைக்கு கொண்டு வர சிறிது காலம் ஆகுமென்றே தீபனுக்கு தோன்றியது. சுரேஷ் யுவனின் அக்கம்பக்கத்து வீடுகளில் விசாரித்தான். சுவர் ஏறி குதித்து யுவன் வீட்டுக்குள் போனான். பொருட்கள் எல்லாம் சிதறிக்கிடந்தன. யுவன் போன்ற அப்பாவிக்கு இதெல்லாம் நடந்திருக்க வேண்டியதில்லை என சுரேஷ் நினைத்தான். யுவன் போன் போலீஸ் வசம் இருந்தது ஆகையால் அதில் இருந்து கிடைக்கும் தகவல் எதுவும் சுரேஷுக்கு கிடைக்கவில்லை.யுவனின் படுக்கை அறையில்தான் அவனை கத்தியால் குத்தியிருக்கிறார்கள். கத்தியால் குத்தியது ஒரு ஆணாகத்தான் இருக்க வேண்டுமென போலீஸ் ரிப்போர்ட் சொல்லியது. ஏதேதோ புத்தகங்கள் எங்கு பார்த்தாலும் கிடந்தன. வெறுமை சூழ வீட்டை விட்டு வெளியே வந்தான்.

போலீஸ் விசாரணை முடித்து யுவனுடைய லேப்டாப் ,போன். இறுதியாக யுவன் பயன்படுத்திய பொருட்களை சுஜாவிடம் ஒப்படைத்தனர். யுவனின் மொபைல் கால் ஹிஸ்டரியை டெலிகாம் நிறுவனத்தினரிடம் கேட்டு வாங்கியிருந்தான் சுரேஷ். சுஜா போனையும், லேப்டாப்பையும் சுரேஷிடம் ஒப்படைத்தாள். ஏதேதோ நினைவுக்குறிப்புகள் அத்தனையும் சுஜா பற்றியதாக இருந்தது. போன் லாஸ்ட் கால் சுஜாவுக்கு ட்ரை பண்ணியிருக்கிறான் ஆனால் லைன் கிடைக்கவில்லை .தீபன், சுஜா, சுரேஷ் மூவருமே அந்த ஹாலில் உட்கார்ந்து யுவனுடைய உடைமைகளை ஆராய்ந்து கொண்டிருந்தன. சுஜா யுவனுக்கு எதையாவது வீடியோ செய்யும் பழக்கம் இருந்ததா ?அப்படியெல்லாம் இல்லை என்றாள் சுஜா. தீபன் யுவன் கான்டக்ட்ஸ் நம்பர்களில் ரவி நம்பர் இருக்கிறதா என்று செக் பண்ணு .இரு ஒரு நிமிடம் பார்க்கிறேன் என்றான். கொஞ்ச நேரம் தேடி பார்த்தவன் இருக்கிறது ரவி என்று friends லிஸ்டில் இருக்கிறது என்றான். ரவியை பிடித்து விசாரிக்க வேண்டியதுதான் என்றான் தீபன். ரவிக்கு போன் போட்டான். ரவி போனை எடுத்து சுரேஷ் சார் தானே சொல்லுங்கள் என்றான். ரவி என்னை ஞாபகம் இருக்கா?நிச்சயமா உங்க கார்டு எங்கிட்ட இப்பவும் இருக்கு. உங்களுக்கு யுவனை தெரியுமா ? ஓ நல்லா தெரியுமே அநியாயமா அவனை கொன்னுட்டாங்க. நாம மீட் பண்ண முடியுமா என்றான் சுரேஷ். நிச்சயமா நான் கொஞ்சம் வேலையா இருக்கேன் ஈவினிங் 6 மணிக்கு வடபழனி கிங் பார் வந்துடுங்க என்றான். சரி வரேன் .

சரி நானும் வரேன் என்றான் தீபன். நான் ரவி சந்தேகப்படும்படியா எதுவும் செய்ய மாட்டேன் என்றான்.மாலை 6 மணிக்கெல்லாம் வடபழனி போய் சேர்ந்தான் சுரேஷ், தீபன் மற்றொரு காரில் வந்திருந்தான். மணி 6 30 அளவில்தான் ரவி வந்தான்.என்ன சார் என்ன விஷயம் எல்லா விஷயமும் போலீஸ் கிட்ட சொல்லிட்டேனே என்றான் ரவி. யுவன் கொஞ்ச நாளா அப்செட் ஆ இருந்தான். எங்கிட்ட துப்பாக்கி ஒன்னு கேட்டிருந்தான். எதுக்காக அப்படின்னு தெரியல. நானும் அவனும் சின்ன வயசில இருந்து friends . அப்போதான் எனக்கு அரசால் புரசலா தீபனும், சுஜாவும் பழகுறது தெரிஞ்சது. அவன் பாண்டிச்சேரி போயிருந்த போது தீபனுக்கு போன் போட்டு மிரட்டினேன் . யுவன் கிட்ட சொல்லலை. அப்புறம் கொஞ்ச நாள் கழித்து யுவன் என்கிட்ட சொன்னான். நான் ஏமாந்துட்டேன்னு அழுதான்.யுவனுக்கு எதிரிகள் யாரும் இல்லை சார். ஆனா சுஜா மேல உள்ள வன்மத்துல யுவனை கொன்னு அந்த பழியை போட நினைச்சிருக்கலாம். நான் அந்த gang விட்டு வெளியே வந்துட்டேன் சார். பொண்டாட்டி தொல்லை தாங்க முடியல அதனால அதில் இருந்து வெளியே வந்துட்டேன் என்றான் . சரி ரவி ஏதாவது தகவல் கிடைத்தால் எனக்கு சொல்லு என்றான். சரி சார்,தீபனிடம் ரவி சொன்னதை சொன்னான் சுரேஷ். இப்போ என்ன பண்ணுறது சுஜாவுக்கு எதிரிகள் யாராவது இருக்காங்களான்னு பார்க்கணும். அவளை பத்திரமா பாத்துக்கணும் என்றான் தீபன். ரவியை எவ்வளவு தூரம் நம்புவதென்று தெரியாததால் அமைதி காத்தான் சுரேஷ்.சுஜா தீபனிடம் என்னாச்சு தீபன் ரவியை மீட் பண்ண போனீங்களே என்றாள். நாம ரவியை தப்பா நினைச்சுட்டோம். அவன் மேல தப்பில்லை போல் தெரிகிறது என்றான். ம் அடுத்து என்ன என்பதற்குள் அந்த போன் கால் வந்தது .